பார்வை இல்லாதவர்களுக்கு இலவசமாக ஆன்ட்ராய்டு தொழில்நுட்பம்

Updated : ஏப் 21, 2018 | Added : ஏப் 21, 2018
Advertisement
 பார்வை  இல்லாதவர்களுக்கு இலவசமாக   ஆன்ட்ராய்டு தொழில்நுட்பம்


அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பானது சிறந்த தன்னார்வ தொண்டிற்காகவும், பிரெயில் அச்சகத்திற்காகவும் மூன்று முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளது. இதன் (AICB)செயலாளராக மு.முத்துச்செல்வி பொறுப்பேற்றதில் இருந்தே பார்வையற்றவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி நடத்தி அவர்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சிறந்து விளங்க வழிவகை செய்துவருகிறார்.

தான் செய்யும் விஷயங்கள் சின்ன சின்ன ஊர்களில் உள்ள பயனாளிகளுக்கும் போய்ச்சேர வேண்டும் என்பதிலும் விருப்பம் கொண்டவர்.அதற்காக தற்போது திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பார்வையற்றவர்களுக்கான ஆன்ட்ராய்ட் போன் இலவச தொழில் நுட்ட பயிற்சி நடத்த திட்டமிட்டுள்ளார்.
வரும் ஏப்ரல் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் திருநெல்வேலி அரசு அலுவலர் ஊழியர் ஒன்றியகட்டிடத்தில்( அரவிந்த் கண் மருத்துவமநை எதிரில்)பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சியானது, Christoffel Blindenmission

நிதி உதவியுடன் நடத்தப்படுகிறது. இரண்டு நாள் பயிற்சியானது தமிழில்
மட்டுமே நடைபெறும். பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் தவறாமல்
தங்கள் பெயரை கீழே கொடுக்கப்பட்டுள்ள செல்பேசி எண்ணை தொடர்புகொண்டோஅல்லது மின்னஞ்சல் மூலமாகவோ பதிவு செய்ய வேண்டும்.முதலில் பதிவு செய்யும் 35 பங்கேற்பாளர்கள் மட்டுமே பயிற்சியில் கலந்து கொள்ள இயலும்


பயிற்சியில்

ஆண்டிராய்டு மொபைலை குரல் மென்பொருள் மூலம் சுயமாகவும் சுலபமாகவும் பயன்படுத்துதல்

தங்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறந்து விளங்க
பேடீயம் (PAYTM) பிம் (bhim)முதலிய செயலிகளை கொண்டு சுயமாகவும்
பாதுகாப்பாகவும் பணப்பரிவர்த்தனை செய்தல்
பார்வையற்றோருக்காக உருவாகி இருக்கக் கூடிய பல்வேறு செயலிகளை
பதிவிரக்கம் செய்து அவற்றை பயன்படுத்துவதை பற்றி பயிற்றுவித்தல் உள்ளீட்ட பல விஷயங்களில் பயிற்சி தரப்படும்.

பங்கேற்பாளர்களுக்கு நண்பகல் உணவு மற்றும் தேநீர்
வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்கும் வசதி மற்றும்
பயணப்படி வழங்கப்பட இயலாது திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க இயலும்.

தொடர்பு எண்: 9600 116 996.
மின்னஞ் சல்: Muthump2007@gmail.comஎல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X