நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு

Added : ஏப் 24, 2018 | கருத்துகள் (33)
Advertisement
ICF Product,Southern Railway,LHB Boxes, நீண்ட கண்ணாடி ஜன்னல் ரயில் பெட்டி, ஐ.சி.எப் தயாரிப்பு, ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை, லிங் ஹாப்மென் புஷ்,  எல்.எச்.பி பெட்டிகள் ,  ஜெர்மன் தொழில்நுட்பம், ஏசி மூன்றடுக்கு பெட்டி, தெற்கு ரயில்வே, 
Long Glass Window Train Box,  Rail Box Link Factory, Ling Humpman Bush, German Technology, AC three-tier Box,

ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையான, ஐ.சி.எப்.,பில், நீண்ட கண்ணாடி ஜன்னலுடன், மூன்றடுக்கு, 'ஏசி' பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. ஐ.சி எப்.,பில், ஜெர்மன் தொழில்நுட்பத்தில், 'லிங் ஹாப்மென் புஷ்' என்கிற, எல்.எச்.பி., பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இத்துடன், 'ரயில் - 18' திட்டத்திற்கான பெட்டிகள் தயாரிப்பில் உள்ளது. வரும், 2020ல், 'ரயில் - 20' திட்டத்திற்கு, முழுவதும் அலுமினியத்தால், உலக தரத்தில், சகல வசதிகளுடன், ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஐ.சி.எப்.,பில், ஜெர்மன்தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு, ரயில் போக்குவரத்தில் இணைக்கப்பட்டுள்ள, எல்.எச்.பி., மூன்றடுக்கு, 'ஏசி' பெட்டிகளில், இருபுறமும், ஸ்டீல் சுவர் பகுதியில், கண்ணாடி ஜன்னல்கள், தனித்தனியாக பொருத்தப்பட்டிருக்கும். இந்த கண்ணாடி ஜன்னல்கள், பெரிதாக இருந்தால், பயணம் செய்யும்போது, முக்கியமான இடங்களில், வெளியில் உள்ள இயற்கை அழகையும், ரசிக்க ஏதுவாக இருக்கும், பெட்டியில், இயற்கை வெளிச்சமும் கூடுதலாக கிடைக்கும் என, பயணியர் தரப்பில், ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி, தெற்கு ரயில்வேக்காக, ஐ.சி.எப்.,பில், முதன் முதலாக, 'ஏசி' மூன்றடுக்கு பெட்டி, இருபக்கமும், நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

இடையிடையே, ஸ்டீல் சுவர் தடுப்பு இல்லாமல், பெட்டியின் முழு நீளத்திற்கும், நவீன தொழில்நுட்பத்திலான, கண்ணாடி ஜன்னல் பொருத்தப்பட்டு உள்ளதால், பகல் நேரத்தில், விளக்குகள்போடாமலேயே வெளிச்சம் கிடைக்கும்.

பயணத்தின் போது, பயணியர் வெளிப்புற காட்சிகளை பார்க்க, ஜன்னல் ஏதுவாக இருக்கும்.இத்துடன், அழகாக இருக்கை வசதிகள், பெட்டி முழுவதும் எல்.இ.டி., விளக்குகள், நவீன கழிப்பறை பொருத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் பெட்டி, 130 கி.மீ., வேகத்தில் இயங்கக்கூடியது.இப்பெட்டி, 2.2 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rpalnivelu - Bangalorw,இந்தியா
25-ஏப்-201802:57:20 IST Report Abuse
Rpalnivelu தேச விரோத கம்யூனிஸ்டுகள் மற்றும் கழக திருட்டு தொழிற் சங்கங்களால் தமிழ்நாட்டின் தொழிற் வளர்ச்சி மிகவும் அபாயகரமான, கவலைக்குரியதாக மாறி விட்டது. பெரிய, கனரக தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து கொண்டிருகின்றன. தமிழ்நாட்டிற்காவது ஒரு அவசர நிலை மத்திய அரசாங்கம், கொண்டு வருவது நல்லது.
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
25-ஏப்-201802:33:29 IST Report Abuse
Rpalnivelu தமிழர் நீதி அவர்களின் பதிவு உண்மையானால் ரயில்வே அமைச்சகம் உடனடி கவனம் செலுத்தி, புல்லுருவிகளை களையெடுக்க வேண்டும். பெருந்தலைவரின் முயற்சியால் உருவான திட்டம் இது. உண்டிகுலுக்கிகளும், கழக தொழிற்சங்க பிரதிநிதிகளையும் அடித்துத் துரத்தி, தொழிற்சாலையை வாழ வையுங்கள். தொழிற் கூடங்களை நவீன ஆலயங்களென்று சொன்னவர் அக்கால தலைவர்கள். யிருப்பதையும் நாசம் செய்பவர்கள் இக்கால உண்டிகுலுக்கிகளும், கழக தொழிற்சங்க பிரதிநிதிகளும்.
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
24-ஏப்-201820:19:02 IST Report Abuse
Sivagiri அனைத்து ரயில்களிலும் - பெட்டிகளிலும் குடிப்பதற்கு தனியாக சுத்தமான தண்ணீர் வைத்தால் ரொம்ப புண்ணியம் . . .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X