அரசின் திட்டங்களுக்கு தடுப்பு...ஆளுங்கட்சி மீது ஆபீசர்ஸ் கடுப்பு!| Dinamalar

அரசின் திட்டங்களுக்கு தடுப்பு...ஆளுங்கட்சி மீது ஆபீசர்ஸ் கடுப்பு!

Added : ஏப் 17, 2018
Share
காய்ச்சலில் வீட்டில், 'ரெஸ்ட்' எடுத்துக் கொண்டிருந்த சித்ராவைப் பார்க்க வந்தாள் மித்ரா; காமெடி சேனல் பார்த்துக் கொண்டு, தனியாக சிரித்துக் கொண்டிருந்தாள் சித்ரா, அவளை வரவேற்றாள்.''வா வா மித்து... ரெண்டு நாளா பேசணும்னு நினைச்சிட்டு இருந்தேன். முடியலை... இப்ப தான் கொஞ்சம் பரவாயில்லை. கொஞ்சம், 'ரிலாக்ஸ்' ஆகலாமேன்னு வடிவேலு காமெடி பார்த்துட்டு இருக்கேன்,'' என்றாள்
 அரசின் திட்டங்களுக்கு தடுப்பு...ஆளுங்கட்சி மீது ஆபீசர்ஸ் கடுப்பு!

காய்ச்சலில் வீட்டில், 'ரெஸ்ட்' எடுத்துக் கொண்டிருந்த சித்ராவைப் பார்க்க வந்தாள் மித்ரா; காமெடி சேனல் பார்த்துக் கொண்டு, தனியாக சிரித்துக் கொண்டிருந்தாள் சித்ரா, அவளை வரவேற்றாள்.''வா வா மித்து... ரெண்டு நாளா பேசணும்னு நினைச்சிட்டு இருந்தேன். முடியலை... இப்ப தான் கொஞ்சம் பரவாயில்லை. கொஞ்சம், 'ரிலாக்ஸ்' ஆகலாமேன்னு வடிவேலு காமெடி பார்த்துட்டு இருக்கேன்,'' என்றாள் சித்ரா.''இப்பல்லாம் காமெடி சேனல்களை விட, நியூஸ் சேனல்கள் தான், பயங்கர காமெடியா இருக்கு,'' என்றாள் மித்ரா.'டிவி'யில், மனோபாலாவைப் பார்த்து, 'போலீசுக்கு உன்னைய தப்பா எடுத்திருக்காங்க' என்று வடிவேலு, கலாய்த்துக் கொண்டிருந்தார்.''மித்து... மனோபாலாவைப் பார்த்தா, செல்வபுரத்துல இருக்குற ஒரு 'இன்ஸ்' ஞாபகம் தான் வருது... ஆள் தோற்றத்துல மட்டுமில்லை; டூட்டியிலயும் அப்பிடித்தானாம்,'' என்று சிரித்தாள் சித்ரா.''கரெக்ட்க்கா... மூணு மாசத்துக்கு முன்னால, லேடி எஸ்.ஐ.,யை பொது மக்களுக்கு முன்னால, கெட்ட வார்த்தையில திட்டி, அழ வச்ச ஒரு அமைப்போட நிர்வாகி மேல அந்த லேடி எஸ்.ஐ., புகார் கொடுத்தாங்களே... அந்த ஆளை 'அரெஸ்ட்' பண்ண பயந்துட்டு, 'ஏபி' வாங்கச் சொல்லி அட்வைஸ் பண்ணிட்டு இருந்தாரு, இந்த இன்ஸ்., அந்த ஆளு முன் ஜாமின் வாங்கிட்டும் வந்துட்டாரு; கடைசி வரை கைது பண்ணவே இல்லை,'' என்றாள் மித்ரா.''போலீசாரை பொது இடத்துல திட்டுறது, அடிக்கிறதெல்லாம் இப்பதான் அதிசயமா நடக்குது. ஆலாந்துறையில, மணல் கடத்தலைத் தடுக்குறதுக்காகப் போன எஸ்.பி., சி.ஐ.டி., போலீசோட காரை, மணல் கடத்துன டிராக்டர் மோதி, மிரட்டுன கொடுமையும் நடந்திருக்கு. அந்த வண்டி, சாமியோட புள்ளைன்னு சொல்லிக்கிற டிஎம்கேகாரரோட வண்டியாம். அவரு தலைமையில தான், அந்த 'லிமிட்'ல மணல் கடத்தல், சேவல் கட்டு கனஜோரா நடக்குதாம்,'' என்றாள் சித்ரா.''வரவர 'ரூரல் போலீஸ்' பேரு, ரொம்பவே நாறிட்டு இருக்குக்கா... துடியலுார் 'லிமிட்'ல, கவுண்டம்பாளையத்துல பிரமாண்டமா ஒரு குடோனைப் பிடிச்சு, 'ஆன்லைன்' லாட்டரி நடத்துறாங்களாம். மாசத்துக்கு ஒரு கோடி ரூபா வருமானமாம்!'' என்றாள் மித்ரா.''மறுபடியும் லாட்டரியைக் கொண்டு வர்றதுக்கு, நம்ம கோயம்புத்துார் லாட்டரிக்காரர்ட்ட மறைமுக பேச்சு வார்த்தை நடக்குதுன்னு தினகரனே 'ட்வீட்' பண்ணிருக்காரே...ஒரு வேளை அதுக்காக, 'டிரையல்' எடுக்குறாங்களோ?'' என்றாள் சித்ரா.''இதுல கொடுமை என்ன தெரியுமா... இந்த லாட்டரி குடோனை நடத்துறதே, ஏரியா மக்கள் பிரதிநிதி தானாம்,'' என்றாள் மித்ரா.''நீ யாரைச் சொல்றேன்னு எனக்குத் தெரியுது... அவர் மேல தான் ஏகப்பட்ட 'கம்ப்ளைன்ட்' சொல்றாங்க... போலி சரக்கு தயாரிச்சு, விக்கிறதும் அவர் தான்னு சொல்றாங்க. ஊருக்கு வெளியில, ரகசியமா ஒரு இடத்துல, பேக்டரியே நடத்துறாராம். உளவுத்துறையில, இதைப் பத்தி ஒரு 'ரிப்போர்ட்'டும் கவர்மென்ட்டுக்குப் போயிருக்காம்,'' என்றாள் சித்ரா.''பழைய தொழிலையே புதுவிதமா செய்யுறாரோ... இந்த 'ரிப்போர்ட்'டை கவர்மென்ட்டுக்குப் போட்டதை விட, கவர்னருக்கு போட்டிருந்தா, நல்லா இருந்திருக்கும்,'' என்ற மித்ரா, ''கவுண்டம்பாளையம் ஜீவா நகர் ஆக்கிரமிப்புகளை எடுக்குறதுக்கு, நோட்டீஸ் கொடுத்து ரெண்டு வாரமாகியும் இன்னும் காலி பண்ணாம இருக்குறதுக்கும் இவர் தான் பின்னணின்னு சொல்றாங்க,'' என்றாள்.''ஐகோர்ட்ல 'கண்டெம்ட் பெட்டிஷன்' போட்ருக்காங்க... அதுக்கு இவரா போய், பதில் சொல்லப் போறாரு. ஆபீசர்கள் தான சொல்லணும்,'' என்று கேட்டாள் சித்ரா.''இப்பிடி எல்லா திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போடுறதே, ஆளுங்கட்சிக்காரங்களுக்கு முழு நேர வேலையாப் போச்சுன்னு ஆபீசர்ஸ் கடுப்பாகுறாங்க. உக்கடம் பாலத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டிட்டுப் போயிட்டாரு. ஆனா, வேலைய ஆரம்பிக்க முடியலை. பழக்கடைகள் இருக்குற கட்டடத்தை இடிச்சா மட்டும் தான், வேலைய ஆரம்பிக்க முடியும். அவுங்களுக்கு மாற்று இடம் கொடுத்துட்டு, இடிக்கச் சொல்லி, ஆளுங்கட்சியில இருந்து பிரஷராம்!'' என்றாள் மித்ரா.சித்ராவின் அம்மா, மித்ராவை வரவேற்று, பிஸ்கட், டீ கொடுத்தார். டீ குடித்துக் கொண்டே சித்ரா தொடர்ந்தாள்...''மித்து... எஸ்எஸ்ஏ உதவி திட்ட அலுவலர், கண்காணிப்பாளருக்கு எதிரா, ஆசிரியர் பயிற்றுனர்களெல்லாம் உள்ளிருப்புப்போராட்டம் நடத்துனாங்களே... இப்போ, அவுங்களைக் கண்டிச்சு அலுவலகப் பணியாளர் சங்கத்துக்காரங்க போராட்டம் நடத்துறாங்களாம். ரெண்டு தரப்பு மோதலும், உச்சமாயிட்டு இருக்கு... இதைப் பேசி, சமாதானப்படுத்த வேண்டிய பொறுப்புல இருக்குற அய்யாவோட அண்ணன், 'எனக்கென்ன'ன்னு கண்டுக்காம இருக்காராம்,'' என்றாள்.''இங்க மட்டுமா மோதல்... கார்ப்பரேஷன்ல அதை விட நாறுது... பொறியியல் ஞானமே இல்லாத இன்ஜினியரை, பிலிப்பைன்ஸ்ல நடக்குற முக்கியமான கான்பரன்ஸ்க்கு அனுப்பிட்டாங்கன்னு, எதிர் கோஷ்டி இன்ஜினியர்ஸ் குமுறி வெடிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.''சி.எம்.ஏ.,வை சிறப்பா கவனிச்சு, பதவி உயர்வு, 'பாரின் டிரிப்'ன்னு அனுபவிக்கிறாரு... சாதாரண 'பிட்டரா' வேலைக்குச் சேர்ந்து, இந்த அளவுக்கு வளர்ந்திருக்கார்ன்னா...அவரோட திறமை சாதாரணமானதா?'' என்றாள் சித்ரா.''ஒரு விஷயம்தான்க்கா எனக்குப் புரியவே இல்லை... இவருக்கும், ஆளுங்கட்சியில பயங்கர 'சப்போர்ட்' இருக்கு... இவருக்கு எதிரான 'குப்பை' இன்ஜினியருக்கும் ஆளுங்கட்சி ஆதரவு பலமா இருக்கு. ரெண்டு பேரும் சம்பாதிக்கிறதுக்கு நல்லா உதவுறதுல ஒரே மாதிரி இருப்பாங்களோ?'' என்றாள் மித்ரா.''நம்ம 'துாத்துக்குடி ரிடர்ன்' இன்ஜினியரு, புதுசா சி.இ.,பொறுப்புக்கு வந்த பிறகு, எல்லா இன்ஜினியர்களையும் கூப்பிட்டு, 'யார் யாரு என்னென்ன வேலை பாக்குறீங்க'ன்னு விசாரிச்சாராம். இவரையாவது, இந்தப் பதவியில விட்டு வைப்பாங்களா?'' என்று கேட்டாள் சித்ரா.''அது நிச்சயமில்லை... கார்ப்பரேஷன்ல வேலை பாக்குற லேடி ஆபீசர்கள் தான், பதவிக்காக நிறைய கேஸ் போடுறாங்க... உதவி கமிஷனரா இருந்து, நிர்வாக அலுவலரா பதவி இறக்கப்பட்ட 'மோகன'மான லேடி ஆபீசர், 'மாஸ் செகரட்டரி' மேலயே கேஸ் போட்டாங்க. இப்போ, அவுங்கள்ட்ட இருந்து, அந்தப் பதவியையும் பறிச்சு, காத்திருப்போர் பட்டியல்ல உட்கார வச்சுட்டாங்க. இப்போ, உட்கார ஒரு 'சீட்' கூட இல்லாம அல்லாடுறாங்க,'' என்றாள் மித்ரா.வெளியில் ஆம்புலன்ஸ் சத்தம், ஒரு நிமிடம் பேச்சை நிறுத்தியது.''மித்து... நம்ம ஜி.எச்.,ல தன்னார்வ அமைப்புகள் வாங்கிக் கொடுத்த ஆம்புனல்ஸ்கள் பத்து, பதினைஞ்சு வரிசையா நிக்குது. ஆனா, டிரைவர்கள் தான் ஒருத்தரும் இல்லை. இருக்க வேண்டிய 11 டிரைவர்கள்ல மூணு பேரு தான் இருக்காங்க. அதுல ஒருத்தரு, டீனுக்கு டிரைவராப் போயிர்றாரு. ரெண்டு பேர் தான், 'டூட்டி' பாக்குறாங்க. அதுலயும் நைட் பாக்குறவரு, சாயங்காலம் அஞ்சு மணிக்கு வந்தா, மறுநாள் காலையில எட்டு மணிக்குதான் போக முடியும்தாம்,'' என்றாள் சித்ரா.''இனிமே யாரும் ஆம்புலன்ஸ் தராம, டிரைவர்களை தானம் பண்ணுனா நல்லது,'' என்ற மித்ரா, ''அக்கா... டிராமா வார்டுல, காசு பறிக்கிறது ரொம்ப அதிகமாயிருச்சு. வெளியூர்ல இருந்து யாராவது வந்துட்டா, 200ல இருந்து 500 ரூபா வரைக்கும் பறிச்சிர்றாங்க. ஏழைங்க பாடு, பெரும்பாடா இருக்கு!'' என்றாள்.''ஜி.எச்.,ல கார் பார்க்கிங் பிரச்னை, ரொம்பப் பெருசாயிட்டே இருக்குது. அதுக்கு என்ன செய்யப் போறாங்கன்னே தெரியலை,'' என்றாள் சித்ரா.''காரைப் பத்திப் பேசவும், விஜிலென்ஸ்ல மாட்டுன டிரான்ஸ்போர்ட் ஜே.சி., ஞாபகம் வந்துச்சு...அவரோட 'புரோக்கர் நண்பர்', இப்போ மறுபடியும் வசூலை ஆரம்பிச்சிட்டாராம்,'' என்றாள் மித்ரா.''அங்க மட்டுமா வசூல் நடக்குது... நம்ம ஊர்ல மூணு லட்சம் செட் டாப் பாக்ஸ் தர வேண்டியிருக்காம். ஆனா, ஒரு பெட்டியும் வரலையாம்...தனியார் செட் டாப் பாக்ஸ் விக்கிறதுக்காக, 'லேட்' பண்றாங்களாம். கேபிள் தாசில்தாருக்கு வசூல் கொட்டுதாம்!'' என்றாள் சித்ரா.''அக்கா... முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்துட்டேன்... நம்மூரு எம்.எல்.ஏ., ஒருத்தரு, புதுசா பெட்ரோல் பங்க் வாங்கிருக்காரு. அங்க இருந்த பழைய ஆளுகளை எல்லாம் வீட்டுக்கு அனுப்பிட்டாராம், அவரோட பையன். அதைவிட முக்கியமான விஷயம்... அந்த எம்.எல்.ஏ., அணி மாறி, தொப்பி போடுறதுக்கு தயாராயிட்டாராம். அதுக்காக, '20 சி' வரைக்கும் பேரம் நடக்குதாம்,'' என்றாள் மித்ரா.அலைபேசி அழைப்பு வரவே, அதை எடுத்துப் பேசினாள் சித்ரா; அவசரம் என்று கைகாட்டி விட்டு, வண்டியை எடுத்தாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X