தலைமை நீதிபதிக்கு எதிரான கண்டன தீர்மானம் நிராகரிப்பு: தவிடுபொடியானது காங்கிரஸ் போட்ட திட்டம் Dinamalar
பதிவு செய்த நாள் :
நிராகரிப்பு!
தலைமை நீதிபதிக்கு எதிரான கண்டன தீர்மானம்...
தவிடுபொடியானது காங்கிரஸ் போட்ட திட்டம்

புதுடில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, பார்லிமென்டில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும்படி, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி, எம்.பி.,க்கள் அளித்த, 'நோட்டீசை' துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு, நேற்று நிராகரித்தார்.

சுப்ரீம் கோர்ட், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, கண்டன தீர்மானம்,  காங்கிரஸ், கபில் சிபல், துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு'அந்த நோட்டீஸ், போதிய தகுதியுடன் இல்லை; கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஏற்கத்தக்கவை அல்ல' என, துணை ஜனாதிபதி கூறியுள்ளார்.உச்ச நீதிமன்ற தலை மை நீதிபதி, தீபக் மிஸ்ரா, வழக்குகளை ஒதுக்குவதில் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், முக்கியத்துவம் வழக்குகளை, அனுபவம் இல்லாத இளம் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு ஒதுக்குவதாகவும், செலமேஸ்வர், ஜோசப் குரியன் உள்ளிட்ட நான்கு நீதிபதிகள், ஜனவரியில் போர்க்கொடி துாக்கினர்.

வலியுறுத்தல்


'தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, பார்லிமென்டில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, எதிர்க்கட்சிகளை, இவர்கள் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், காங்.,கைச் சேர்ந்த, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர், குலாம் நபி ஆசாத், அக்கட்சி மூத்த, எம்.பி., கபில் சிபல் உள்ளிட்டோர், துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான, வெங்கையா நாயுடுவை, சமீபத்தில் சந்தித்தனர். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த, எம்.பி.,க்களும், அவர்களுடன் சென்றனர்.

தீவிர ஆலோசனை


அப்போது, தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, ராஜ்யசபாவில், கண்டனத் தீர்மனம் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி, வெங்கையா நாயுடுவை வலியுறுத்தி, அதற்கான நோட்டீசை அளித்தனர்.இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிகள், மூத்த நீதிபதிகள், லோக்சபா

முன்னாள் செயலர் கியோருடன், வெங்கையா நாயுடு தீவிர ஆலோசனை நடத்தினார்.இதைத் தொடர்ந்து, வெங்கையா நாயுடு, நேற்று பிறப்பித்த உத்தரவு:உச்ச நீதிமன்ற தலை மை நீதிபதி, தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காங்., உள்ளிட்ட, ஏழு கட்சிகளின், எம்.பி.,க்கள், 'நோட்டீஸ்' அளித்தனர்.அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்ஏற்கத்தக்கவையாக இல்லை; அது, போதிய தகுதியை பெற்றிருப்பதாக கருதுவதற்கு இடம் இல்லை.

உள்விவகாரம்நோட்டீசில் உள்ள குற்றச்சாட்டுகளை தனியாகவும், ஒட்டு மொத்தமாகவும், பல கோணங்களில் ஆய்வு செய்தேன். அக்குற்றச்சாட்டுகள், நீதித்துறையின் சுதந்திரத்தை சீர்குலைக்கும் நோக்குடன் உள்ளன.இது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கலந்து பேசி தீர்க்கக் கூடிய உள்விவகாரம் என்பது தெளிவாகிறது. அரசின் பிரதான துாண்களில் எதையும், வலிமை குன்றச் செய்யும் செயலை அனுமதிக்க முடியாது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, முறைகேடாக நடந்ததையும், தகுதி குறைவானவர் என்பதையும் நிரூபிக்கும் ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீசை நிராகரிக்கிறேன்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியில் உள்ள ஒருவருக்கு எதிராக, நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக, கண்டனத் தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்த நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டுள்ளது, காங்., தலைமையிலான எதிர்க்கட்சியினருக்கு, பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

வழக்கு ஜெயிக்காது!முன்னாள் அட்டர்னி ஜெனரலும், பிரபல சட்ட நிபுணருமான, சொலி சொராப்ஜிகூறியதாவது:உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக, கண்டனத் தீர்மானம் இயற்றும் விவகாரம் தொடர்பாக, காங்., தலைமையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த, எம்.பி.,க்கள், உச்ச நீதிமன்றத்தில் தொடரும் வழக்கு, வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை.இந்த விஷயத்தில், சட்ட

Advertisement

நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, நன்றாக யோசித்து, துணை ஜனாதிபதி முடிவு எடுத்துள்ளார். ஏற்பதற்கான தகுதி இல்லாததாலும், குற்றச்சாட்டுகள் ஆதாரமின்றி உள்ளதாலும், நோட்டீசை அவர் நிராகரித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

'அவசரத்தில் எடுத்த முடிவு'


துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான, வெங்கையா நாயுடுவின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர, காங்., திட்டமிட்டுள்ளதாக, காங்., மூத்த தலைவர், கபில் சிபல் கூறியுள்ளார்.டில்லியில், நிருபர்களிடம் நேற்று, கபில் சிபல் கூறியதாவது:ராஜ்யசபா தலைவர், வெங்கையா நாயுடுவின் உத்தரவு, நீதித்துறை நடைமுறையை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த, அரசு தயாராக இல்லை.ராஜ்யசபா தலைவரின் உத்தரவு, சட்டவிரோதமானது; இதற்கு முன் இதுபோன்ற நிகழ்வு நடந்ததில்லை; அவசரத்தில், தவறான ஆலோசனையின் அடிப்படையில், முழுமையாக விசாரிக்காமல் இந்த முடிவை, அவர் எடுத்துள்ளார்.எதிர்க்கட்சி, எம்.பி.,க்கள் அளித்த நோட்டீசை ஆரம்ப கட்டத்திலேயே, வெங்கையா நாயுடு நிராகரித்துள்ளார். இதனால், மக்களின் நம்பிக்கை தகர்த்தெறியப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.

தலைமை நீதிபதிக்கு எதிராக, எம்.பி.,க்கள் அளித்த நோட்டீஸ் விஷயத்தில், அரசியல் சாசன அடிப்படையில் முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் படைத்தவர், துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு மட்டுமே. அவர் எடுத்த முடிவு, மிகச்சரியானது என்றே கருதுகிறேன்.பாலி எஸ்.நாரிமன்பிரபல சட்ட நிபுணர்


Advertisement

வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kadhiravan - thiruvaroor,இந்தியா
24-ஏப்-201823:06:27 IST Report Abuse

kadhiravanதற்போது அசத்தியம் வென்றுள்ளது..,வரும் தேர்தல் சத்தியத்திற்கும்..,அசத்தியத்திற்கும் இடையே உள்ள போட்டி..,இதில் சத்தியம் வெல்லவேண்டும்..,இல்லயெனில் வெல்லவைப்போம்.

Rate this:
Manian - Chennai,இந்தியா
26-ஏப்-201805:17:09 IST Report Abuse

Manianஎன்னப்பா எப்போது பகவான் கிருஷனாக அவதாரம் எடுத்தாய்? 100 % நீ உண்மையிலேயே சத்திய ஸீலனா? இப்போ 1 % நல்லவன் இருந்தாலே அதிகம். அவனுகளுக்காக தான் கொஞ்சமாவது மழை பெய்யுது....

Rate this:
சிற்பி - Ahmadabad,இந்தியா
24-ஏப்-201821:08:16 IST Report Abuse

சிற்பி கபில் சிபில் போன்ற அயோக்கியர்களால் இந்திய நீதித்துறையே அவமானப்படுகிறது. மனித வள மேம்பாட்டு அமைச்சராக இருந்த போது சிபிஎஸ்சியை நாசம் செய்தார் கபில் சிபல். இப்போது தான் சொன்னதை கேட்கவில்லை என்று தலைமை நீதிபதி மீது அவதூறு பேசுகிறார். நீதிபதிகளை தன வீட்டிற்க்கே வரவழைத்து கையெழுத்து வாங்கியவரிடம் முடியாது என்று சொன்னால் இப்படியெல்லாம் செய்வான் என்று தான் எதிர்பார்க்க முடியும். கபில் சிபில் சொல்வதை கேட்டால் நாடு தான் சீரழியும்.

Rate this:
Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா
24-ஏப்-201820:55:13 IST Report Abuse

Rajhoo Venkateshயாரவது தங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் மீது நடவடிக்கை எடுக்க விடுவார்களா ? எல்லாம் அந்த ஷாவின் திருவிளையாடல்.

Rate this:
மேலும் 44 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X