பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 2000 மெகாவாட் மின்பற்றாக்குறை

Added : ஏப் 30, 2018 | கருத்துகள் (25)
Advertisement
தமிழகம், மின்பற்றாக்குறை, மின் உற்பத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, சி.ஐ.டி.யு., அனல்மின் நிலையத்தில் உண்ணாவிரதம், கோடைவெயில், கோடைகாலம் , 
Tamil Nadu, Power shortage, Power generation, CITU, Thermal Power Station, Summer,

சென்னை: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு(சி.ஐ.டி.யு.) மாநில செயற்குழு கூட்டம் அதன் மாநில தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் தலைமையில் சென்னையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநில செயற்குழுவில் 4 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. கோடைவெயில் அதிகரித்துள்ள நிலையில் மின்துறை அமைச்சர் தேவையான மின்சாரம் இருக்கிறது என்றும், தடையின்றி வழங்க முடியும் என்றும் சொல்கிறார். அது உண்மையல்ல. தேவைக்கு ஏற்ப மின்சார உற்பத்தி தமிழகத்தில் இல்லை. அதனால் அனல், அணு மின்நிலையங்களில் இருந்தும், மத்திய தொகுப்பில் இருந்தும் கூடுதல் மின்சாரத்தை கேட்டு பெறுவதோடு, வெளியில் குறைந்த விலையில் மின்சாரத்தை வாங்கி வினியோகம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறோம்.

தமிழகத்தில் உற்பத்தி திறன் 25,800 மெகாவாட் என்று அரசு சொல்கிறது. தற்போதைய உச்சக்கட்ட மின்தேவை 15,600 மெகாவாட்டை எட்டி இருக்கிறது. காற்றாலை, நீர்மின் நிலையங்களில் பருவகாலத்தில் தான் உற்பத்தி இருக்கும் என்பதால் அதை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. தற்போதைய மின்தேவையில் 2000 மெகாவாட் மின்பற்றாக்குறை இருக்கிறது. இதை சமாளிக்கத்தான் முன்னறிவிப்பில்லாத மின்வெட்டு ஆங்காங்கே ஏற்படுகிறது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்து, குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வலியுறுத்தி மே 22-ந்தேதி 4 அனல்மின் நிலையத்திலும் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பது என்றும், பிரச்சினை தீராவிட்டால் ஜூன் 27-ந்தேதி உள்ளிருப்பு வேலைநிறுத்தம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் மின்வினியோக பிரிவு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய ரூ.380 ஊதியத்தை அளிக்க வலியுறுத்தி நீதிமன்றம் செல்லவும், ஜூன் மாதத்தில் குடும்பத்தோடு போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மின்வாரிய பகுதிநேர ஊழியர்களை நிரந்தரப்படுத்தக்கோரி மண்டலரீதியாக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். மின்சார பொதுத்துறையை பாதுகாக்க வலியுறுத்தி ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெற இருக்கிறது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
30-ஏப்-201820:44:04 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி எச்டேர்டே நெத்தூ தா எல்லருக்கும் கரண்ட் இரு கூ அப்டீநூ நியூஸ் போட்டங்க
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
30-ஏப்-201818:02:14 IST Report Abuse
Rpalnivelu போராடுங்கள், போரடிக் கொண்டே இருங்கள். திருட்டு கழகம், உண்டியல், நாம் டம்பளர் , சைதான்க்கோ, வண்டுமுருகன் மற்றும் பலர் போராடி ஒரு தொழிற்சாலையும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்ற நிலையை எட்ட வேண்டும். வாழ்க பஞ்சம் பட்டினி ஒழிக மோடி, ரஜனி, வளரச்சி. தமிழ் வாழ்க, தமிழ் வளர்க என்று பிதற்றிக்கொன்டே தமிழனை ஒழிப்பதே நம் கொள்கை.
Rate this:
Share this comment
Cancel
Sundaram - Thanjavur,இந்தியா
30-ஏப்-201817:49:43 IST Report Abuse
Sundaram thamilagam minvettu illatha manilamaga mara vendum
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X