கர்நாடகாவை காங்., இழக்கும்: பிரதமர் மோடி

Updated : ஏப் 26, 2018 | Added : ஏப் 26, 2018 | கருத்துகள் (196)
Share
Advertisement
கர்நாடக தேர்தல் ,பிரதமர் மோடி, கர்நாடகா காங்கிரஸ்,கர்நாடகா பாஜக, காங்கிரஸ் பொய் பிரசாரம், கர்நாடக சட்டசபை தேர்தல் , பெண்களை முன்னேற்றுவதே எங்கள் நோக்கம், கர்நாடகாவை காங்கிரஸ் இழக்கும், 
Prime Minister Modi, Karnataka Congress, Karnataka BJP,  Karnataka assembly election,

புதுடில்லி: கர்நாடகாவில் பொய் பிரசாரம் செய்யும் காங்கிரஸ், தேர்தலில் தோற்பது உறுதி என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


பொய் வாக்குறுதி


கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ., வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:

காங்கிரசுக்கு வளர்ச்சி குறித்து கவலை கிடையாது. வளர்ச்சி என்ற ஒற்றை இலக்கை நோக்கி பா.ஜ., செயல்பட்டு வருகிறது. வளர்ச்சி அளவீடு செய்ய முடியும் என்பதால், அது குறித்து பேச கட்சிகள் பயப்படுகின்றன. ஜாதி ரீதியாக அரசியல் செய்பவர்களுக்கு நாட்டின் வளர்ச்சி பற்றி கவலைப்பட மாட்டார்கள். காங்கிரஸ், குறிப்பிட்ட சமுதாயத்திற்கு பொய் வாக்குறுதிகளை லாலிபாப் போல் கொடுக்கிறது. அடுத்த தேர்தலில் வேறொரு சமுதாயத்திற்கு இதனையே கொடுக்கிறது.


இளைஞர் சக்தி


பா.ஜ.,வின் இளைஞர்களின் சக்தியே, கட்சியின் பலம். இதனை மற்ற கட்சிகளால் தோற்கடிக்க முடியாது. கர்நாடகாவில் தேர்தலுக்காக காங்கிரஸ் பொய்யான தகவலை பரப்பி மக்களை தவறாக வழிநடத்தி வருகிறது. கர்நாடகாவை காங்கிரஸ் கட்சி இழப்பது உறுதி. இதனால், தொங்கு சட்டசபை என பொய் பிரசாரம் செய்து வருகிறது. மாநிலத்தை பிரிக்க அக்கட்சி நினைக்கிறது. ஜாதி மற்றும் மத ரீதியில் இந்த தேர்தலை மாற்ற அக்கட்சி முயற்சி செய்வதுடன், வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியையும் நாடியுள்ளது.


வருத்தம்


பணக்காரர்களுக்காக மட்டும் உழைக்கும் காங்கிரசிடம், மாநிலத்தில் மோசமான நிர்வாகம் குறித்த கேள்விக்கு பதில் கிடையாது. பொய் மற்றும் தவறான தகவல்களை பரப்புவதுமே அக்கட்சியின் நோக்கம். நான் விரைவில் கர்நாடகா வருவேன். உ.பி.யில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் எனக்கு மிகு்நத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கும். பெண்களை முன்னேற்றுவதே எங்களின் நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (196)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
03-மே-201801:57:09 IST Report Abuse
Rajesh ஹை, UP போல இங்கேயும் மோடி மந்திரம் வேலை செய்ய போகிறது
Rate this:
Cancel
pazhaniappan - chennai,இந்தியா
03-மே-201800:49:23 IST Report Abuse
pazhaniappan கர்நாடகாவை காங்கிரஸ் இழக்குமா இழக்கதா என்பது எமக்கு தெரியாது ஆனால் உங்களால் இந்தியாவை இழந்து நிற்கின்றோம்
Rate this:
Cancel
Roopa Malikasd - Trichy,இந்தியா
02-மே-201818:05:58 IST Report Abuse
Roopa Malikasd நீங்கள் கர்நாடக மாநிலத்தையாவது அல்லது வேறு எந்த மாநிலத்தையாவது பிடித்து கொள்ளுங்கள்.. .நீங்கள் ஆட்சி அமைப்பதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளில் மொத்தம் எத்தனை இதுவரை வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது... கங்கையை சுத்தப்படுத்துவோம் என சூளுரைத்தீர்கள்...எல்லா நதிகளையும் இணைப்போம் என மார்தட்டி கொண்டீர்கள்...கருப்பு பணம் மீட்டெடுப்போம் என்றீர்கள் .....என்ன ஆயிற்று
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X