ரூ.15 லட்சம், 'டிபாசிட்' எப்போது? பதிலளிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ரூ.15 லட்சம், 'டிபாசிட்' எப்போது?
பதிலளிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு

புதுடில்லி,:'கடந்த, 2014, லோக்சபா தேர்தலின்போது, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபடி, ஒவ்வொரு இந்தியர் வங்கிக் கணக்கிலும், 15 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யும் தேதி தொடர்பான விஷயம், தகவல் உரிமை சட்டத்தின் வரையறைக்குள் வரவில்லை' என, பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

பிரதமர் அலுவலகம்,   நரேந்திர மோடி, லோக்சபா தேர்தல், ரூ.15 லட்சம்,

தகவல் உரிமை சட்ட ஆர்வலர், மோகன் குமார் சர்மா, 2016, நவ., 26ல், தகவல் உரிமை

சட்டத்தின் கீழ், ஒரு மனு தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, 2014 லோக்சபா தேர்தலின்போது அறிவித்தபடி,ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கில், 15 லட்சம் ரூபாய், 'டிபாசிட்' செய்யும் தேதி குறித்து, அந்த மனுவில் கேட்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் அளித்த பதில்:தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி கூறியபடி, ஒவ்வொரு இந்தியர் வங்கிக் கணக்கிலும், 15 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யும்தேதி, தகவல் உரிமை சட்டப்படி, 'தகவல்' என்ற வரையறைக்குள் அடங்காது. எனவே, இதுகுறித்த பதிலை அளிக்க இயலாது.இவ்வாறு பதிலில் கூறப்பட்டுள்ளது.இந்த பதில் திருப்திகரமாக உள்ளதாக, தலைமை தகவல் ஆணையர், ஆர்.கே.மாத்துார் கூறியுள்ளார்.

Advertisementதகவல் உரிமை சட்டப்படி, 'தகவல்' என்பது, ஆவணம், நினைவறிக்கை, இ -மெயில், கருத்து, ஆலோசனை, பத்திரிகை குறிப்பு, சுற்றோலை, உத்தரவு, ஒப்பந்தம் உள்ளிட்ட ஏதாவது ஒன்றை குறிக்கும்.


Advertisement

வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthi - try,இந்தியா
25-ஏப்-201809:58:27 IST Report Abuse

Karthiஇது எந்த வரையறைக்குள்ளும் வராது... வரும்... ஆனா...வராது ...

Rate this:
Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஏப்-201809:52:26 IST Report Abuse

Malimar Nagoreஎல்லாமே ஜனங்களை ஏமாற்றும் பித்தலாட்டம்.

Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
24-ஏப்-201822:24:39 IST Report Abuse

Rafi மூன்று மாதத்தில் கருப்பு பணத்தை கொண்டுவருவேன் என்று வீராவேசம்மாக பொதுக்கூட்டத்தில் வானத்தை பார்த்து தான் நான் சொன்னேன்,கேமராவை பார்த்தேனா? என்று கோர்ட்டில் கேஸ் என்று வந்தால் கூட அதிலிருந்து தப்பித்து விடுவார் நம் பிரதமர். அடுத்த தேர்தலில் புதிய ரூட்டில் எப்படி மக்களை கவரலாம் (ஏமாற்றலாம்) என்று சிந்திக்க தொடங்கிவிட்டார். நான்கு வருடம் கழிந்து விட்டது மக்களே அதை மறந்து, நாளை எந்த வகையில் பிரச்சனை அரசு வடிவில் வரப்போகின்றதோ? என்று தினம், தினம் கவலையில் ஆழ்ந்திருக்கின்றார்கள்.

Rate this:
மேலும் 73 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X