ஆட்சிக்கு வந்தால் ஒரு கோடி பேருக்கு வேலை: காங்., தேர்தல் வாக்குறுதி

Updated : ஏப் 28, 2018 | Added : ஏப் 28, 2018 | கருத்துகள் (99)
Share
Advertisement
காங்கிரஸ் வாக்குறுதி,காங்கிரஸ் தலைவர் ராகுல், கர்நாடகா தேர்தல், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, ஒருகோடி பேருக்கு வேலை வாய்ப்பு, 
Congress promise, Congress leader Rahul, Karnataka election, Congress election statement, employment for one crore,

பெங்களூரு: கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த மாதம், 12ல், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.

காங்., மற்றும், பா.ஜ., கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.மங்களூரில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில், கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான, காங்., தேர்தல் அறிக்கையை, கட்சி தலைவர் ராகுல் வெளியிட்டு பேசியதாவது:பா.ஜ., தேர்தல் அறிக்கை, அதன் தலைவர்களால் தயாரிக்கப்படுகிறது. காங்., கட்சியின் தேர்தல் அறிக்கையில், மக்களின் குரல் எதிரொலிக்கும். 2013 தேர்தலின் போது, அளிக்கப்பட்ட வாக்குறுதிகள், 95 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கர்நாடகாவில், ஒரு கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.


முக்கிய அம்சங்கள்:

*விவசாயிகள் நலனுக்கு ஆணையம் அமைக்கப்படும்
*அனைவருக்கும் இலவச கல்வி
*லோக் ஆயுக்தா உரிமைகள் மீட்கப்படும்
*ஊழல் முற்றிலும் ஒழிக்கப்படும்
*அனைத்து கிராமப்புற பஞ்சாயத்துகளிலும், 'வை - பை' இணைப்பு வழங்கப்படும்
*அடுத்த ஐந்து ஆண்டுகளில், அரசு மற்றும் தனியார் துறைகளில், ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
*கல்லுாரி மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட் போன்' வழங்கப்படும்
*அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பில், திருநங்கையருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்
*வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு, நியாய விலை கடை மூலம், இலவச, 'சானிட்டரி நாப்கின்' வழங்கப்படுவதுடன், நாப்கின் மீதான வரி நீக்கப்படும்.

Advertisement




வாசகர் கருத்து (99)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arabuthamilan - Manama,பஹ்ரைன்
29-ஏப்-201811:38:38 IST Report Abuse
arabuthamilan வேலை வாய்ப்பு எல்லாம் கிடக்கட்டும். இனிமேல் நாங்கள் லஞ்சம் வாங்க மாட்டோம். லஞ்சம் கொடுப்பவர்களை, வாங்குகிறவர்களையும் (அரசியல்வாதி, அதிகாரிகள் அமைச்சர்கள் உட்பட) தூக்கில் போடுவோம் என்று வாக்குறுதி கொடுப்பவர்களுக்கு மட்டும் ஓட்டு போடுங்கள் மக்களே.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
29-ஏப்-201809:33:10 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அனைவருக்கும் வீடுன்னு அமீத் சா சொன்னா கைதட்டி வரவேற்றார்கள்..
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
29-ஏப்-201808:02:27 IST Report Abuse
Srinivasan Kannaiya நடக்காத ஒன்றை பற்றி பேசுவதில் அரசியல்வாதிகள்..கில்லாடிகள்... தலைக்கு வங்கியில் பதினைய்ந்து லட்சம் டெபாசிட் மாதிரிதான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X