மழைநீரை சேமிக்க வேண்டும்: மோடி வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மழைநீரை சேமிக்க வேண்டும்: மோடி வலியுறுத்தல்

Added : ஏப் 29, 2018 | கருத்துகள் (57)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
MannKiBaat,PM Modi,Rainy Water, மழைநீர், பிரதமர் மோடி, மன்கி பாத், சுத்தமான இந்தியா,  4வது சர்வதேச யோகா தினம், காமன்வெல்த் போட்டி 2018 வெற்றி , மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்,மோடி பேச்சு , 
 Prime Minister Modi,  Clean India, 4th International Yoga Day, Commonwealth Games 2018 wins, Mahatma Gandhi National Rural Employment Scheme, Modi Talks,

புதுடில்லி: அடுத்த தலைமுறையினருக்காக நாம் அனைவரும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் ரேடியா மூலம் பிரதமர் மோடி பேசியதாவது:


பெருமை


காமன்வெல்த் போட்டியில், இந்திய மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நமது வீரர்கள் விளையாடியுள்ளனர். தேசிய கொடியுடன் வெற்றி பெற்ற வீரர்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதனை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. அவர்கள் நமக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன்


உடற்பயிற்சி


உடல் தகுதி குறித்து எனக்கு ஏராளமான கடிதங்கள் மற்றும் ஆலோசனைகள் வந்துள்ளன. இது பெருமை அளிக்கிறது. அனைவரும் உடலை கட்டுகோப்பாக வைத்து கொள்ள உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல்நலத்துடன் இருக்க யோகா முக்கியமானது. 4வது சர்வதேச யோகா தினத்தை சிறந்த தினமாக மாற்ற வேண்டும்.


தூய்மை இந்தியா


சுத்தமான இந்தியாவுக்கு நமது பங்களிப்பை நாம் அளிப்போம். தேர்வு முடிந்து விடுமுறையில் உள்ள இளைஞர்கள் மத்திய அரசு அளிக்கும் பயிற்சியில் இணைய வேண்டும். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.


தண்ணீர் சேமிப்பு


தண்ணீரை சேமிக்க நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதனை மக்கள் இயக்கமாக மாற வேண்டும். அடுத்த தலைமுறையினருக்காக ஒவ்வொருசொட்டு நீரையும் சேமிக்க வேண்டும். தண்ணீரை சேமிப்பது குறித்து நமது முன்னோர்களிடமிருந்து பாடம் கற்று கொள்ள வேண்டும். தண்ணீர் சேமிக்க மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. இது தவிர தண்ணீர் சேமிப்பு மற்றும் மேலாண்மைக்காக சராசரியாக 32 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 150 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பயனடைந்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kansami Ponsami - Thoothukudi,இந்தியா
29-ஏப்-201823:31:03 IST Report Abuse
Kansami Ponsami ஐயா நீரை சேகரிக்க சொல்லி பேச்சு பேசுறீங்க..தமிழ்நாட்டுல இயற்கை வளங்களை அபகரிக்க மக்களையும் நிலங்களையும் சேதப்படுத்தி விவசாயத்தை நசுக்குறீங்க..இப்ப சமீபத்துல திண்டுக்கல் நகரம் அருகே கனிமவள ஆய்வு செய்ரவனுவ மிகவும் சக்தி வாய்ந்த அணுகுண்டை வச்சி மாவட்டமே அதிரும் அளவு எதோ செஞ்சிடிருக்கானுவ...ஆனா ஹரியானா நில நடுக்கத்தோடு எப்பக்ட்டுன்னு பிலிம் காமிக்கிறீங்க..நிலநடுக்கமும் ஊர் முழுக்க சத்தம் கேட்டு அதிர்ந்த அதிர்வும் நிலநடுக்கம்னு நம்ப தமிழன் ஒன்னும் குசராத்தியோ இல்ல ராஜஸ்தானியோ இல்ல..ஒங்க மொகம் ஒன்னு இல்ல சாமி ரெண்டு..நாட்டை காலாவதி ஆகிட்டு இருக்கீங்க...அடுத்து ஒரு வடநாட்டு பயலுக நாம இந்தியாவுக்கு ஒரு பய பிரதமரா வந்திரக்கூடாது..வந்தானுவன தென்னாட்டை இன்னும் கூறு போட்டு இல்லாம பண்ணிடுவானுவ..ங்கொய்யால நாட்டையும் மக்களையும் கொஞ்ச கொஞ்சமா சாவடிச்சிட்டு இருக்கானுவ கடந்த நாலு வருஷமா...
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
29-ஏப்-201821:41:29 IST Report Abuse
BoochiMarunthu இவர் தண்ணியை பத்தி பேசிட்டார் . அப்போ சீக்கிரம் கை வைக்கப்போறார் . இந்தியாவுக்கு தண்ணியில் பெரிய கண்டம் வரப்போகுது என்று அர்த்தம் . எல்லாம் தப்பிச்சசு ஓடுங்கள் .
Rate this:
Share this comment
Cancel
29-ஏப்-201821:06:32 IST Report Abuse
ஆப்பு ஏதோ வெளிநாடுகளுக்குப் போய்ப் போய் பாத்துட்டு வந்து புதுசா ஏதாவது செய்வார்னு பாத்தா, பழைய பாத்திரத்தையே போட்டு உருட்டுறாரே....அப்போ தமிழ்நாட்டுக்கு காவேரி அவ்ளோதானா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X