டில்லி மதரசாவில் சிறுமி பலாத்காரம்; 17 வயது சிறுவன் கைது| Dinamalar

டில்லி மதரசாவில் சிறுமி பலாத்காரம்; 17 வயது சிறுவன் கைது

Added : ஏப் 27, 2018 | கருத்துகள் (67)
Advertisement
டில்லி மதரசா, சிறுமி பலாத்காரம், பாலியல் பலாத்காரம், , சிறுவர் சீர்திருத்தப்பள்ளி, காஸியாபாத் மதரசா , 17 வயது சிறுவன் கைது , 
Delhi madrasah, child rape, child rehabilitation school, ghaziabad madrasah, 17-year-old boy arrested,

புதுடில்லி : டில்லி அருகே, மதரசாவுக்குள், 11 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

டில்லியில் உள்ள, காஸிபூர் என்ற இடத்தில் வசிக்கும், 11 வயதுச் சிறுமி, சமீபத்தில் கடைக்குச் சென்றாள். அப்போது, 17 வயதுச் சிறுவன், அந்த சிறுமியை மதரசாவுக்கு அழைத்துச் சென்றான். அங்கு, அந்தச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துஉள்ளான்.இதற்கிடையில், கடைக்குப் போன சிறுமியை காணவில்லை என, பெற்றோர் புகார் செய்தனர்.

போலீசார், கடை வீதியில் இருந்த, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். சிறுமியை ஒருவன் அழைத்துச் செல்வது தெரிந்தது. இதையடுத்து, சிறுமியிடம் இருந்த, அலைபேசி எண்ணை வைத்து தேடினர். காஸியாபாத் மதரசா அருகே, சிறுமியின் அலைபேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சென்று விசாரித்து, மதரசாவுக்குள் மயங்கிக்கிடந்த சிறுமியை மீட்டனர்.

மருத்துவப் பரிசோதனையில், சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிறுமியைக் கடத்திச் சென்ற, 17 வயது சிறுவன் மீது, வழக்குப் பதிவு செய்து, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். மதரசா நிர்வாகியை கைது செய்யக்கோரி, சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

Advertisement
வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
27-ஏப்-201818:37:44 IST Report Abuse
Lion Drsekar ஒன்று மட்டும் உண்மை ஜனநாயக நாட்டில் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீரவிசாரிபபது அதைவிட மிகப் பெரிய பொய், எதை உண்மை என்று எடுத்துக்கொள்வது? மக்களை யார் நடத்துகிறார்கள்? ஜாதியா மதமா கட்சிகளோ தீவிரவாதிகளா என்றே புரியாத ஒரு நிலை? காரணம் இப்படிப்பட்ட செய்திகள் மட்டுமே வெளிவந்து கொண்டு இருக்கிறது, முன்னாள் தீவிரவாதி தற்போதைய அமைச்சர், இன்றய தினமலரில் வந்த செய்தி, ? இப்படி இருக்க வரும் செய்திகளை படித்து விட்டு மறப்பதே நல்லது, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
nandaindia - Vadodara,இந்தியா
27-ஏப்-201811:26:15 IST Report Abuse
nandaindia எங்கே போனார்கள் நம் மதசார்பற்ற நல்லுள்ளங்கள். பாஜக என்றதும் ஓடோடி வந்து கடும் கண்டனம் தெரிவித்த சுடாலின், சைமன், குருமா, டேனியல் காந்தி, கமல் மற்றும் இன்ன பிறர். ஒருவேளை ஹிந்து அல்லாதவர் என்பதால் மவுனம் காக்கிறார்களோ?
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
27-ஏப்-201811:12:42 IST Report Abuse
Bhaskaran இருவரின் பெயர் மற்றும் மதம் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்பட்டது ஏனோ எந்த சிறுபான்மையினரை திருப்திப்படுத்தவோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X