கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு | Dinamalar

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு

Added : ஏப் 24, 2018 | கருத்துகள் (43)
Advertisement
கோவில் கும்பாபிஷேகம்,  ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லுாங், லிட்டில் இந்தியா, அமைச்சர் சான் சுன் சிங், சிங்கப்பூர் பக்தர்கள் ,சிங்கப்பூர் தேசிய நினைவுச் சின்னம், சிங்கப்பூர் அரசு ,சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு,
Temple Kumbabishekam, Singapore Prime Minister participation, Srinivasa Perumal Temple, Singapore Prime Minister Lee Sean Lung,
Little India, Minister San Suu Singh, Singapore devotees, Singapore National Monument, Singapore Government,

சிங்கப்பூர்: சிங்கப்பூரில், 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில், அந்நாட்டு பிரதமர், லீ சீன் லுாங் பங்கேற்றார்.

சிங்கப்பூரின், 'லிட்டில்இந்தியா' பகுதியில், 164 ஆண்டுகள் பழமையான, ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலை, 1978ல், தேசிய நினைவுச் சின்னமாக, சிங்கப்பூர் அரசு அறிவித்தது. கோவிலை, 29 கோடி ரூபாய் செலவில், நான்காவது முறையாக சீரமைக்கும் பணி, 2016ல் துவங்கியது. இப்பணியில், உள்ளூர் பக்தர்கள் மற்றும் தொழிலாளர்களுடன், தமிழகத்தைச் சேர்ந்த, சிற்ப மற்றும் ஓவியக் கலைஞர்களும் ஈடுபட்டனர்.

சீரமைப்புப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, நேற்று முன்தினம், கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, குடங்களில் எடுத்து வரப்பட்ட புனித நீர், ஒன்பது கோபுர கலசங்கள் மற்றும் கருவறையில் உள்ள பெருமாள் சிலை மீது தெளிக்கப்பட்டது.

இவ்விழாவில், 40 ஆயிரம் பக்தர்கள், சிங்கப்பூர் பிரதமர், லீ சீன் லுாங், பிரதமர் அலுவலக அமைச்சர், சான் சுன் சிங் உள்ளிட்ட நான்கு அமைச்சர்களும் பங்கேற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rpalnivelu - Bangalorw,இந்தியா
25-ஏப்-201806:37:54 IST Report Abuse
Rpalnivelu சொரியார், கட்டுமரம், கட்டுமர பிரைவேட் கம்பனி, பெர்மனெண்ட் தி க தலைவன், இவர்களளெலாம் தமிழ் நாட்டு சாபக்கேடுகள். சிலர் இன்றும் 'புகழ்' பாடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
24-ஏப்-201815:42:54 IST Report Abuse
dandy டாஸ்மாக் நாட்டில் தமிழ் மட்டும் அல்ல சட்டம் ஒழுங்கு ..சீரழிய கட்டு மரம் தான் காரணம் ,, இதை நம்பாதவர்கள் மன நோய் மருத்துவரை அணுக வேண்டும் சிங்கப்பூரில் பேசப்படும் ..எழுதப்படும் அழகிய தமிழ் அங்கு போகும் டாஸ்மாக் நாட்டு அரசியல் வியாதிகளுக்கு விளங்குமா ?....சென்ட்ரல் ஸ்டேஷன் ...டி ஸ்டால்..சென்ட்ரல் ஆஸ்பிடல்...இவை எல்லாம் செம்மொழி ஹி ஹி ஹி .இந்த அழகில் செம்மொழி மாநாடு
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
24-ஏப்-201815:05:21 IST Report Abuse
kundalakesi தமிழகத்தைச் சேர்ந்த, சிற்ப மற்றும் ஓவியக் கலைஞர்க லில், நம்மூர் தங்க சிலை சீதபேதி இல்லாதவரை மகிழ்ச்சி.
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
24-ஏப்-201815:47:02 IST Report Abuse
dandyடாஸ்மாக் நாட்டு இஸ்தபதிகள் சிலை செய்ய கொடுத்த தங்கத்தையே விழுங்குபவர்கள் அல்லவா ..உபயம் கட்டுமரம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X