பொது செய்தி

தமிழ்நாடு

நடைபயிற்சி செய்வோரை கவரும் ஜூஸ்

Added : ஏப் 17, 2018
Advertisement

செங்குன்றம்: புழல் ஏரிக்கரை மீது, காலையில் நடை பயிற்சி செய்வோர், மலிவு விலையில் விற்பனையாகும், கீரை, காய்கறி ஜூஸ் மற்றும் சூப் வகையை விரும்பி உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.செங்குன்றம், புழல் ஏரிக்கரையில், தினமும் காலை, மாலை வேளைகளில், சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர், வயது வித்தியாசமின்றி, நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.இளம் சூடுபுழல் ஏரி மதகு அருகில் இருந்து, ஜோன்ஸ் டவர் எனும், சென்னைக்கு குடிநீர் அனுப்பும் கோபுரம் வரை, 3 கி.மீ., துாரம் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.பயிற்சி முடியும் இடத்தில், செங்குன்றத்தை சேர்ந்த, ஜேம்ஸ் ரூபன், 41. என்பவர், கீரை, காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட ஜூஸ் மற்றும் சூப் வகையை, இளஞ்சூடாக விற்பனை செய்கிறார். முளை கட்டிய பயிறும் கிடைக்கிறது.நடைபயிற்சி முடித்தோர், மலிவு விலையில், தரமாக கிடைக்கும் அவற்றை, வாங்கி குடிப்பதுடன், வீட்டில் உள்ளவர்களுக்கும் வாங்கி செல்கின்றனர். சோற்று கற்றாழை ஜூஸ் தவிர மற்றவை, 1 கப், 10 ரூபாய்க்கு கிடைக்கிறது.ஏரித் துாய்மைஜேம்ஸ் ரூபன், விற்பனையை மட்டுமே இலக்காக கொள்ளாமல், ஏரியின் துாய்மையை காக்க, வாடிக்கையாளர்கள், ஜூஸ் மற்றும் சூப் குடிக்க பயன்படுத்தும், பேப்பர் கப் குப்பையை, பையில் சேகரித்து வைத்து, பேரூராட்சி குப்பை மையத்தில் சேர்க்கிறார்.நெல்லிக்காய், வெண்டைக்காய், அருகம்புல், சோற்று, கீழாநெல்லி, தூதுவளை, ஆவாரம் பூ, முடக்கத்தான், பாகற்காய், கேரட், கருவேப்பிலை, வல்லாரை, வாழைத்தண்டு, மணத்தக்காளி உள்ளிட்ட பல வகையில், ஜூஸ் கிடைக்கிறது.கடந்த, நான்கு ஆண்டுகளாக, கண்பார்வை உள்ளிட்ட உடல் நலத்தை காக்கும், ஜூஸ் மற்றும் சூப் வகைளை, சுத்தமாக தயாரித்து, விற்பனை செய்து வருகிறேன். இதன் மூலம், இங்கு நடை பயிற்சிக்கு வந்து செல்லும் பலர், டீ குடிப்பதையும், புகை பிடிக்கும் பழக்கத்தையும் விட்டுள்ளனர். குறைந்த வருவாய் என்றாலும், மனதுக்கு நிறைவாக உள்ளது.

டி.ஜேம்ஸ் ரூபன், 41, செங்குன்றம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X