பொது செய்தி

இந்தியா

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்

Added : ஏப் 26, 2018 | கருத்துகள் (31)
Share
Advertisement
வங்கி வாராக்கடன், துப்பறியும் நிறுவனங்கள், பஞ்சாப் நேஷனல் வங்கி,வங்கி நிர்வாகம் முடிவு, வைர வியாபாரி நிரவ் மோடி, வைர வியாபாரி மெஹுல் சோக்சி, கடன் பெற்றிருப்பவர்கள் பாஸ்போர்ட் முடக்கம், வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்,
Bank NPA, detective companies, Punjab National Bank, bank management,
Diamond Dealer Nirav Modi, Diamond Dealer Mehul Shokshi, Creditors Passport Freeze, Bank Non performing asset

புதுடில்லி : பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் தலைமறைவாக இருப்பவர்களை கண்டுபிடிக்க, துப்பறியும் நிறுவனங்களை நியமிக்க, வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில், 2017 டிசம்பர் வரை, 57 ஆயிரத்து, 519 கோடி ரூபாய் வாராக் கடனாக உள்ளது. இந்த வங்கியின் மும்பை கிளையில், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்ற, வைர வியாபாரிகள், நிரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்சி ஆகியோர், வெளிநாடு தப்பிச் சென்றனர்.

இதுவரை, 150 கோடி ரூபாய் வரை கடன் பெற்றிருப்பவர்களின் பாஸ்போர்ட்டை முடக்கி வைக்க, வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாதவர்களின் பெயர் பட்டியலை, நாளிதழ்களில் வெளியிடுவது மற்றும் அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில், பதாகைகளை பிடித்தபடி நின்று, கடன்களை வசூல் செய்யும் பணிகளில், வங்கி ஊழியர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், வங்கியில் கடன் பெற்று, தலைமறைவானோர் பற்றிய விபரங்களை சேகரிக்க, துப்பறியும் நிறுவனங்களின் உதவியை நாட, பஞ்சாப் நேஷனல் வங்கி முடிவு செய்துள்ளது; இதில், ஆர்வமுள்ள, துப்பறியும் நிறுவனங்கள், மே, 5 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துப்பறியும் நிறுவனங்கள், கடன் பெற்று தலைமறைவாக இருப்போரின், தற்போதைய முகவரி, அவரது, சட்டப்படியான வாரிசின் முகவரி, அவர்களது சொத்து விபரம் உள்ளிட்ட தகவல்களை, 60 நாட்களுக்குள் துப்பறிந்து தரவேண்டும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
26-ஏப்-201816:05:52 IST Report Abuse
vnatarajan துப்பறியும் நிபுணர்களா| சிரிப்புதான் வருகிறது. விஜய மால்லையாவின் இருப்பிடம் தெரிந்து அவரைஎன்ன லண்டனிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவந்துவிட்டார்களா என்ன. துப்பறிபவர்களை நியமித்தால் வாங்கிக்குத்தான் செலவு.
Rate this:
Cancel
Arun - Manila,பிலிப்பைன்ஸ்
26-ஏப்-201814:19:42 IST Report Abuse
Arun கடன்வாங்கிய விவசாயிகளை இந்த நாடு எப்படி நடத்தியுள்ளது என்பதை உலகறியும்..
Rate this:
Cancel
thangaraja - tenkasi,இந்தியா
26-ஏப்-201813:28:59 IST Report Abuse
thangaraja ஏன் காவல்துறையை நம்பமுடியலையா ,காசுகொடுப்போரின் காலைப்பிடிக்கும் காவல்துறையை சீரமைக்கவேண்டும் ,அய்யா பொன்மாணிக்கவேல் போன்ற நேர்மையான அதிகாரிகளை உயர்பதவிக்கு கொண்டுவரவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X