கூடுதல் நிதி ஒதுக்கீடு இல்லை: கைவிரிக்கிறது நிதி ஆணையம் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
கூடுதல் நிதி ஒதுக்கீடு இல்லை:
கைவிரிக்கிறது நிதி ஆணையம்

'தமிழக அரசு கேட்பது போல், கூடுதல் நிதி ஒதுக்கீடு அளிக்க முடியாது' என, மத்திய நிதி ஆணையம் கைவிரித்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.மத்திய அரசின், 14வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, ஏற்கனவே, பல்வேறு துறைகளுக்கு என, தமிழகத்துக்கு அளிக்கப்பட வேண்டிய நிதியின் பெரும்பகுதி இன்னும் தரப்படாமல் உள்ளது.

 Central Finance Commission, NK Singh,15th Finance Committee,தமிழகத்துக்கு கூடுதல் நிதி, மத்திய நிதி ஆணையம்,  தமிழக நிதி ஒதுக்கீடு விஷயம், மத்திய அரசின் 14வது நிதிக்குழு பரிந்துரை, நிதி ஆணைய தலைவர் என்.கே.சிங், மத்திய அரசின் 15வது நிதிக்குழு பரிந்துரைகள், துணை முதல்வர் பன்னீர்செல்வம் , முதல்வர் பழனிசாமி , மத்திய அரசு,
Additional funds for Tamil Nadu,Tamil Nadu Allocation Fund, Central Government 14th Finance Committee recommendation,
Finance Commission Chairman NK Singh, Central Government 15th Finance Committee recommendation, Deputy Chief Minister Panneerselvam, Chief Minister Palanisamy, Central Government,வேண்டுகோள்
இந்நிலையில், 15வது நிதிக்குழுவின் பரிந்துரைகள், தமிழக நிதி ஒதுக்கீடு விஷயத்தில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதை சரி செய்வதற்காக, கடிதம் வாயிலாக, முதல்வர் வேண்டுகோள் வைத்திருந்தார்.இருப்பினும், நேரில் வந்து வலியுறுத்துவதற்காக, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில், தமிழக உயர் அதிகாரிகள் மற்றும், எம்.பி.,க்கள் அடங்கிய

குழுவினர், சமீபத்தில் டில்லி வந்து, நிதி ஆணையம் மற்றும் நிதி அமைச்சக உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினர்.இந்த சந்திப்புகள் சம்பிரதாய அடிப்படையில் இருந்தாலும்,நிதி ஆணைய தலைவர், என்.கே.சிங், தமிழகத்துக்கு சாதகமான, எந்த வாக்குறுதியும் அளிக்க முன்வரவில்லை என, தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, மத்திய நிதி ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:நிதிக்குழு மற்றும் அதன் பரிந்துரைகள் அனைத்துக்கும் பாதுகாவலர் ஜனாதிபதி. அரசியலமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்ட இவற்றின் விதிமுறைகள் அனைத்துமே, ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக கருதப்படுகிறது.எனவே, 15வது நிதிக்குழு மற்றும் அதன் பரிந்துரைகள், நிதி ஒதுக்கீடுகளுக்கான விதிமுறைகள் அனைத்துமே, ஜனாதிபதியின் உத்தரவாகவே கருதப்படுகிறது; இதனால், இதை மாற்றி அமைக்க, நிதிக்குழுவால்முடியாது.ஜனாதிபதியின் உத்தரவின்படி தான் நிதிக்குழு செயலாற்ற முடியும். இந்த சிக்கல் இருப்பதால் தான், தமிழக அரசுக்கு நிதிக்குழு எந்த வாக்குறுதியும் தர முடியாத சூழ்நிலை

Advertisement

உள்ளது.

நிதி ஒதுக்கீடு


'தமிழகம், நாட்டிலேயே சிறந்த உற்பத்தி மாநிலம். குடும்பக்கட்டுப்பாட்டு திட்டத்தை சிறப்பாக அமல்படுத்திய மாநிலம் என்பதால், சில விஷயங்களை பரிசீலிக்கலாம்' என, மத்திய அரசு கருதுகிறது.இதற்காக வேண்டுமானால், விதிகளின்படியான நிதி ஒதுக்கீட்டோடு சேர்த்து, குறிப்பிட்ட சதவீதம், கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. மற்றபடி, 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கீட்டுப்படி தான், தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு இருக்கும். அதில் எந்த மாற்றமும் இருக்காது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-ஏப்-201820:16:19 IST Report Abuse

Lion Drsekarயார் கையை விரித்தாலும் எங்களுக்காக சேவை செய்யவே ஒரு வேளை சோற்றுக்கும் வழி இல்லாத பாமர பிறவிகளை பல லட்சம் கோடிக்கு அதிபதியாக்க மக்கள் தயாராக இருக்கும்போது வேறு என்ன வேண்டும் இந்த ஜநாயகத்தில், அவனவன் லட்சம் கோடி கோடியில் கோடி என்று தினம் தினம் அள்ளி சுருட்டிய வண்ணம் இருக்கிறார்கள், மக்களைப்பற்றிய சிந்தனை யாருக்கு, ?? தினமலர் வாசகர்களுக்கு மட்டுமே? வந்தே மாதரம்

Rate this:
sam - Doha,கத்தார்
24-ஏப்-201812:58:58 IST Report Abuse

samஎல்லாம் பற்றி ஏன் கவலை பட போகிறார்கள். நம்முடைய கமிஷன் எல்லாம் சரியாய் வருகிறதா

Rate this:
Mayuram Swaminathan - Chennai,இந்தியா
24-ஏப்-201812:15:20 IST Report Abuse

Mayuram Swaminathanமத்திய அரசை வீணாக குறை சொல்லுவதில் பயனில்லை. நம்முடைய வாதங்களை திறம்பட எடுத்துரைக்கவேண்டும். பாஜபா தமிழகத்தில்காலூன்றவேண்டுமெனில் நியாயமாகத்தான் நடந்து கொள்ளும்.

Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
24-ஏப்-201817:25:39 IST Report Abuse

narayanan iyerநீங்கள் என்னதான் எடுத்துச் சொன்னாலும் நம்மை உள்ளே வரச்சொல்லுபோதே சொம்பை எடுத்து உள்ளேவைக்க சொன்னபின்தான் பேசச்சொல்வார்கள் . முடிவு எடுத்துவிட்டு பின் நீ என்னபேசினாலும் செவிடன் காதில் சங்குதான் ....

Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X