'மனு கொடுத்தாங்க நம்பி... பேர தட்டிட்டாரு எம்.பி.,!'

Added : ஏப் 17, 2018
Advertisement
தமிழ்ப்புத்தாண்டுக்கு வாங்கிய பழ வகைகளை, நறுக்கி கொண்டிருந்தாள் சித்ரா. வீட்டுக்கு வெளியே வண்டி சத்தம் கேட்கவே, கேட்டுக்கு வந்து பார்த்ததில், மித்ரா, வேர்வையுடன், ெஹல்மெட்டை கழற்றியவாறு உள்ளே வந்தாள்.''அடடே.. வா, மித்து. இன்னைக்கு வெயில் ஜாஸ்திதான். ரிலாக்ஸாக உட்காரு. ஜூஸ் போட்டு கொண்டு வர்றேன்,'' என்று சித்ரா சொல்லி விட்டு உள்ளே சென்றாள். பின் தொடர்ந்த மித்ரா,
 'மனு கொடுத்தாங்க நம்பி... பேர தட்டிட்டாரு எம்.பி.,!'

தமிழ்ப்புத்தாண்டுக்கு வாங்கிய பழ வகைகளை, நறுக்கி கொண்டிருந்தாள் சித்ரா. வீட்டுக்கு வெளியே வண்டி சத்தம் கேட்கவே, கேட்டுக்கு வந்து பார்த்ததில், மித்ரா, வேர்வையுடன், ெஹல்மெட்டை கழற்றியவாறு உள்ளே வந்தாள்.''அடடே.. வா, மித்து. இன்னைக்கு வெயில் ஜாஸ்திதான். ரிலாக்ஸாக உட்காரு. ஜூஸ் போட்டு கொண்டு வர்றேன்,'' என்று சித்ரா சொல்லி விட்டு உள்ளே சென்றாள். பின் தொடர்ந்த மித்ரா, ''ஆமாக்கா... ஆன்ட்டி எங்கே காணோம்?''என்றதும், ''பக்கத்து வீட்டில், மாப்பிள்ளை வீடு பார்க்க போறாங்க. அதுதான், அம்மாவையும் கூட்டிட்டு போயிருக்காங்க,'' என்ற சித்ரா, பழங்களை ஜாரில் போட்டு, மிக்ஸியை ஓட விட்டாள்.''எதிர்காலத்துல கண்ணுல மட்டும்தான், தண்ணீரை பார்க்க முடியுமுன்னு, எம்.எல்.ஏ.,வுக்கு எச்சரிக்கை விடற மாதிரி, 'கமென்ட்' பண்ணியிருக்காங்க தெரியுமா?'' என்று ஆரம்பித்தாள் மித்ரா.''எந்த எம்.எல்.ஏ.,ன்னு விளக்கமாகத்தான் சொல்லேன்,'' என்றாள் சித்ரா.''தண்ணீர் பிரச்னைன்னு பார்த்தா, மாவட்டத்துலயே, வடக்கு தொகுதிக்கு தான் முதல் பரிசு கடைக்கும். எம்.எல்.ஏ., கவுரவ தலைவர் மாதிரி போயிட்டு வந்திட்டு இருக்காரு. மக்கள் பிரச்னைகளை கண்டுக்கறதே இல்லைனு பெரிய புகார் பட்டியலே இருக்கு. மக்களிடம் மனு வாங்கலாம்னு, வடக்கே இருக்கற பஞ்சாயத்துக்கு போயிருக்காரு. ஏற்பாடு செஞ்ச கட்சிக்காரங்க, பொன்னாடை போர்த்திட்டு போயிட்டாங்க. அவ்ளோதான்.''இதை 'பேஸ் புக்'ல 'அப்லோடு' பண்ணியிருக்காரு. அதைப்பார்த்த வடக்கு தொகுதி மக்களுக்கு பயங்கர கோபம் வந்துடுச்சாம். குடிக்கறதுக்கே தண்ணி கிடைக்க மாட்டீங்குது. இதிலே, 'பேஸ்புக்'கில் சுயபுராணம் வேற. மக்களின் பிரச்னையை பார்க்கறத விட்டுட்டு, இதெல்லாம் தேவையா. எதிர்காலத்ல, உங்க கண்ல தண்ணீர் வரும் பார்த்துக்கோங்க,'ன்னு சூடான 'கமென்ட்' மூலமாக கலங்கடிச்சுட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.''அரசியல்வாதிகளுக்கு, இதெல்லாம் 'சாதாரணமப்பா....''என்று கவுண்டமணி பாணியில் சிரித்து கொண்டே, ஜூஸ் டம்ளருடன் வந்தாள் சித்ரா. வாங்கி, ஒரே மடக்கில் குடித்த மித்ரா, ''அப்பா... இப்பதான் நல்லாருக்கு,'' என்று பெருமூச்சு விட்டாள்.இருவரும், ேஷாபாவில் அமர்ந்தபடியே, டீபாயின் மீதிருந்த பேப்பரை புரட்டினர். ''கம்யூ., கட்சியை, காவிக்கட்சி பாலோ பண்ற விவரம் தெரியுமா?'' என்று சித்ரா கேட்டதற்கு, ''ம்..ம்.. சொல்லுங்க,'' என்றாள் மித்ரா.''கம்யூ., கட்சிகள், தேசியம், மாநிலம் தழுவிய பிரச்னைக்கு மட்டும்தான் ஆர்ப்பாட்டம் பண்றாங்க. அதை போட்டோ எடுத்து, 'வாட்ஸ்ஆப்'ல பதிவு செஞ்சு, வேலைய முடிச்சுக்கறாங்க. மா.கம்யூ., கட்சியில கண்டன அறிக்கையாவது கொடுக்கறாங்க... இந்திய கம்யூ., கட்சியில அதுவும் இல்லை''''சரியான ஒருங்கிணைப்பு இல்லாம போனதால, போராட்டமும் சம்பிரதாயமா மாறிடுச்சு. ஆனா, பா.ஜ., காரங்க, போராட்டத்துல குதிச்சுட்டாங்க. 'டாஸ்மாக்', குடிநீர், ரேஷன் கடை பிரச்னைனு, வார்டு வாரியாக பா.ஜ., கட்சிக்காரங்க கொடியோட களமிறங்கிட்டாங்க,'' என்றாள் சித்ரா.''வரப்போற உள்ளாட்சி தேர்தலை குறி வைச்சு, வேலைய ஆரம்பிச்சுட்டாங்க போல,'' என்று கூறி சிரித்தாள் மித்ரா.நாளிதழை வாசித்த சித்ரா, ''அடிக்கடி டூ வீலர் திருட்டு,'' என்ற செய்தியை வாசித்தாள்.அதைக்கேட்ட மித்ரா, ''ஆமாங்க்கா, கலெக்டர் ஆபீஸ் காம்பளக்ஸின் பேக் சைடில், 'போர்டிகோ'வில் 'டூ வீலர்' நிறுத்தறாங்க. போன மூணு மாசத்துல, 18 'டூ வீலர்' திருட்டு போயிருச்சு. அதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கல. இத்தனைக்கும் 'சிசிடிவி' கேமரா இருந்தும், என்ன பிரயோஜனம்?,'' என்றாள்.''அடக்கடவுளே... கலெக்டர் ஆபீசுக்கே இந்த கதியா?'' என்றாள் சித்ரா.''வரவர நம்ம போலீஸ் வரம்பு மீறி போக ஆரம்பிச்சுட்டாங்க போல,''என்று போலீஸ் மேட்டரை ஆரம்பித்தாள் மித்ரா.''ஆமாம். நானே சொல்லலாமுன்னு இருந்தேன். தினமும் ஏதாவது ஒரு ஊரிலிருந்து போலீஸ் அத்துமீறல் வீடியோ வாட்ஸ் ஆப்பில் வலம் வருது. மற்ற ஊரில் எல்லாம், குற்றவாளிகள் அல்லது மக்களிடம் போலீசாரின் அத்துமீறல் விஷயம் வெளியே தெரியுது''''ஆனா, திருப்பூரில், கோவையில் நடந்த கொலை சம்பவத்தில் போலீசார் தேடி வந்த ஒரு நபர், திருப்பூர் ஜே.எம். கோர்ட்டில் வக்கீல் மூலமா சரண்டர் ஆகியிருக்கார். கோர்ட் கஸ்டடி எடுத்த அவரை, கோர்ட்டு வளாகத்துக்குள்ள புகுந்து கோவை போலீசார் இழுத்துட்டு போக, ஒரே களேபரமாயிடுச்சு. வக்கீல்கள் எதிர்ப்பால், ஓட்டம் பிடித்த போலீசார் மீண்டும் சிறிது நேரம் கழித்து, திரும்பி வந்து அதே வளாகத்தில் ஒரு அறையில், ஆற அமர, உட்கார்ந்து 'லஞ்ச்' சாப் பிட்டு, சாவகாசமா போயிருக்காங்க. இது வக்கீல்கள், பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கு,'' என்று விளக்கினாள் சித்ரா.''ஆமாம், அதேதான். இது நடந்த ரெண்டு நாளில்,திருட்டு வழக்கில் ஜாமின் வாங்கிட்டு, ஆஜராக வந்த ஒருவரை கோர்ட் வாசலில் வீரபாண்டி போலீசார் குண்டு கட்டாக துாக்கி ஜீப்பில் போட முயற்சி செஞ்சாங்களாம். அங்கிருந்த வக்கீல்கள் சேர்ந்து அவரை மீட்டனர். வக்கீல்கள் ஒன்றுகூடி, சத்தம் போட்டவுடன், போலீசார் அங்கிருந்து ஓட்டம் பிடிச்சுட்டாங்க. வர வர போலீசார் ஏன்தான் இப்படி நடந்துக்குறாங்க என்றே தெரியவில்லை,'' என்றாள் மித்ரா. ''கோர்ட் வளாகத்தில், கடமை உணர்வை காட்டும் போலீசார், மத்த எல்லாத்திலேயும் காட்டினா, பரவாயில்லையே,'' என்றாள் சித்ரா. ''என்ன பொடி வைச்சு பேசுறீங்க?'' என்று ஆர்வமானாள், மித்ரா. ''அவிநாசியில் கந்து வட்டி பிரச்னை.. வீடு காலி செய்வதில் பிரச்னை, என சில புகார்கள் வந்து, அதன் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் இல்லை. அதே போல் திருப்பூர் வடக்கு போலீசில், இடப்பிரச்னை தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மற்றும் குடும்பத்தினர் மேல் கொடுத்த புகார் மீது இது வரை எந்த நடவ டிக்கையும் இல்லை. கோர்ட் உத்த ரவிட்டும் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டு வச்சுட்டாங்க,'' என்றாள் சித்ரா.''இவங்களை யார் திருத்தறதுன்னு, தெரியலையே?,'' என்ற மித்ரா, நாளிதழை புரட்டி, ''காவிரி பிரச்னை; விவசாயிகள் கருத்து,'' என்றதும், ''அட.. ஒரு நிமிஷம் இருப்பா... பல்லடத்துல நடந்த கதை தெரியுமா?'' என்று குறுக்கிட்டாள் சித்ரா. மித்ரா, ''சொல்லுங்க,'' என்றதும், “மாமூல் கொடுத்து மானியம் வாங்கறதுக்கு பதிலா, பேசாம இருக்கற காசுல விவசாயம் பண்றதே பெட்டர்னு. விவசாயிங்க இருக்காங்களாம்,” என்றாள் சித்ரா. ''அக்கா.. அடிக்கிற வெயிலில், நீங்க வேற, இப்படி கமல் மாதிரி பேசாதீங்க,''என்று சலித்து கொண்டாள் மித்ரா. “உனக்குத்தான், பொறுமை கிடையாதடி. கந்து வட்டிக்கும், மீட்டர் வட்டிக்கும் காசு வாங்கி, எப்படியோ பயிர காப்பாத்த ணும்னு விவசாயிங்க நினைக்கறாங்க. இந்த நிலையில, அரசாங்கம் குடுக்கற மானியத்தையும் சரியா வாங்க முடியறதில்லையாம். பட்டா, சிட்டா, சிறு குறு விவசாய சான்றுன்னு எக்கச்சக்கமான 'டாக்குமென்ட்' கொடுத்தாலும், வி.ஏ.ஓ., அலைய விடறாராம்,' என்றாள் சித்ரா.“இதென்ன கொடுமையா இருக்கு?” என மித்ரா ஆதங்கப்பட, ''வைட்டமின் “ப”க்கு தான், இந்த அலைக்கழிப்புன்னு, தெரிஞ்சுகிட்ட விவசாயிங்க, பேசாம இருக்கற காசுல விவசாயம் பாக்கறதே மேல்னு சொல்றாங்க,'' என்றாள். ''இத்தனை நாட்கள் கழிச்சு, இப்பதான், நம்ம எம்.பி.,க்கு, பின்னலாடை துறை கண்ணுக்கு தெரியுதுபோல,'' என்று, சித்ரா சொன்னதும், ''அட... நாம கூட, அவங்களை பத்தி பேசவேயில்லையே. இதென்ன மேட்டர்,'' என்று ஆர்வமானாள் மித்ரா.''ஆடை தயாரிப்பு சார்ந்த தொழில் அமைப்புகளிடமிருந்து கோரிக்கை மனுவை வாங்கும் எம்.பி., மத்திய அமைச்சரை சந்திச்சு மனுவை கொடுத்து, படம் எடுத்து, பத்திரிகைகளுக்கு அனுப்புறாங்களாம்,'' என்று சித்ரா முடிப்பதற்குள், ''இதிலென்ன இருக்கு?'' என்று மித்ரா சொல்ல, ''அட.. அவசரப்படாதடி, முழுசா சொல்றேன். கேட்டுட்டு பேசு,'' என்று செல்லமாக கோபித்து கொண்டாள் சித்ரா.''சமீபத்தில், சாய ஆலை சங்கத்திடமிருந்து ஒரு கோரிக்கை மனுவை வாங்கிய எம்.பி., மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரை சந்திச்சிருக்காங்க. ஆனா, தானே மனு தயாரித்து, அமைச்சரிடம் வழங்கியதுபோல எல்லாவற்றையும், எம்.பி., உல்டா பண்ணிட்டாங்க.''''இதை தெரிஞ்சுகிட்டே, சங்கத்துக்காரங்க ரொம்பவும் 'பீல்' பண்ணாங்களாம். இந்த விஷயம், தெரிஞ்ச, பின்னலாடை துறையினர், '2019ல் எலக்ஷன் வருதுல்ல. அதான், தொழில் துறை மீது இத்தனை நாட்கள் இல்லாத கரிசனம் இப்போ வந்திருக்கு,'' என்று சித்ரா விளக்கினாள்.வெயில் தனது வேலையை தொடர்ந்து காட்டவே, மோர் கொண்டு வந்து கொடுத்தாள் சித்ரா. ''இன்னைக்கு சாப்பாடு தேவையில்ல போலிருக்கே,'' என்று டம்ளரை வாங்கி பருகி கொண்டே, ''என்னக்கா, சிட்டியில் ஹாரன் சத்தம் ரொம்பவும் அதிகமா இருக்குதாம்? ரோட்டுல, இவ்வளவு சத்தமா 'ஏர்-ஹார்ன்' அடிக்கிறாங்களே. யாரும்கேட்க மாட்டாங்களா?'' என்றாள், மித்ரா.உடனே, சித்ரா, ''ஆமாம். அதுக்குத்தான், பழைய பஸ் ஸ்டாண்டில் அதிகமாக சத்தம் வந்த பஸ்சிலிருந்த 'ஏர்- ஹாரன்களை' புடுச்சாங்க தெரியுமா? வடக்கு, தெற்கு ஆர்.டி.ஓ.,க்கள் களமிறங்கி சோதனை செஞ்சாங்க. இதில என்ன விசேஷம்னு கேட்டீங்கன்னா, '2.0' பட கதாநாயகன் பேர் கொண்ட ஆபீஸர், 'ரெண்டு மூணு பேரை கூட்டிட்டு வந்தாராம். அவங்க யாருன்னு, விசாரிச்சா, ரெண்டு வாரத்துக்கு முன்னாடி நாம பேசிய, 'புரோக்கர்ஸ்'தான்,''என்றாள்.''அவரு இப்படிதான் பண்றாரு. நார்த் ஆபீசே, புரோக்கர் பிடியிலேதான் இன்னும் இருக்கு. அவங்க வெச்சதுதான் சட்டம். ஆபீசர் தனியாள் இல்லை. அவரு ஒரு கூட்டமுன்னு, பார்த்தாலே தெரியுது,'' என்று கிண்டலடித்தாள் சித்ரா.''பக்கத்தில் இருக்கிற லிங்கேஸ்வரர் ஊரில், எல்லா ஆபீசிலும் நாட்டாமை ஜாஸ்தியாடுச்சாம்,''என்று புதிர்போட்டாள் சித்ரா. ''அக்கா, புரியும்படியா சொல்லுங்களேன்,'' என சிணுங்கினாள் மித்ரா.''பறக்காதடி. சேவூர் ரோட்டில்ல, மக்கள் அதிகமாக நடமாடுற ஆபீஸ்களில், அதிகாரி கூட, உலா வர்ற 'ஜால்ராக்கள்' ஆட்டம் தாங்க முடியலையாம். இவங்கதான், மக்கள்கிட்ட 'வைட்டமின் ப' வை வாங்கி, பட்டுவாடா பண்ற வேலையை பார்க்கறாங்களாம். அதிலும், குறிப்பாக, வருமானத்தை பேரில், வைச்சிருக்கிற ஆபீசில், எதை எடுத்தாலும், 'கப்பம்' கட்டினால்தான் வேலையே நடக்குதாம். இதுக்கு உறுதுணையா புரோக்கர்களும் இருக்கிறதால, ஆபீசர் வைச்சதுதான் சட்டமாம். இது எங்கே போய் முடியுமோ?ன்னு மக்கள் கவலைப்படறாங்களாம்,'' என்றாள் சித்ரா.''அட, நீங்க வேற, அந்த ஊரில் வீற்றிருக்கிற அவிநாசியப்பர் எல்லாத்தையும் பார்த்துட்டுத்தான் இருக்கார். சரியான நேரத்தில், சரியா கொடுப்பார்,'' என்று மித்ரா சொல்ல, ''ம்...ம்.. அது உண்மைதான்,'' என்று ஆமோதித்தாள் சித்ரா.''அக்கா... நான் கெளம்பறேன். காலேஜ் புராஜக்ட் வேலைநெறய இருக்கு,'' என்றவாறே புறப்பட, ''ஓ.கே.., மித்து, பார்த்து போ,'' என, அட்வைஸ் செய்து வழியனுப்பினாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X