கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
 சென்னை, உயர் நீதிமன்றம், உத்தரவுகள், தி.மு.க.,பளார்

சென்னை: தி.மு.க.,வுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், சபாநாயகர் முடிவுக்கு எதிராக அந்த கட்சி தொடர்ந்த இரண்டு வழக்குகளையும், உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சட்ட சபையில் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓட்டளித்த, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும், 10 எம்.எல்.ஏ.,க்களை, தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு, நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. அதுபோல, ஜெயலலிதா படத்தை அகற்ற கோரிய வழக்கையும், தள்ளுபடி செய்த நீதிபதிகள், 'நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்த கூடாது' என, தி.மு.க.,வுக்கு கண்டனமும் தெரிவித்தனர்.

 சென்னை, உயர் நீதிமன்றம், உத்தரவுகள், தி.மு.க.,பளார்


முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அ.தி.மு.க., அமைச்சரவை யில் மூத்த அமைச்சராக இருந்த பன்னீர் செல்வம், முதல்வர் ஆனார். சசிகலாவின் நிர்ப்பந்தத்தால், பதவியை ராஜினாமா செய்தார். சசிகலா ஆதரவாளராக இருந்த பழனிசாமி, முதல்வராக பதவியேற்றார். பன்னீர்செல்வம் தலைமையில், தனி அணி இயங்கியது.

சட்டசபையில், பெரும்பான்மையை நிரூபிக்கும் படி, பழனிசாமிக்கு, கவர்னர் உத்தரவிட்டார். 2017 பிப்ரவரியில், நம்பிக்கை தீர்மானம், சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. முதல்வர் பழனிசாமி அரசுக்கு எதிராக, பன்னீர்செல்வம் உள்ளிட்ட, அவரின் ஆதரவு, 11 எம்.எல்.ஏ.,க்கள், ஓட்டு அளித்தனர். எனினும், பெரும்பான்மை இருந்ததால், பழனிசாமி அரசு வெற்றி பெற்றது.

பின், பழனிசாமி அணியும், பன்னீர்செல்வம் அணியும் இணைந்தன. துணை முதல்வராக பன்னீர்செல்வம், அமைச்சராக பாண்டியராஜன் நியமிக்கப்பட்டனர். இவர்கள், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கினர். இதனால், 18 எம்.எல்.ஏ.,க்கள், சசிகலாவுக்கு ஆதரவாக இறங்கினர். சசி ஆதரவு, 18 எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, கவர்னரிடம் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, அரசுக்கு

எதிராக செயல்படுவ தாக கூறி, 18 பேரையும், தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓட்டு போட்ட, பன்னீர் செல்வம் உள்ளிட்ட, 11 பேரை யும், தகுதி நீக்கம் செய்யக் கோரி, சட்டசபை, தி.மு.க., கொறடா சக்கரபாணி, உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்தார்.

சசி ஆதரவு, எம்.எல்.ஏ.,வாக இருந்த வெற்றி வேலும், 11 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி, தனியாக மனு தாக்கல் செய்தார். மனுக்களை, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்துாஸ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது.

பன்னீர்செல்வம் தரப்பில், மூத்த வழக்கறிஞர், சி.எஸ்.வைத்தியநாதன், வழக்கறிஞர் திருமாறன் உள்ளிட்டோர் ஆஜராகினர். இவ்வழக்கில், நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சக்கரபாணி மற்றும் வெற்றிவேல் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. 'சபாநாயகருக்கு, நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா என்ற பிரச்னை, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது' என, முதல் பெஞ்ச் கூறியுள்ளது.

அதுபோல், சட்டசபையில் திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்தை அகற்றக் கோரி, தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் தாக்கல் செய்த மனுவையும், 'முதல் பெஞ்ச்' நேற்று தள்ளுபடி செய்தது. 'சட்டசபையில், யார் படத்தை வைக்கலாம் என்ற, நிர்வாக ரீதியான சபாநாயகர் முடிவில், நீதிமன்றம் தலையிட முடியாது' என, முதல் பெஞ்ச் உத்தரவிட்டு உள்ளது. மேலும், நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்த கூடாது எனவும், கண்டித்தது.

'குட்கா' விற்பனை தொடர்பான வழக்கில், நேற்று முன்தினம், சி.பி.ஐ., விசாரணைக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், தி.மு.க., வினர் குஷியாக இருந்தனர். அதே நேரம், நேற்றைய இரு வழக்குகளிலும், உயர்நீதிமன்ற உத்தரவுகள் எதிராக அமைந்ததால்,

Advertisement

தி.மு.க., வினர், உற்சாகம் இழந்தனர். தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, சசி ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களாக இருந்த, 18பேர் தாக்கல் செய்த மனுக்களை, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய, பெஞ்ச்' விசாரித்தது. இவ்வழக்கில், ஜனவரியில் விசாரணை முடிந்து, தீர்ப்பை, முதல் பெஞ்ச் தள்ளி வைத்துள்ளது.

சட்ட போராட்டம் தொடரும்


தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை:பன்னீர்செல்வம் அணியின்11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 'எம்.எல்.ஏ.,க்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என சபாநாயகருக்கு நீதிமன்றம் அறிவுறுத்த முடியாது' என கூறியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றத் தால் குற்றம் நிரூபிக்கப்பட்ட முதல் குற்றவாளியான, ஜெயலலிதா படம் சட்டசபையில், திறந்து வைக்கப்பட்டதை எதிர்த்து தி.மு.க., தொடரப்பட்ட வழக்கிலும் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலையிட முடியாத நிலையில், எதற்காக மனுக்களை விசாரணைக்கு எடுத்து, இவ்வளவு காலம், தீர்ப்பை தள்ளி வைத்திருக்க வேண்டும் என்பது, சாதாரண மக்களின் கேள்வி.

அந்தக் கேள்வியை பிரதிபலிக்கும் பொருட்டு, நீதித் துறை மீதுள்ள நம்பிக்கையின் அடிப் படையில், உச்ச நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சட்டத்தில் தடையில்லை!


'ஊழல் வழக்கில் குற்றவாளி என, தீர்ப்பு அளிக்கப்பட்டவரின் உருவப்படத்தை வைப்பதற்கு, சட்டத்தில் தடை இல்லாத போது, அந்த விஷயத்தில், நீதிமன்றம் தலையிட முடியாது' என, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, அப்துல் குத்துாஸ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:ஊழல்வாதி ஒருவரை பெருமைப்படுத்துவது, தார்மிக ரீதியில் தவறாக இருக்கலாம். ஆனால், ஊழல் வழக்கில் குற்றவாளி என, தீர்ப்பு அளிக்கப்பட்ட வரின் உருவப்படத்தை வைப்பதற்கு, சட்டத் தில் தடை இல்லாத போது, அந்த விஷயத்தில், நீதிமன்றம் தலையிட முடியாது.அவ்வாறு செய்தால், அது, சட்டம் அனுமதிக்காத நிலையில், தண்டனை விதிப்பது போலாகும்.

சட்டசபையில் ஒருவரது உருவப்படத்தை வைக்கலாமா... யார் புகைப்படத்தை வைக்க லாம் என்பதெல்லாம், சபாநாயகர் முடிவெடுக்க வேண்டிய விஷயம். சபாநாயகர் எடுத்த நிர் வாக ரீதியான முடிவில், நீதிமன்றத் துக்குரிய அதிகார வரம்பை செயல்படுத்த முடியாது. எனவே, மனு தள்ளுபடி செய்யப் படுகிறது. இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (118)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
03-மே-201802:03:53 IST Report Abuse

Rajeshநல்ல திருடுங்கடா............

Rate this:
Rajesh - Chennai,இந்தியா
03-மே-201802:02:19 IST Report Abuse

Rajeshநீதிமன்றத்திற்கு ரொம்ப நன்றி.......... இனி எல்லோரும் நல்ல நிம்மதியா திருடுவாங்க, DMK உள்பட

Rate this:
Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா
29-ஏப்-201815:32:22 IST Report Abuse

Rajhoo Venkateshஒரு நாள் சபாநாயகரின் தீர்ப்பை ரத்து செய்றாங்க அடுத்த நாள் சபாநாயகரின் அதிகாரத்தில் தலை இ டமுடியாது என்று சொல்லுறாங்க. இப்போ முட்டாள்கள் யார் நம்மள இல்லை..........?

Rate this:
மேலும் 115 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X