பொது செய்தி

இந்தியா

இந்தியாவா...இந்'தீ'யாவா...: நாசா எச்சரிக்கை

Updated : ஏப் 30, 2018 | Added : ஏப் 30, 2018 | கருத்துகள் (71)
Share
Advertisement
புதுடில்லி: கடந்த 10 நாட்களில் கோடை காலத்தில் இந்தியாவின் நிலை குறித்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இதில் பல இடங்களில் தீ எரிவது புள்ளிகளாக காட்சி அளிக்கின்றன.இந்த தீ புள்ளிகள் கடும் கோடை வெயில், அதனால் கருங்கார்பன் துகள்கள், புவி வெப்பமயமாதல் அதிகரிப்பால் ஏற்படும் மாசுபாட்டை குறிப்பதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தீ புள்ளிகள் அதிக வெப்பத்தால்
நாசா விஞ்ஞானிகள் , தீ புள்ளிகள், கோடை வெப்பம்,  கோடை காலம், கடும் கோடை வெயில், கருங்கார்பன் துகள்கள், புவி வெப்பமயமாதல், காட்டுத்தீயால் வெளியாகும் புகையால் காற்று மாசுபாடு ,நாசா எச்சரிக்கை, இந்தியா,  காட்டுத்தீ, 
NASA scientists, India, wildfire, fire spots, summer heat, summer, heavy summer sunlight, dark Carbon particles, global warming, air pollution by wildfire,

புதுடில்லி: கடந்த 10 நாட்களில் கோடை காலத்தில் இந்தியாவின் நிலை குறித்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இதில் பல இடங்களில் தீ எரிவது புள்ளிகளாக காட்சி அளிக்கின்றன.

இந்த தீ புள்ளிகள் கடும் கோடை வெயில், அதனால் கருங்கார்பன் துகள்கள், புவி வெப்பமயமாதல் அதிகரிப்பால் ஏற்படும் மாசுபாட்டை குறிப்பதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தீ புள்ளிகள் அதிக வெப்பத்தால் ஏற்படும் காட்டுத்தீயை குறிப்பதாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.

நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தின்படி, மத்திய இந்திய மாநிலங்களான உ.பி., ம.பி., மகாராஷ்டிரா, சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களிலேயே அதிக தீ புள்ளிகள் காணப்படுகின்றன. தென் மாநிலங்கள் சிலவற்றில் குறைந்த அளவு தீப்புள்ளிகள் காணப்படுகின்றன.


இந்தியாவிற்கு நாசா எச்சரிக்கை

எச்சரிக்கை:


கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு, ஏற்படும் இந்த காட்டுத்தீயால் வெளியாகும் புகையால் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. வேலைக்கு போதிய ஆட்கள் கிடைக்காததாலும், விளை பொருட்களுக்கு ஏற்ப விலை கிடைக்காததால் பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் விவசாயிகளே விளை நிலத்திற்கு தீ வைத்த சம்பவங்கள் அதிகம் நடந்ததாலும் இந்த தீ புள்ளிகள் அதிகமாக காணப்படுவதாலும் இப்படி நடக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
06-மே-201812:01:46 IST Report Abuse
chinnamanibalan வட இந்தியாவில் பெரும்பாலும் சிவப்பு புள்ளிகள் தெரிகிறது.அதேவேளையில் தமிழக பகுதிகள் வெண்மையாக காட்சி அளிக்கிறது. ஒருவேளை தமிழகத்தில் ஊழலும், டாஸ்மாக்கும் அருவி போல் பெருக்கெடுத்து ஓடுவது காரணமாக இருக்குமா?
Rate this:
Cancel
Chelliah Jeyabal - Chennai,இந்தியா
06-மே-201809:13:39 IST Report Abuse
Chelliah Jeyabal அவை தீ அல்ல வாழ்வதற்க்கு வழி இல்லாமல் தவிக்கும் விவசாயிகளின் மனஎரிச்சல்.
Rate this:
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
02-மே-201813:25:19 IST Report Abuse
Syed Syed அல்லாஹ் எல்லோரையும் காப்பாத்தணும் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் மக்கள் நலமுடன் சந்தோஷமகே வாழனும் ஆமீன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X