அரசியல் செய்தி

தமிழ்நாடு

சம்பளத்துக்கே சரியா இருக்கு : புள்ளிவிபரம் தரும் முதல்வர்

Added : ஏப் 28, 2018 | கருத்துகள் (31)
Share
Advertisement
சேலம் : தமிழக அரசின் பெரும்பகுதி நிதி, அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கே செலவாகிறது, அதனால், கூடுதல் சம்பளம் கேட்டு போராடுவோர் சிந்திக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி பேசினார்.சேலம் மாவட்டம், இடைப்பாடியில் புதிய கட்டடங்கள் திறப்பு மற்றும் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது, தமிழகத்தில் எட்டு கோடி பேர் உள்ளனர். 13 லட்சம் அரசு
அரசு ஊழியர்கள் சம்பளம், முதல்வர் பழனிசாமி, அரசு ஊழியர்கள், ஏழாவது ஊதியக்குழு சம்பளம், கூடுதல் சம்பளம் கேட்டு போராட்டம் , 
Government employees salary, Chief Minister Palanisamy, Government employees, Seventh Pay Commission salary,

சேலம் : தமிழக அரசின் பெரும்பகுதி நிதி, அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கே செலவாகிறது, அதனால், கூடுதல் சம்பளம் கேட்டு போராடுவோர் சிந்திக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி பேசினார்.
சேலம் மாவட்டம், இடைப்பாடியில் புதிய கட்டடங்கள் திறப்பு மற்றும் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
இதில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது, தமிழகத்தில் எட்டு கோடி பேர் உள்ளனர். 13 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. இன்னும் கூடுதல் சம்பளம் வேண்டும் என ஊழியர்கள் போராடுகின்றனர்.

'சம்பளத்துக்கே சரியா இருக்கு'

மாநில அரசு மூலம் 69, மத்திய அரசு மூலம் 31 சதவீத வரி அரசுக்கு கிடைக்கிறது. இதில் மாநில வரியில் 61 சதவீதம் ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. மீதிர வரி மூலம் 7.87 கோடி பேருக்கு தேவையான திட்டப்பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், போராடும் அரசு ஊழியர்கள் அவர்களை தூண்டும் எதிர்க்கட்சியினர் இதை சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
29-ஏப்-201812:28:19 IST Report Abuse
Malick Raja ஐயா முதல்வரே .. திமுக ஆட்சியை விட்டு வெளியே வந்தபோது கடன் தொகை எவ்வளவு .. இப்போது அந்த கடன் எழவு எவ்வளவு என்பதை சொல்லி ஓட்டுக்கேட்டால் சரியாக இருக்கும் .. மண்ணுக்கு சென்ற உங்களின் அம்மா சும்மா சொல்லி ஓட்டு வாங்கியது .. உங்க அம்மா ஜெயிலுக்கு போனது .. ஊழல் உறுதியாகி சொத்துக்களை பறிமுதல் இப்படி பல அலங்காரங்களை கொண்ட அதிமுகவுக்கு பாடை ஒன்றுதான் சரியாக இருக்கும் அது விரைவில் வரும்
Rate this:
Cancel
rajan. - kerala,இந்தியா
28-ஏப்-201820:27:59 IST Report Abuse
rajan.  நல்லது தானே. கஜானா கைக்கும் வாய்க்கும் மட்டும் இருந்தா போதுமே. அதுக்கு மேல கஜானாவில் பணம் வந்தா நாட்டை பத்தியும் மக்களை பத்தியும் உள்ள கவலை பறந்து போயி மும்முரமா ஆட்டைய அவனவன் போடா துவங்கிடுவீங்கல்ல . அப்பாடி கொஞ்ச நாளைக்கு தமிழ்நாட்டிலே லஞ்ச ஊழலுக்கு ரெஸ்ட் கொடுத்திருக்கீங்க. ஒரு ஓ போட்டு சபாஷ் பழனியப்பா. இது அம்மா வழியாட்சிடோய். இப்படியே போனால் கண்டெயினரை துறந்து தான் ஆட்சியை நடத்த வேண்டி வரும். அந்த நாளுக்கு வாழ்த்துக்களப்பா.
Rate this:
Cancel
Rani - New York,யூ.எஸ்.ஏ
28-ஏப்-201819:18:29 IST Report Abuse
Rani ஒரு அமைச்சர் வைத்திருப்பதே அந்த 69 % ஐ விட அதிகம் .... ஆடு நனையுதுனு ஓநாய் கவலை பட்ட மாதிரி ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X