சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் விடிய விடிய சோதனை: குட்கா பறிமுதல்

Added : ஏப் 28, 2018 | கருத்துகள் (8)
Share
Advertisement

கோவை: கோவை, சூலூர் அருகேயுள்ள கண்ணமபாளையம் நல்லான் தோட்டம் என்ற பகுதியில் டில்லியை சேர்ந்த ஜெயின் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இங்கு தொழிற்சாலை அமைத்து தமிழக அரசால், தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, சாந்தி பாக்கு உள்ளிட்ட போதை பொருட்கள் தயார் செய்யப்படுவதாக கோவை மாவட்ட எஸ்பி மூர்த்திக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று இரவு 7 மணியளவில் பங்களா தோட்டத்திற்குள் போலீசார், உணவு பாதுகாப்பு துறை தனி அலுவலர் மற்றும் வருவாய் துறையினர். சூலூர் துணை தாசில்தார் மற்றும் மதுவிலக்கு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது குட்கா தொழிற்சாலை செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தயாரிக்கப்பட்டு பேக்கிங் செய்துகோவை மற்றும் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கும் சப்ளை செய்யப்படுவது தெரியவந்தது. மேலும் 2 மூட்டைகளில் போதை பாக்குகள் தயார் செய்யப்பட்டு இருந்ததும், 20 டன் மூலப்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று இரவு துவங்கிய சோதனை விடியவிடிய நடந்தது. சோதனையின் போது யாரும் அனுமதிக்கப்படவில்லை. குட்கா தொழிற்சாலையின் மேலாளர் ரகு என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவையில் குட்கா தொழிற்சாலை

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
28-ஏப்-201817:56:56 IST Report Abuse
Endrum Indian நேற்று காலை தான் இந்த தொழிற்சாலை கட்ட ஆரம்பித்தார்கள், உடனே பிடித்து விட்டார்கள் அப்படித்தானே??? என்ன ஒரு ஏமாற்று வேலை?????இன்னும் எவ்வளவு வருடம் இந்த திராவிடம் மக்களை ஏமாற்றுமோ???நாராயாணா இந்த கலி காலம் திராவிட விஷம் எப்போ தான் முடியுமோ??????
Rate this:
Cancel
Raj Pu - mumbai,இந்தியா
28-ஏப்-201817:53:52 IST Report Abuse
Raj Pu நமக்கு வடஇந்தியா போனால் அந்த மொழி தெரியவேண்டும், இவர்கள் இங்கு வர உள்ளூர் மொழி வேண்டாம், அதற்கு தான் நம்மக்களை ஹிந்தி ஹிந்தி படி என்று அடித்து கூறுகிறார்கள் என்று தெரிகிறது, இனி இங்கு எல்லோரும் ஹிந்தி பேசினால் அந்த மாநிலங்களை போல இங்கும் நல்ல வளர்ச்சி வந்து விடும் கலாச்சாரத்தில்
Rate this:
Cancel
Raj Pu - mumbai,இந்தியா
28-ஏப்-201817:52:08 IST Report Abuse
Raj Pu வடநாட்டு மக்களின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு புகலிடமாக மாறிவருகிறது, இவர்களுக்கு அவரசியல் செல்வாக்கும் உள்ளூர் தொடர்புகளும் இல்லாது நடக்கமுடியாத, இந்த மக்கள் வந்த பிறகு தான் பிஜேபி சப்தம் அதிகமாக தமிழ்நாட்டில் கெடுகிறது, எல்லா பனம்பூழக்கமும் இவர்கள் தயவில் இருக்கும் போல தெரிகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X