திரையுலக கசப்புகளை...மறுக்கப் போவது இல்லை| Dinamalar

திரையுலக கசப்புகளை...மறுக்கப் போவது இல்லை

Updated : ஏப் 22, 2018 | Added : ஏப் 22, 2018
திரையுலக கசப்புகளை...மறுக்கப் போவது இல்லை

'கொஞ்சி பேசிட வேணாம்... உன் கண்ணே பேசுதடி' என்ற பாடல் காட்சியில் தன் வசீகர நடிப்பால் இளைஞர்களை கவர்ந்திழுத்தவர் நடிகை ரம்யா நம்பீசன். கேரளாவை சேர்ந்த இவர், 'ஒரு நாள் ஒரு கனவு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியிருந்தாலும், 'பீட்சா' படம்தான் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது எனலாம்.

இவர் நடிப்பது மட்டுமல்ல, பாடுவதிலும் திறமையானவர். இவரின், 'பை... பை... பை' பாடல் ஒரு காலத்தில் குட்டீஸ்களின், 'ரைம்ஸ்' ஆகவும், இளசுகளின் ரிங்டோனாகவும் ஒலிக்க தவறியதில்லை. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடித்த 'மெர்குரி' படம் ரிலீசாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

சமீபத்தில், கோவை நவக்கரை அருகேயுள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரி ஆண்டு விழாவில், பங்கேற்ற இவர் நம்மிடம் பகிர்ந்தவை...
* விஜய் சேதுபதியுடன் தொடர்ந்து நடிப்பது குறித்து...விஜய் சேதுபதியுடன், 'சீதக்காதி' படத்தில் நடித்திருக்கேன். அதில் ரம்யா நம்பீசனாகவே நடித்திருக்கேன். ஆனால், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவில்லை. எனக்கு அந்த ஸ்க்ரிப்ட் அண்ட் டீம் பிடித்திருந்ததால் உடனே ஓகே சொல்லிவிட்டேன். நல்ல டீம் மற்றும் ஸ்க்ரிப்ட் கிடைத்தால் கெஸ்ட் ரோலிலும் நடிக்க நான் தயங்கமாட்டேன். ஏனென்றால், எனக்கு சினிமா அந்தளவுக்கு பிடிக்கும்.

* சமீப காலமாக நடிகைகள் தரப்பில் எழும் குற்றச்சாட்டுகள் குறித்து?திரையுலகில் உள்ள சில மோசமான விஷயங்கள் பற்றி என் சக நடிகைகளும், தோழிகளும் பேசியதை நான் மறுக்கப்போவது இல்லை. அதிர்ஷ்டவசமாக நான் அந்த தொல்லைக்கு ஆளாகவில்லை. படவாய்ப்புக்காக பெண்களை தவறாக நடத்துவதை கேள்விப்படும்போது வெட்கமாக உள்ளது. இது அனைத்து துறைகளிலும் உள்ளது.
ஆனால், நான் என்ன செய்கிறேன் என்பதில் தெளிவாக உள்ளேன். பெண்கள் மீதான அத்துமீறல்களை எதிர்த்து பேச பெண்கள் தைரியமாக முன்வர வேண்டும்.
* 'மெர்குரி' படம் குறித்து?காது கேட்காத, வாய் பேச முடியாத ஐந்து பேருக்கும், கண் தெரியாத ஒருவருக்கும் இடையே நடக்கும் மவுனப் போராட்டமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். பிரபுதேவாவுடன் நடத்தது நல்ல அனுபவம். மவுனமாக துவங்கும் ஐந்து பேரின் பயணம், எதிர்பாராமல் நடக்கும் விபத்தால் திசைமாறி, திகில் திருப்பங்களுடன் அனைவரையும் ரசிக்க வைக்கும்.மேலும், மெர்குரி தொழிற்சாலையால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, கார்ப்பரேட் நிறுவங்களால் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளையும் மறைமுகமாக சுட்டிக் காட்டியிருக்கிறார் இயக்குனர். ஒரு புதுமையான அனுபவத்தை நிச்சயம் தரும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X