பழனி - பன்னீர் பக்கம் தாவ சசிகலா தம்பி 'டீலிங்!' Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பழனி,பன்னீர்,தாவ,சசிகலா,தம்பி,டீலிங்

தினகரனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, பழனிசாமி - பன்னீர் பக்கம் தாவ,சசிகலாவின் தம்பி, திவாகரன், 'டீலிங்' பேசிய தகவல், அம்பலமாகி உள்ளது. தகுதி நீக்கம் செய்யப் பட்ட, 18 எம்.எல்.ஏ.,க்களில், ஏழு பேர், தன் ஆதரவாளர்கள் என்றும், அவர்கள் ஆதரவுடன், ஆட்சியை தக்க வைக்க முடியும் என்றும், பழனி - பன்னீர் தரப்புடன், திவாகரன் தரப்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. அதற்கு பரிகாரமாக, தன் மகன் ஜெயானந்துக்கு, கட்சியில் முக்கிய பதவி, அதாவது, இளைஞர் பாசறை தலைவர் பதவி வழங்க வேண்டும் என்றும், ரகசிய பேரம் பேசப்பட்ட தாக தெரிகிறது. கட்சியில் திவாகரனும், அவரது மகனும் தலையெடுக்க விடாமல், 'அமுக்கும்' முயற்சியில், தினகரன் தீவிரம் காட்டுவதை எதிர்த்து, இம்முடிவுக்கு, திவாகரன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

பழனி,பன்னீர்,தாவ,சசிகலா,தம்பி,டீலிங்


சசிகலா வட்டாரங்கள் கூறியதாவது:


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில், சசிகலா குடும்ப உறுப்பினர்கள் யாரையும் சேர்க்காமல், தினகரன், தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தி வருகிறார். அவரது மைத்துனர், டாக்டர் வெங்கடேஷை, இரு மாதங்களுக்கு முன், கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும், மருத்துவ தொழிலை மட்டும் பார்க்கும்படியும், தினகரன் கூறியிருக்கிறார்.

ஆட்சிக்கு ஆதரவு


தினகரனின் தனி ஆவர்த்தனம், திவாகரன், மகன் ஜெயானந்த், இளவரசி மகன் விவேக் போன்றவர்களுக்கு பிடிக்கவில்லை. சசிகலா வின் ஒரே வாரிசு என, தன்னை கட்சியிலும், அரசியல் வட்டாரத்திலும் முன்னிலைப்படுத்த, தினகரன் முயற்சிப்பதை, இவர்கள் எதிர்க் கின்றனர்.எனவே, தினகரனை ஓரம் கட்டும் வகையில்,முதல்வர் பழனிசாமி உதவியை நாடுவதற்கு, திவாகரன் முடிவு செய்துள்ளார்.

கடந்த, 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், திவாகரனின் பரிந்துரையால்,

'சீட்' பெற்ற, ஏழு, எம்.எல்.ஏ.,க்கள், தினகரன் அணியில் உள்ளனர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள, 18 எம்.எல்.ஏ.,க்களில், அந்த ஏழு பேரும் அடங்குவர்.அவர்களை, தினகரன் அணியில் இருந்து வெளி யேற்றி, முதல்வர் பழனிசாமி யின் ஆட்சிக்கு ஆதரவு அளிக்க வைக்க, தன்னால் முடியும் என, திவாகரன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதற்கு பரிகாரமாக, தன் மகன் ஜெயானந்திற்கு, கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என்றும், முதல்வர் தரப்பினரிடம், 'டீலிங்' பேசப்பட்டுஉள்ளது. தகுதி நீக்கத்தை எதிர்த்து, 18பேரும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், தீர்ப்பு கூறப்பட வில்லை. அந்த தீர்ப்பு, தனக்கு சாதகமாக வரும் என, தினகரன், தன்னுடைய ஆதரவாளர்களிடம் கூறி வருகிறார்.

சசியுடன் சந்திப்பு


அப்படி சாதகமாக வந்தால், ஆட்சிக்கு ஆபத்து நேரலாம். அப்போது, கை கொடுப்பதே, திவாகரன் திட்டம்.திவாகரனின் பேரத்திற்கு, இதுவரையில், முதல்வர் பழனிசாமி தரப்பில், எந்த பதிலும் தெரிவிக்காமல், மவுனம் காக்கப்படுகிறது. இந்த தகவல் தெரிய வந்ததும், தினகரன், 19ம் தேதி, பெங்களூரு சென்று, சிறையில் சசிகலாவை சந்தித்து பேசினார். அவரது ஆலோசனையை பெற்ற பின்னரே, திவாகரனுக்கு எதிரான அறிக்கையை, தன் ஆதரவாளர், வெற்றிவேல் மூலமாக வெளியிட செய்தார்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

அது அவங்க பிரச்னை!


''தினகரனுக்கும், திவாகரனுக்கும் இடையே, கருத்து வேறுபாடு இருப்பதாக, எனக்கு தெரிய வில்லை,'' என, பெங்களூரைசேர்ந்த, புகழேந்தி தெரிவித்தார்.தினகரன் ஆதரவாளரான புகழேந்தி, சென்னையில், நிருபர்களிடம் கூறிய தாவது:

நடராஜன் மறைவுக்கு பின், தினகரன், திவாகரன் ஆகியோர், நன்றாகத் தான் பேசிக் கொண்டிருந்தனர்.இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு இருப்பதாக, எனக்கு தெரிய வில்லை.வெற்றிவேல்,ஏன் அப்படி ஒரு கருத்தை கூறினார் என்று தெரிய வில்லை. அவர் கருத்தில், எனக்கு உடன்பாடு இல்லை. திவாகரனும், தினகரனும் உறவினர்கள்;

Advertisement

அவர்களின் பிரச்னையை, அவர்கள் பேசி தீர்த்துக்கொள்ளட்டும். இரட்டை இலை சின்னம் கிடைத்தால் மட்டுமே, கர்நாடகாவில் போட்டியிடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

'நேற்று முளைத்த காளான்'


''தினகரனுடன் இனி இணைந்து செயல்பட மாட்டேன்,'' என, சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறினார்.மன்னார்குடியில், நேற்று அவர் அளித்த பேட்டி:இனிவரும் காலத்தில், தினகரனுடன் இணைந்து செயல்பட மாட்டேன். அ.ம.மு.க., என, தனி கட்சி துவங்கியதை ஏற்க முடியாது. இக்கட்சி, நேற்று முளைத்த காளான். கட்சி உறுப்பினர்களை எதுவும் கேட்காமல், தினகரன் தன்னிச்சையாக செயல்படுகிறார்.

திராவிடமும், அண்ணாதுரையும் இல்லாத கட்சியை ஏற்க முடியாது.அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நண்பரும் இல்லை. நாங் கள், 'அம்மா அணி' என்ற பெயரில், தனியாக செயல்படுவோம். நானும், என் மகனும் பழனிசாமி அணியில் உள்ளதாக தவறான தகவலை பரப்புகின்றனர். வெற்றி வேலும், செந்தில் பாலாஜியும் இடையில் வந்து சேர்ந்தவர்கள். தேவைப்பட்டால், நாங்கள் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

'துாக்கி எறிவேன்'


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தஞ்சையில் நேற்று, அ.ம.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தினகரன் பேசியதாவது:துரோகிகளும், எதிரிகளும் சேர்ந்து, இயக்கத்தை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என, துடித்தபடி இருக்கின்றனர். உளவுத் துறையை பயன்படுத்தியும், சமூக வலைதளங்களிலும் பல்வேறு தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

தவறான சடுகுடு ஆடுவோரை, கட்சியில் இருந்து நீக்கி விடுவேன். துரோகிகளின் வலை யில் மாட்டிக் கொண்டால், நிச்சயம் மன்னிக்க மாட்டேன். தினகரனை யாரும் ஏமாற்றி விடலாம் என நினைத்தால், உறவினராக இருந்தாலும், அவர்களை வெளியேற்றுவேன். எனக்கு, உறவு என்பது வேறு; கட்சி என்பது வேறு. யாராக இருந்தா லும், ஜெயலலிதா வழியில் துாக்கி எறிவேன். அரசியல் லாபத்திற் காகவோ, தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவோ, யாரிடமும் மண்டியிட மாட்டேன்.இவ்வாறு அவர் பேசினார்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundaram - Thanjavur,இந்தியா
25-ஏப்-201818:27:04 IST Report Abuse

Sundaramநேர்மையான ஆட்களுக்கு மட்டுமே அதிமுக கட்சியில் இடம் உண்டு

Rate this:
ram - chennai,இந்தியா
25-ஏப்-201818:14:55 IST Report Abuse

ramகுடும்ப சண்டைய பொது இடத்துல பேசாதீங்க

Rate this:
JANANI - chennai,இந்தியா
25-ஏப்-201817:48:40 IST Report Abuse

JANANIThivakaranai ADMK-vil yaarum accept panna porathu illai...

Rate this:
மேலும் 40 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X