அருப்புக்கோட்டை, ''அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்துார் பகுதிகளுக்கு, புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக,'' சாத்துார் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., கூறினார்.
அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நடந்த,குடிநீர் மற்றும் சுகாதாரம் குறித்த ஆய்வு கூட்டத்தில் அவர் கூறியதாவது:
அருப்புக்கோட்டை, சாத்துார், விருதுநகர் பகுதிகளுக்கான புதிய தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் 420 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான திட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதன் மூலம் அருப்புக்கோட்டைக்கு கூடுதலாக தினம் 116லட்சம் லிட்டர், விருதுநகருக்கு 86லட்சம் லிட்டர், சாத்துாருக்கு 26லட்சம் லிட்டர் தண்ணீரும் கிடைக்கும்.
புதிய குடிநீர் திட்ட பணிகளை அரசு துரிதமாக செயல்படுத்தி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என்றார்.- - - -- -