அரசியல் செய்தி

தமிழ்நாடு

எச்.ராஜா மீது வழக்கு: ஜெயகுமார் ஆவேசம்

Added : ஏப் 21, 2018 | கருத்துகள் (33)
Advertisement
Minister Jayakumar,H Raja Cyber ​​Psycho,Bharatiya Janata,எச் ராஜா மீது வழக்கு, ஜெயகுமார் ஆவேசம்,பாரதிய ஜனதா தேசிய செயலர் எச்.ராஜா, அமைச்சர் ஜெயகுமார் ,எஸ்.வி.சேகர் சைபர் சைக்கோ, எச்.ராஜா சைபர் சைக்கோ, The case against H. Raja, Bharatiya Janata National Secretary H. Raja,
 SVe Sagar Cyber ​​Psycho,

சென்னை: ''முதல்வரை தரக்குறைவாக பேசியதற்காக, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா மீது, அரசு வழக்கு தொடரும்,'' என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
இதுதொடர்பாக, நேற்று அவர் அளித்த பேட்டி: பத்திரிகை துறை சார்ந்த நண்பர்களின் சிரமத்தை அறிவேன். இயற்கை இடர்பாடு வரும் நேரங்களில், குடும்பத்தை மறந்து, நாட்டு மக்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில், தியாக மனப்பான்மையோடு செயல்படுகின்றனர். அந்த ஜனநாயக துாணை பற்றி, நடிகர் எஸ்.வி.சேகர், அவதுாறு கருத்து வெளியிட்டு, பின், நீக்கியுள்ளார். பெண் பத்திரிகையாளர்களை இழிவுப்படுத்தும் செயலை அனுமதிக்க முடியாது. பத்திரிகையாளர்கள் புகார் செய்தால், அவரை உள்ளே துாக்கி போடுவோம். எஸ்.வி.சேகர், ஒரு, 'சைபர் சைக்கோ'. இன்னொரு சைபர் சைக்கோ, எச்.ராஜா. இவர்களால் தமிழகத்திற்கு கேடு. உளறி தீர்த்து, தினமும் விளம்பரம் தேடுகின்றனர். முதல்வர் குறித்து பேசுகையில், தரக்குறைவான வார்த்தையை, எச்.ராஜா உபயோகப்படுத்தி உள்ளார்; இதை ஏற்க முடியாது.அவர் மீது, அரசு வழக்கு தொடரும். யாருக்கும், அரசு வக்காலத்து வாங்காது. ராஜாவானாலும், யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் சமம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22-ஏப்-201801:03:04 IST Report Abuse
Mani . V ஐயா, ஜெயக்குமார் அவர்களே, ஹெச். ராஜா உங்கள் கட்சியை (பாஜக) சேர்ந்தவர் என்பதை மறந்து விட்டு அறிக்கை விடுகிறீர்கள். உங்கள் முதலாளி வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் இருக்கிறது உங்களுக்கு.
Rate this:
Share this comment
Cancel
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
22-ஏப்-201800:08:43 IST Report Abuse
Makkal Enn pakam அடிமைகளுக்கு இந்த வாய் ஆகாது..... பாத்து பேசுங்க பாஸு.... சும்மா நீங்கப்பட்டு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு அப்புறம் IT ரெய்டு, பதவி பறிப்பு இதெல்லாம் தேவையா, இருக்கும் வரை கிடைத்தை ஆட்டைய போட்டமா கெளம்புனோமான்னு இல்லாம நீங்க வேற......
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
21-ஏப்-201819:00:14 IST Report Abuse
r.sundaram இந்த வீரத்தை ஏன் திரைப்பட பாட்டு எழுதுபவர் மேல் காட்டவில்லை. எது இவரை தடுத்தது?ஆளாளுக்கு ஒரு நீதியா? சட்டம் என்பது எல்லோருக்கும் ஒன்றுதானே? ஆண்டாளும் நம்மிடையே வாழ்ந்து இறைவனிடம் அயிக்கியமானவர்தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X