அடிப்படை வசதியில்லாத தாழவேடு ஊராட்சி

Added : ஏப் 17, 2018
Share
Advertisement
திருத்தணி: ஊராட்சியில். சாலை, குடிநீர் மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால். கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.திருவாலங்காடு ஒன்றியத்தில் தாழவேடு கிராமத்தில், ஐந்து தெருக்களில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், குறிப்பாக, விவசாயிகள், நெல், பூ போன்றவற்றைதான் அதிகளவில் பயிர்கள் செய்கின்றனர்.இந்நிலையில், தாழவேடு

திருத்தணி: ஊராட்சியில். சாலை, குடிநீர் மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால். கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.திருவாலங்காடு ஒன்றியத்தில் தாழவேடு கிராமத்தில், ஐந்து தெருக்களில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், குறிப்பாக, விவசாயிகள், நெல், பூ போன்றவற்றைதான் அதிகளவில் பயிர்கள் செய்கின்றனர்.இந்நிலையில், தாழவேடு கிராமத்தில் உள்ள தெருக்களில், தார்ச்சாலை அமைத்து, 15 ஆண்டுகள் ஆகியுள்ளதால், தற்போது ஜல்லிகற்கள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக மாறியுள்ளது. மேலும் தெருக்களில் கழிவுநீர் கால்வாய்கள், சில இடங்களில் புதைந்தும், பல இடங்களில் உடைந்தும் உள்ளன.மேலும், குடிநீர் வசதிக்காக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் பழுதடைந்து வீணாக கிடக்கின்றன. இதனால், வெயில் காலத்தில் குடிநீர் பிரச்னை அதிகளவில் இருக்கிறது.இது தவிர, சுகாதாரம் காக்கும் வகையில், 2012--13ல், கிராமத்தின் கிழக்கு பகுதியில், 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் கட்டி, பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இதை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், தற்போது, சுகாதார வளாகத்தை சுற்றியும் முட்செடிகள் வளர்ந்தும், வளாகத்தில் மதுபாட்டில்கள் கிடங்காக உள்ளன. மொத்தத்தில், தாழவேடு ஊராட்சியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் கிராம மக்கள் தவிக்கின்றனர்.எனவே, ஒன்றிய அதிகாரிகள், ஒரு முறை தாழவேடு கிராமத்திற்கு நேரில் வந்து, ஆய்வு செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X