வாய் திறந்து பேசுங்கள் மோடி: மன்மோகன் சிங்| Dinamalar

வாய் திறந்து பேசுங்கள் மோடி: மன்மோகன் சிங்

Added : ஏப் 19, 2018 | கருத்துகள் (116)
Advertisement
பிரதமர் மோடி, மன்மோகன்சிங், மவுன மோகன் சிங், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் , பிரதமர் நரேந்திர மோடி,மருத்துவ மாணவி வன்கொடுமை ,  கத்துவா மற்றும் உன்னா பாலியல் வன்கொடுமை, வாய் திறந்து பேசுங்கள் மோடி, Prime Minister Modi, Manmohan Singh, former Prime Minister Manmohan Singh,
Prime Minister Narendra Modi, medical student resort, muna mohan singh, kathua and unnao sexual abuse, open mouth talk Modi,

புதுடில்லி : 'நான் பிரதமராக இருந்த போது மோடி எனக்குக்கூறிய அறிவுரைகளை தற்போது அவர் பின்பற்ற வேண்டும்' என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

இதுகுறித்து ஆங்கில ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: நான் பிரதமராக இருந்த போது, மவுனமாக இருப்பதாக நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். கடந்த 2012ம் ஆண்டு டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட போது 'மவுன மோகன் சிங்' என பா.ஜ.,வினர் கிண்டலடித்தனர்; இந்தப் பெயரோடு தான் நான் ஆட்சி முழுதும் வாழ்ந்தேன். ஆனால், தற்போது பிரதமராக இருக்கும் மோடி, என்ன செய்கிறார். முக்கிய பிரச்னைகளுக்கு வாய் திறக்காமல், அவர் மவுனம் காப்பது ஏன்?

கத்துவா மற்றும் உனா பாலியல் வன்கொடுமையால் இந்திய மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இச்சம்பவங்களுக்காக பிரதமர் மோடி தன் மவுனத்தைக் முன்கூட்டியே கலைத்து கருத்துகூறி இருக்க வேண்டும். சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். வாய்திறந்து பேசுங்கள் மோடி; எனக்கு நீங்கள் கூறிய அதே அறிவுரைகளைத்தான் உங்களுக்கு நானும் கூறுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (116)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-ஏப்-201820:00:55 IST Report Abuse
Kasimani Baskaran இவரது கட்டுப்பாட்டில் உள்ள துறையில் இவரது மூக்குக்கு கீழ் நிலக்கரி ஊழல் நடந்தது... அன்று வாயை திறக்கவே இல்லை... இன்று மோடி மட்டும் இவர்கள் கிளப்பி விடும் பிரச்சினைகளை மட்டும் பேசவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
19-ஏப்-201819:47:35 IST Report Abuse
Nalam Virumbi மோடி பேசிவிட்டார். மன்மோகன் மீண்டும் மௌனமானார்
Rate this:
Share this comment
Cancel
ravichandran - avudayarkoil,இந்தியா
19-ஏப்-201819:46:03 IST Report Abuse
ravichandran யார் எதைப்பற்றி பேசுறதுனே வரைமுறை இல்லாமே போச்சு இது தான் காலத்தின் கோலம் என்பது பேசுவது பற்றி மோடிக்கு இவர் சொல்லும் நிலையா ஹி ஹி.... மோடி மேடைகளிலும் பொது வெளியிலும் சிங்கம்போல் கற்சிப்பவர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X