சென்னை:''சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், 2016 டிச., 3ல், எய்ம்ஸ் மருத்துவர்களுடன், ஜெயலலிதா, 20 நிமிடம் பேசினார். மறுநாள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுஉள்ளது,'' என, சசிகலா வழக்கறிஞர், ராஜா செந்துார் பாண்டியன் தெரிவித்தார்.
ஜெ., மரணம் தொடர்பான விசாரணை கமிஷனில், சசி உறவினர்கள், கிருஷ்ணப்பிரியா, விவேக் மற்றும் ஜெ., உடலை, 'எம்பார்மிங்' செய்த, டாக்டர் சுதா சேஷய்யன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி,வெங்கட்ரமணன், அரசு மருத்துவர், சுவாமிநாதன் ஆகியோரிடம், நேற்று குறுக்கு விசாரணை நடந்தது.விசாரணைக்கு பின், ராஜா செந்துார் பாண்டியன் கூறியதாவது:எம்பார்மிங் செய்த டாக்டர், சுதா சேஷய்யன், '2016 டிச., 5 நள்ளிரவு, 11:30 மணிக்கு, 'எம்பார்மிங் செய்ய துவங்கினேன். என் ஆய்வு அடிப்படையில், 15 மணி நேரத்திற்கு முன், ஜெ.,க்கு இறப்பு நிகழ்ந்தது தெரிய வந்தது' என்றார். 'ஜெ., அடித்து கொலை செய்யப்பட்டார். இறந்த பின், மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்' என்ற குற்றச்சாட்டுகளை பொய்யாக்கும் வகையில், சுதா சேஷய்யன் சாட்சி அமைந்தது.
உபகரணமும் பயன்படாது
கடந்த, 2016 டிச., 4 மாலை 4:20 மணிக்கு, ஜெ.,க்கு மாரடைப்பு ஏற்பட்ட பின், அவரது உயிரை காப்பாற்ற, உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, 'எக்மோ' கருவி
பொருத்தப்பட்டது. டிச., 5ல், டில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்து, 'இனி
எவ்வித உபகரணமும் பயன்படாது; எவ்வித அசைவும் உடலில் இல்லை' என கூறியதன்
அடிப்படையில், முன்னாள் மத்திய அமைச்சர்,வெங்கையா நாயுடு, ஓ.பன்னீர்செல்வம், ராமமோகன ராவ், தம்பிதுரை மற்றும் முக்கிய அமைச்சர்கள் முன்னிலையில், முடிவு எடுக்கப்பட்டது; இது, சாட்சியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிச., 3ல், எய்ம்ஸ் மருத்துவர்கள், ஜெ.,வை பார்த்துள்ளனர். அப்போது, அவர்களுடன், ஜெயலலிதா, 20 நிமிடம், நாற்காலியில் அமர்ந்து பேசியுள்ளார். அன்றைய தினம், அவரின் இதயம் நன்றாக இருந்ததாக, மருத்துவர்கள் கையொப்பமிட்ட ஆவணத்தை, தாக்கல் செய்துஉள்ளோம்.'ஜெ., தாக்கப்பட்டு, பின், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாரா' என, ராமமோகன ராவிடம் கேட்டபோது, அதை முற்றிலும் மறுத்தார். மருத்துவமனையிலிருந்த ஜெ., அழைத்து, 'நான் இறந்து விட்டதாக விஷம செய்தி பரவுகிறது. அது, தவறு என, செய்தி வெளியிடுங்கள்' என கூறியதாக, ராவ் சாட்சி அளித்துள்ளார்.
எயம்ஸ் மருத்துவர்கள் விளக்கம்
ஆணி கட்டையால், ஜெயலலிதாவை அடித்துள்ளதாக, சிலர் கூறினர். 'உடலில் ஓட்டைஇருந்திருந்தால், நான் கொடுத்த திரவம், ஓட்டை வழியே வந்து விடும்' என, எம்பார்மிங் செய்த டாக்டர் கூறியுள்ளார். ஜெ.,க்கு மாரடைப்பு ஏற்பட்ட பின் நடந்த விளக்க கூட்டத்தில், அமைச்சர்கள் பங்கேற்றனர். அதேபோல, மறுநாள் நடந்த கூட்டத்தில், எயம்ஸ் மருத்துவர்கள் விளக்கம் அளித்தபோது, அமைச்சர் தங்கமணி உட்பட,
முக்கிய அமைச்சர்கள் உடனிருந்துள்ளனர், என்று அவர் கூறினார்.
ஐ.ஏ.எஸ்.,சிடம் இன்று விசாரணை!
ஜெ., முதல்வராக இருந்த போது, அவரது செயலராக இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராமலிங்கம் இன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளார். இவர் தற்போது கலை மற்றும் பண்பாட்டு இயக்கக ஆணையராக உள்ளார். நாளை ஜெ., உதவியாளர் பூங்குன்றன் ஆஜராக உள்ளார்.
இளவரசி மகள் மறுப்பு!
விசாரணைக்கு பின், இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா கூறுகையில், ''நான் கொடுத்த வாக்குமூலம் குறித்து சில விளக்கம் கேட்டனர்; அதற்கு பதில் அளித்தேன். 'சசிகலா, அதிகாரத்தில் தலையிடவில்லை' என, நான் பிரமாண பத்திரம் எதுவும் தாக்கல் செய்யவில்லை,'' என்றார்.அரசு டாக்டர் சுவாமிநாதன் கூறுகையில், ''ஜெ.,க்கு நேரடியாக வைத்தியம் செய்தீர்களா என கேட்டனர்; இல்லை என்றேன். ஐந்து நிமிடங்கள் விசாரணை நடந்தது. மருத்துவ குறிப்புகளில் சில கேள்விகள் கேட்டனர்; பதில் கூறினேன்,'' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (32)
Reply
Reply
Reply