கிம் ஜோங் உன் - மூன் ஜே பேச்சுவார்த்தை| Dinamalar

கிம் ஜோங் உன் - மூன் ஜே பேச்சுவார்த்தை

Updated : ஏப் 27, 2018 | Added : ஏப் 27, 2018 | கருத்துகள் (32)
Advertisement
Kim Jong un, Moon Jae in, Korean president,
கிம் ஜோங் உன்- மூன் ஜே சந்திப்பு,அணுஆயுதமற்ற நாடாக கொரியாவை மாற்றுவது குறித்து பேச்சுவார்த்தை, வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே, கொரியா உச்சி மாநாடு,  வட- தென் கொரிய அதிபர்கள் ,
Kim Jong un-Moon Jae meeting, talks about changing Korea as a nuclear-armed country,
 North Korean President Kim Jong un, South Korean President Moon Joe, Korea Summit, North-South Korean Presidents,

பான்மூன்ஜோம் : வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், தென் கொரிய அதிபர் மூன் ஜேவை சந்தித்தார். இச்சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகள் ஆன பின் முதன்முறையாக, வடகொரிய அதிபராக உள்ள கிம் ஜோங் உன், தென் கொரியா சென்றார். இருநாடுகள் இடையிலான உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தென் கொரியா சென்ற கிம்மிற்கு, இருநாட்டு எல்லையில் தென் கொரிய அதிபர் மூன் ஜே வரவேற்பு அளித்தார். அணுஆயுதமற்ற நாடாக கொரியாவை மாற்றுவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

முன்னதாக, கிம் ஜோங் உன் தொடர்ச்சியாக 6 அணு ஆயுத சோதனைகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை மிரள வைத்தார். இதற்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து மேற்கொண்ட சமாதான முயற்சியினால் வட, தென் கொரிய அதிபர்கள் சந்தித்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் - கிம் ஜோங் உன் சந்திப்பு மே மாதம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
27-ஏப்-201815:40:37 IST Report Abuse
Kuppuswamykesavan இந்த அன்பு அமைதி சகோதரத்துவம் மனிதநேயம், எங்கு, எந்த நாட்டில், முற்றிலும் அழிக்கப்பட்டாலும், அந்த நல்ல விசயங்கள், மீண்டும் மீண்டும், முளைவிட்டு, பெரும் விருட்சங்களாக(மரங்கள்) வளரத்தொடங்கும் எனலாம். இவைகள், இயற்கையின் அதிசய குணங்கள் எனலாம்.
Rate this:
Share this comment
Cancel
27-ஏப்-201814:29:51 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் வடகொரியா சோற்றுக்கு வழி இல்லாததால் தான் தென்கொரியாவிடம் இறங்கி வந்திருக்கிறது. தென்கொரிய உலகளவில் வர்த்தகத்தில் மிகவும் முன்னேறி இருக்கிறது , தென்கொரியாதான் மனிதாபிமான அடிப்படையில் வடகொரியாவுக்கு உணவு பொருட்கள் வழங்கி வந்தது. அதனால் தான் தற்போது ஆயுதம் சோறுபோடாது என்று இறங்கிவந்திருக்கிறார் இந்த சர்வாதிகாரி.
Rate this:
Share this comment
Cancel
27-ஏப்-201812:36:30 IST Report Abuse
SharbudeenMohamedKassim ithu nalla thodakkam! best wishes for both leaders.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X