தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு

Updated : ஏப் 20, 2018 | Added : ஏப் 20, 2018 | கருத்துகள் (71)
Share
Advertisement
Deepak Mishra,Venkaiah Naidu, Ghulam Nabi Azad, தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்,  தீபக் மிஸ்ரா, காங்கிரஸ், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் , கண்டன தீர்மானத்திற்கு  7 கட்சி ஆதரவு, 
 Congress, Supreme Court Chief Justice Deepak Mishra,
Vice President Venkaiah Naidu,senior Congress leader Kapil Sibal, 7 party support for condemnation,

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 7 எதிர்க்கட்சிகள் கண்டன தீர்மானம் கொண்டு வரக்கோரி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் மனு அளித்தனர்.அதேநேரத்தில், இந்த மனுவில், திமுக, திரிணமுல் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச கட்சி எம்.பி.,க்கள் கையெழுத்து போடவில்லை.


ஆலோசனை


சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, 4 நீதிபதிகள் போர்க்கொடி தூக்கியதை தொடர்ந்து, அவர் மீது கண்டன தீர்மானம் கொண்டு வர முயற்சி நடந்தது. ஆனால், தீர்மானம் கொண்டு வரப்படவில்லை.

இந்நிலையில், நீதிபதி லோயா மரணம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்ட நிலையில், தலைமை நீதிபதிக்கு எதிராக 7 எதிர்க்கட்சிகள், கண்டன தீர்மானம் கொண்டு வரக்கோரி ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிடம் மனு அளித்தனர்.

முன்னதாக குலாம் நபி ஆசாத், எதிர்க்கட்சி தலைவர்களுடன் தீர்மானம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக காங்கிரஸ், இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், முஸ்லிம் லீக் கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்கள் கையெழுத்து போட்டுள்ளனர்.


எதிர்பார்ப்பு


இந்த தீர்மானம் தொடர்பாக குலாம் நபி ஆசாத் கூறுகையில், தலைமை நீதிபதிக்கு எதிரான கண்டன தீர்மானம் கொண்டு வரக்கோரும் மனு மீது 71 எம்.பி.,க்கள் கையெழுத்து போட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் ஓய்வுபெற்றுவிட்டனர். இதனை வெங்கையாவிடம் அளித்துள்ளோம். தீர்மானம் கொண்டு வரவதற்கு தேவையான ஆதரவு உள்ளது என அவரிடம் கூறியுள்ளோம். இதனை ஏற்பதும், நிராகரிப்பதும் அவரின் முடிவு. நல்ல பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.


கேள்வி


காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறுகையில், இந்த நாள் மீண்டும் வரக்கூடாது என எதிர்பார்க்கிறோம். நீதித்துறை சுதந்திரம் முக்கியமானது. நீதிபதிகள், நீதித்துறையின் மாண்பை நிலைநிறுத்த வேண்டும். தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட போதே, சில வழக்குகளை எவ்வாறு கையாள போகிறார் என்பது குறித்த கேள்விகள் எழுந்தன. ஜனநாயகத்தை காக்கவே தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. தலைமை நீதிபதியின் தவறான நடவடிக்கைக்காகவும் கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


விதிமுறை


* 100 லோக்சபா மற்றும் 50 ராஜ்யசபா எம்.பி.,க்கள் கையெழுத்து போட வேண்டும்
* இதனை அவை தலைவர் ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்
* ஏற்று கொள்ளப்பட்டால், விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.
* விசாரணையில் நீதிபதி தவறு செய்திருந்தால் நிருபிக்கப்பட்டால், தீர்மானம் கொண்டு வரப்படும்
* 3 ல் 2 பங்கு ஆதரவு கிடைத்தால் தீர்மானம் நிறைவேறும்
* தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதிக்கு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
* அவர் ஒப்புதல் அளித்தால் நீதிபதி பதவி பறிக்கப்படும்.

Advertisement
வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
21-ஏப்-201800:14:41 IST Report Abuse
Mani . V பேசாமல் நீதிமன்றங்களை கலைத்து விட்டு அரசியல்வியாதிகளை ஸாரி அரசியல்வாதிகளை வைத்து கட்ட பஞ்சாயத்து நடத்தி விடலாம். வேண்டியவர்கள் விடுவிக்கப்படலாம். வேண்டாதவர்கள் பலி/கொலை செய்யப்படலாம்.
Rate this:
Cancel
Ramesh - chennai,இந்தியா
20-ஏப்-201822:17:40 IST Report Abuse
Ramesh காங்கிரஸ் mp களை வீட்டுக்கு அனுப்பு
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஏப்-201821:51:54 IST Report Abuse
Pugazh V இதென்ன? பிஜேபியின் செயல்பாடுகளை கண்டிக்கவோ / விமர்சனம் செய்யவோ கூடாதா? கண்டித்தால் பப்பு குப்பு இத்தாலி லண்டன் னு திட்டுவார்களா? இவர்கள் மாதிரி எல்லோரும் அடிமைகளாக இருக்கணுமா?
Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
20-ஏப்-201822:51:39 IST Report Abuse
கைப்புள்ளஇதைத்தானே அய்யா நீங்களும் தி.மு.க ஆட்சியில் இருந்தப்போ சொன்னீர்கள்? just stop playing innocent, ok. the whole world knows who you are and how you will play. Don't act smart anymore. everyone knows you are a liar, cheater, a thug and a scum bag. அதவாது கவுண்டர் மாறி சொன்னால் கபாலி பச்ச புள்ள மாறி மூஞ்ச வெச்சிக்கிட்டு நடிக்காத. நீ யாருன்னு அவங்களுக்கு தெரியும். உன்னோட அது இது எனினும் அவங்களுக்கு தெரியும். அதனால நீ பேசாம எப்பவும் போலயே இரு....
Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
20-ஏப்-201822:54:20 IST Report Abuse
கைப்புள்ளஅடேங்கப்பா, இவரு ரொம்ப அப்பாவியாம். ஒண்ணுமே தெரியாத பச்சை புள்ள மாறி பேசி இவரு பக்கம் மக்களை இழுக்கிறாராம். தம்பி போன் வயர் பிஞ்சி ரொம்ப நாள் ஆச்சு. புதுசா ஏதாச்சும் ட்ரை பண்ணு. நீ எந்தெந்த சமயத்துக்கு எப்புடி எப்புடி மூஞ்சிய மாத்துவேன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்....
Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
20-ஏப்-201823:05:47 IST Report Abuse
கைப்புள்ளநீங்க நியாயமாக கருத்துக்களை பேசுங்கள். யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. எந்த கவர்மெண்ட் வந்தாலும் சரி மக்களுக்காண கருத்துக்களை எதிரொலித்தால் யாரும் வெறுக்க போவதில்லை. ஆனா எப்போ பார்த்தாலும் தி.மு.க வின் பிரச்ச்சார பீரங்கியாகவும், கவிதாயினியின் வலது கை போலவும், காங்கிரசின் செய்தி தொடர்பாளர் போலவும் பேசினால், அப்புறம் பப்பு சொப்பு எல்லாம் வரத்தான் செய்யும். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அதை விட்டு விட்டு மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டு பசப்புகிற வேலைகள் வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X