சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பிரேக்' பிடிக்காத பஸ் இயக்கம் : உயிருடன் விளையாடும் எம்.டி.சி.,

Added : ஏப் 17, 2018
Advertisement

சென்னை: சென்னை மாநகர பேருந்துகளின் பலவற்றில், 'பிரேக்' பிடிப்பதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.சென்னை மாநகர போக்குவரத்துக் கழக, பேருந்துகளில், 70 சதவீதம் காலாவதியானவையாக உள்ளன. நாட்டில், பீகாருக்கு அடுத்த இடத்தில், இவை உள்ளன.இந்த நிலையில், அவற்றின் பராமரிப்பு பணிகள் மிகவும் மோசமாக உள்ளதால், பேருந்துகளை, பயணியர் புறக்கணித்து வருகின்றனர்.இவற்றில் இருந்து பாடம் கற்காத, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், பேருந்துகளின் குறைகளை குறிப்பேட்டில் எழுதும் ஓட்டுனர்கள் மீது, நடவடிக்கை எடுத்து வருகிறது.இதனால், பிரேக் இல்லாததைக் கூட, ஓட்டுனர்கள் எழுத தயங்குகின்றனர். விளைவாக, 20 சதவீதத்துக்கும் அதிகமான பேருந்துகளில், பிரேக் பிடிக்கவில்லை எனவும், அதனால், பல விபத்துகள் நடந்துள்ளதாகவும், போக்குவரத்து ஊழியர்கள் கூறுகின்றனர்.இது குறித்து, ஓட்டுனர்கள் கூறியதாவது:பணிமனைகளுக்கு, தேவையான உதிரி பாகங்களை, கிளை மேலாளர்கள் வாங்கித் தருவதில்லை.இதனால், கோளாறுகளை நாங்கள் எழுதினாலும், தொழில்நுட்ப பணியாளர்களால் சரி செய்ய முடியவில்லை. தற்போதுள்ள உதவி மேலாளர்களில் பலருக்கு, அனுபவ அறிவும், முன் அனுபவமும் குறைவாக உள்ளது.அவர்களுக்கு, பேருந்துகளைப் பற்றிய புரிதல் இல்லை. அதன் கோளாறுகளை நாங்கள் கூறினால், 'பரவாயில்லை, அட்ஜஸ்ட் செய்து ஓட்டுங்கள்' என்கின்றனர்.அம்பத்துார், ஆவடி பணிமனைகளில், பேருந்துகளில், பிரேக் பிடிக்கவில்லை என, ஓட்டுனர்கள் எழுதி வைத்தால், காலையில், 'பிரேக் பிடிக்கும்; சரி செய்யப்பட்டுள்ளது' என, 'ரிப்போர்ட்' எழுதுகின்றனர்.ஆனால், பாலங்கள், திருப்பங்களில் பிரேக் பிடிக்காமல், நாங்கள் தடுமாறுகிறோம். கியரில் போட்டு, கிளட்சை விட்டு, எப்படியோ நிறுத்துகிறோம்.சில நேரங்களில், காற்று இல்லாமல், பெடல் முழுக்க உள்ளே போகும். பலமுறை பம்ப் செய்தால் தான், ஓரளவு பிரேக் பிடிக்கும். இதுபோல், பல பஸ்கள் உள்ளன. இதனால், பயணியர் மாநகர பஸ்களில் ஏறவே அஞ்சுகின்றனர்.இவ்வாறு அவர்கள்கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X