பொது செய்தி

தமிழ்நாடு

பச்சைபட்டுடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்

Updated : ஏப் 30, 2018 | Added : ஏப் 30, 2018 | கருத்துகள் (24)
Advertisement
வைகை, கள்ளழகர்

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று காலை, 5:48 மணிக்கு, தங்க குதிரை வாகனத்தில், பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளினார். அவரை வீரரராகவ பெருமாள் வரவேற்றார். இலட்சக்கணக்கான மக்கள், வைகை ஆற்றில் குழுமி இருந்தனர். இவர்களின் பாதுகாப்பிற்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அழகர் கோவிலிலிருந்து புறப்பட்ட கள்ளழகர், நேற்றிரவு, 9:30 மணிக்கு, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில், தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இன்று அதிகாலை, தல்லாகுளம் கருப்பண சுவாமி கோவிலில் வெட்டிவேர், ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அங்கிருந்து புறப்பட்ட அழகர், பக்தர்கள் புடைசூழ, 'கோவிந்தா, கோவிந்தா' கோஷம் முழங்க, காலை, 5:45 - 6:15 மணிக்குள், வைகை ஆற்றில் இறங்கினார்.அங்கிருந்து, காலை, 7:25 மணிக்கு புறப்பட்ட அழகர், மதியம், 12:00 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். இரவு, 11:00 மணிக்கு, வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு செல்கிறார்.நாளை காலை, 11:00 மணிக்கு, சேஷ வாகனத்தில் புறப்படும் அழகர், தேனுார் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி, மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். மே, 4, காலை, 9:30 மணிக்கு, அழகர் கோவில் செல்கிறார்.



Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
30-ஏப்-201816:23:27 IST Report Abuse
Loganathan Kuttuva திருவிழா அன்று வைகை நதியில் தண்ணீர் ஓடியது வைகை அணையிலிருந்து வந்த தண்ணீர்.
Rate this:
Share this comment
Cancel
Vinod K - London,யுனைடெட் கிங்டம்
30-ஏப்-201815:06:04 IST Report Abuse
Vinod K கோவிந்தா கோவிந்தா
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - koodal,இந்தியா
30-ஏப்-201814:11:17 IST Report Abuse
வல்வில் ஓரி ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தெறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கருத்துப் பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்க்ழிநீ ராட மக்ழ்ந்தேலோ ரெம்பாவாய்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X