'மோடியை கொல்லணும்னு முடிவு பண்ணியிருக்கோம்': மொபைல் போனில் மிரட்டிய கோவை நபர் கைது Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'மோடியை கொல்லணும்னு முடிவு பண்ணியிருக்கோம்'
மொபைல் போனில் மிரட்டிய கோவை நபர் கைது

மதுரை: பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை கொல்ல முயற்சித்தது போல், பிரதமர் மோடியையும் கொல்ல திட்டமிட்டுள்ளதாக, மொபைல் போனில் மிரட்டிய கோவையைச் சேர்ந்த ரபீக் என்பவரை, போலீசார் கைது செய்தனர்.

பிரதமர் மோடி, பாரதிய ஜனதா ,மோடிக்கு கொலை மிரட்டல், கோவை முகமது ரபீக் ,  பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, பிரதமர் மோடியை கொல்ல திட்டம், குனியமுத்துார் போலீஸ் அதிரடி , மொபைல் போனில் மிரட்டிய கோவை நபர் கைது, மோடியை கொல்லணும்னு முடிவு பண்ணியிருக்கோம், 
Prime Minister Modi, Bharatiya Janata, Modi murder threats, Covai Mohammad Rafeeq, Bharatiya Janata senior leader LK Advani, Kuniyamuthur police ,

பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை கொல்ல திட்டமிட்டு, கோவையில், 1998ம் ஆண்டு, பிப்., 14ல் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன. இதில், 46 பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே, பிரதமர் மோடியையும் கொல்ல திட்டமிட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

22 கேஸ்


இது தொடர்பாக, கோவை மற்றும் சேலத்தைச் சேர்ந்த இருவர் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. இவர்கள், வாகன விற்பனை தொடர்பாக பேசுகின்றனர்.பேச்சின் இடையே, ஒரு கட்டத்தில் கோவைக்காரர், 'நான் சொல்றதை கேளு. கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்டில் வந்து நில்லு. வண்டி வரும்; பணத்தை கொடு. வண்டியை எடுத்துக்கோ' என சொல்கிறார்.
அதற்கு சேலத்துக்காரர், 'உங்களால் தான் பிரச்னையே. உங்க பெயரை கேட்டாலே, 'அய்யோ... அவரா' என கேட்கின்றனர்.

உங்களை பற்றி தெரியாமல், வண்டியை டெலிவரி கொடுத்துட்டேன். தெரிந்த பிறகும், உங்கள் பின்னால் வர நான் மடையனா' என கேட்கிறார். அதற்கு கோவைக்காரர், 'உனக்கு வேண்டியதை நான் பண்ணித் தருவேன். உனக்கு நான் பண்ண வருவதே பெரிய விஷயம். கொம்பு முளைச்சவன்வந்தாலும் என்கிட்டே வேலை நடக்காது' எனச் சொல்ல, பதிலுக்கு சேலத்துக்காரர், 'இதை நீங்க அன்னிக்கே சொல்லிட்டீங்க. மோடி வந்தாலும் என்கிட்டே நடக்காதுன்னு சொன்னீங்க. இந்த நாட்டில மோடியை விட பெரிய ஆளு யாரு இருக்கிறா?' என்கிறார்.
அதற்கு கோவைக்காரர், 'ஆங்... மோடியையே நாங்க கொல்லணும்னு முடிவு பண்ணி வச்சிருக்கிறோம். அப்ப... நாங்க எப்படிப்பட்ட ஆளாக இருப்போம்னு பார்த்துக்க.அத்வானிக்கு கோயம்புத்துாருல குண்டு வச்சோம்; தெரியும்லா உனக்கு' என சொல்ல, 'அதைத்தான் நீங்க ஏற்கனவே சொல்லிட்டீங்க. உங்க மேலே, 22 கேஸ் இருக்குதுன்னு சொன்னீங்க. 67 வண்டியை உடைச்சோம்னு சொன்னீங்க' என்கிறார் சேலத்துக்காரர்.

போலீஸ் அதிரடி


இதை மறுக்கும் கோவைக்காரர், '67 வண்டி இல்லை. 160 வண்டிகளைஉடைச்சோம். 2014ல் குண்டாஸ், தடா, தேசிய பாதுகாப்பு சட்டம், சிறைன்னு எல்லாத்தையும் பார்த்துட்டு தான் வந்திருக்கிறேன்' என சொல்ல, 'தமிழ்நாட்டுல இருக்கிற எல்லா ஜெயிலுக்கும் போயிட்டு வந்துட்டேன்னு

Advertisement

சொல்றீங்க. இதென்ன பெருமையா?' என சேலத்துக்காரர் கேட்கிறார்.
இருவருக்கும் உரையாடல் நீண்டு கொண்டே போக, ஒரு கட்டத்தில், 'என்னை பற்றி போலீசிற்கே தெரியும். நான் தமிழ்நாட்டு அளவில் இருப்பவன்' என, கோவைக்காரர் கொக்கரிக்கிறார்.மொத்தம், 8.27 நிமிடங்கள் இருவரும் பேசிய இந்த ஆடியோ, வாகன விற்பனை தொடர்பானதாக இருந்தாலும், பேச்சின் இடையே பிரதமர் மோடியை பற்றிக் குறிப்பிட்டதால், கோவை போலீசார் உஷாராகினர்.விசாரணையில், மிரட்டிய நபர், கோவை, கரும்புக்கடை, சாரமேட்டைச் சேர்ந்த முகமது ரபீக், 50, என்பதும், 1998, பிப்., 14ல், கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி, 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர் என்பதும் தெரிந்தது. முகமது ரபீக் மீது, கொலை மிரட்டல், இரு பிரிவினரிடையே வன்முறையைத் துாண்டும் விதமாக பேசுதல் ஆகிய பிரிவுகளில், குனியமுத்துார் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நேற்றிரவு அவரை கைது செய்தனர். பிரகாஷிடம் விசாரணை நடக்கிறது.


Advertisement

வாசகர் கருத்து (111)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-ஏப்-201822:46:08 IST Report Abuse

Mani . Vஇந்திய பொருளாதாரத்தையே சீர்குலைத்ததால் மோடி மீது மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும் அதிருப்தியை திசை திருப்பதான் இந்த கொலை மிரட்டல் நாடகம். நல்ல காலத்திலேயே நாடு தாங்காத பிள்ளை, இனி கொலை மிரட்டல் வந்த பிறகு தங்கவா போகிறது?

Rate this:
24-ஏப்-201821:51:11 IST Report Abuse

SS,ChennaiIts good to see police chased down this criminal. But i do have a question now. is it really true that our personal mobile phone conversations are really stored and being traced by police?. I am really feeling bad about this. So government is not offering independent freedom.

Rate this:
24-ஏப்-201821:51:04 IST Report Abuse

SS,ChennaiIts good to see police chased down this criminal. But i do have a question now. is it really true that our personal mobile phone conversations are really stored and being traced by police?. I am really feeling bad about this. So government is not offering independent freedom.

Rate this:
மேலும் 108 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X