பதிவு செய்த நாள் :
தமிழக பா.ஜ.,வில் மாற்றம்?
தேர்தலுக்கு தயாராக அதிரடி

புதுடில்லி: விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களில், கட்சி நிர்வாகி களை மாற்றும் பணியில், பா.ஜ., அதிரடியாக இறங்கியுள்ளது. ஆந்திரா, ம.பி., ராஜஸ்தானை தொடர்ந்து, தமிழகத்திலும், பா.ஜ., நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட வுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆந்திர மாநில, பா.ஜ., தலைவராக இருந்த, ஹரிபாபு, நேற்று முன்தினம், தன் பதவியை ராஜினாமா செய்தார்.

 தமிழக, பா.ஜ.,வில், மாற்றம்? ,தேர்தலுக்கு, தயாராக ,அதிரடி


இதையடுத்து, ம.பி., மாநில, பா.ஜ., தலைவர், நந்தகுமார் சவுஹான் மற்றும் ராஜஸ்தான் மாநில தலைவர், அசோக் பர்னமி ஆகியோரும், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், ம.பி.,யில், நந்தகுமார் சவுஹானுக்கு பதிலாக, ஜபல்பூர், எம்.பி.,யும், லோக்சபா கொறடாவுமான, ராகேஷ் சிங், புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


ஆந்திரா மற்றும் ராஜஸ்தானுக்கு, புதிய தலைவர் கள் இன்னும் நியமிக்கப்படவில்லை.இந்த மூன்று மாநிலங்களிலும், இந்த ஆண்டு இறுதிக்குள், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதை மனதில் வைத்து, இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.உட்கட்சி பூசல்களை கட்டுப்படுத்த தவறியதாலும், மாநில அளவில் கட்சியை வலுப் படுத்துவதில் ஆர்வமின்றி செயல்பட்டதாலுமே, இந்த மாற்றங்கள் செய்யப் பட்டதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ம.பி., மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த, பா.ஜ., தலைவர்கள், அம்மாநில முதல்வர்களின் பேச்சுக்கு மறுபேச்சு இல்லாமல் செயல்பட்டதை, பா.ஜ., மேலிடம் விரும்பவில்லை என்றும், தேர்தல் நெருங்கும் நேரத்தில், கட்சியை பலப்படுத்தும் ஆளுமை உடைய தலைவர்களை நியமிக்க,

Advertisement

கட்சி மேலிடம் விரும்புவதாகவும் கூறப்படு கிறது.இதைத் தொடர்ந்து, டில்லி, சத்தீஸ்கர் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களிலும், கட்சி நிர்வாகிகளை அதிரடியாக மாற்றிய மைக்க, பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது.


இந்த மாநிலங்களில், தற்போதுள்ள நிர்வாகி களால், மக்களிடையே செல்வாக்கு பெற முடிய வில்லை என்றும், அதனால், இவர்களுக்கு பதிலாக, புதிய நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


Advertisement

வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
19-ஏப்-201820:28:36 IST Report Abuse

Bhaskaranமுதலில் raajaavai கட்சியின் அனைத்துப்பொறுப்பிலிருந்தும் தூக்கினால் நோட்டா வுக்கு கிடைக்கும் வாக்குகளில் பாதியை நெருங்க வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்

Rate this:
19-ஏப்-201817:18:47 IST Report Abuse

IndiaTamilan Kumar(Nallathai  Ninaippom  Nallathey Nadakkum )மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் யார் என்று கண்டறிந்து அவரை நியமிப்பது நல்லது

Rate this:
VOICE - CHENNAI,இந்தியா
19-ஏப்-201817:03:56 IST Report Abuse

VOICEதமிழகத்தில் பிஜேபி அல்ல காங்கிரஸ் கட்சிக்கும் இம்முறை டெபாசிட் போகணும். இருவரும் கூட்டுகளவாணி தான். திமுக மத்தியில் ஆதரவு வேண்டும் என்பதால் காங்கிரஸ் அருகில் வைத்துள்ளது தவிர காங்கிரஸ் கட்சி யால் தான் கடந்த முறை திமுகவிற்கு பாதிப்பு. அதிமுக கட்சி பிஜேபி கட்சியால் தமிழகமக்களின் வெறுப்பை சம்பாதித்து கொண்டு இருப்பதால் அதன் செல்வாக்கு படுபாதாளத்திற்கு போவதாக தகவல். பல இடங்களில் டெபாசிட் கிடைப்பது அரிது.

Rate this:
மேலும் 68 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X