'கிஸ்தி' விவகாரத்தில் அதிகாரிகள் 'குஸ்தி' கையில் கிடைச்சதை சுருட்டியதால், பயம் 'ஜாஸ்தி'

Added : மே 01, 2018
Advertisement
உச்சி வெயில், சுட்டெரித்து கொண்டிருந்த மதிய வேளையில், அவிநாசி சித்திரை தேர்த்திருவிழா தேரோட்டம் நடந்து கொண்டிருந்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல், பக்தர்கள் தேருக்கு முன்னும், பின்னும் அலைஅலையாய் சென்று கொண்டிருந்தன.ஒரு ரத வீதியில், உயரமான கட்டடம் ஒன்றில், தென்னை ஓலை கொட்டகைக்கு கீழ், திரண்டிருந்த பக்தர் கூட்டத்தில், சித்ராவும், மித்ராவும் இருந்தனர்.''அப்பா..
'கிஸ்தி' விவகாரத்தில் அதிகாரிகள் 'குஸ்தி'  கையில் கிடைச்சதை சுருட்டியதால், பயம் 'ஜாஸ்தி'

உச்சி வெயில், சுட்டெரித்து கொண்டிருந்த மதிய வேளையில், அவிநாசி சித்திரை தேர்த்திருவிழா தேரோட்டம் நடந்து கொண்டிருந்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல், பக்தர்கள் தேருக்கு

முன்னும், பின்னும் அலைஅலையாய் சென்று கொண்டிருந்தன.ஒரு ரத வீதியில், உயரமான கட்டடம் ஒன்றில், தென்னை ஓலை கொட்டகைக்கு கீழ், திரண்டிருந்த பக்தர் கூட்டத்தில், சித்ராவும், மித்ராவும் இருந்தனர்.''அப்பா.. என்ன.. வெயில்,'' என்றவாறு, தயாராக கொண்டு போன, மோரை குடித்து, ஆசுவாசப்படுத்திய சித்ரா, ''அங்கங்கே 'டோஸ்' விழ ஆரம்பித்த உடன் போலீஸ் அதிகாரிகள் போட்டி போட்டு வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க போல,'' என்றாள்.''டோஸ்' விழுந்ததோ இல்லையோ? எனக்குத் தெரிந்து 'லாஸ்' ஆக ஆரம்பிச்சிடுச்சாம். அதனாலதான், அதிகாரிகள் அதை சரிக்கட்ட வேண்டும் என தங்களுக்குள் மல்லுக்கட்டு நடத்துறாங்க,'' என்றாள் மித்ரா. ''என்ன சொல்கிறாய்? புரியற மாதிரி சொல்லு மித்து,'' என்று அலுத்து கொண்டாள் சித்ரா.''மாவட்ட ரூரல் பகுதியில், கோழிப்பண்ணையூரில், சில இடங்களில் சீட்டாட்ட கிளப் நடக்குதாம். அங்கிருந்த உள்ளூர் 'முத்தான' சிற்றரசருக்கு நேரடியாக கப்பம் கட்டிட்டு, பேரரசரான அதிகாரியை புறக்கணிச்சுட்டாங்களாம். இதனால், கோபப்பட்ட அதிகாரி, தனது படைகளை அனுப்பி, கிளப்புகளை ரெய்டு பண்ணிட்டார்'' ''இதனால், ஆத்திரம் அடைந்த சிற்றரசர், போன வாரம் 'சரக்கு' விற்பனை ரெய்டு, கள் விவசாயிகள் மீது நடவடிக்கை என்று தன் பங்குக்கு விளையாடியிருக்கிறார். ''இந்த ரெண்டு பேரோட பங்காளி சண்டையில், கப்பம் கட்டியவர்கள் தான் தலையில் துண்டை போட்டுட்டு நிக்கறாங்களாம்,''என்று விளக்கிய, மித்ரா, இரண்டு டம்ளர் மோர் குடித்தாள்.''லோக்கல் சிற்றரசர் பத்தி சொன்னாய். லண்டன் 'இளவரசி' பத்தி சொல்றேன் கேளு. இதே ஊரில், மேலதிகாரியின் ஆதரவால் தகுதியில்லாத பணி வழங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரி, டிரான்ஸ்பர் ஆகி போனதும், புதுசா வந்தவர், 'இளரவசி'யின் செல்வாக்கை சரிய வைச்சுட்டார்,''''ஆனாலும், மனம் தளராத அவர், அட்டெண்ட்ஸில் 'சைன்' பண்ணிட்டு, வீட்டுக்கு ேபாய் விடுகிறாராம். வேறெந்த டியூட்டியும் பார்ப்பதில்லை. புதுசா வந்திருக்கிற பெண் அதிகாரிக்கு இதெல்லாம் தெரியாதாம்,'' என்றாள் சித்ரா.''இந்த மாதிரி ஆட்களுக்கு, கலெக்டர் ஆபீசில், டெபுடேசன் டூட்டி போட்டாதான், வழிக்கு வருவாங்க,'' என்று சொன்ன மித்ரா, ''அக்கா.. அங்க பாருங்க. தேரோட மகுடம் தெரியுது,'' என்றாள். ''ஓ... அப்ப... பக்கத்துல தேர் வந்திடுச்சு,'' என்ற சித்ரா, தெருவில் பார்வையை, செலுத்தி, 'அடேங்கப்பா... என்ன கூட்டம்,'' என்று ஆச்சரியப்பட்டாள்.''ஆமாங்க்கா..'' என்று ஆமோதித்த மித்ரா, ''ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிங்க பயத்துல உறைஞ்சு போயிருக்காங்க,'' என்று வேடிக்கை பார்த்து கொண்டே சொன்னாள்.''ஏன், மித்து. அவங்கள கேட்கறதுக்குத்தான் தலைவருங்களே இல்லையே,'' என்றாள் சித்ரா.''இருந்தாலும், அதிகாரிங்க தங்கள் பங்குக்கு 'வேலைய' காட்றாங்க. அதோட விளைவுதான், நுாறு நாள் திட்டத்துல 'கோல்மால்' நடந்திருக்குனு, சென்னையில இருந்து வந்த அதிகாரிங்க துருவித்துருவி விசாரிச்சாங்க. 'டாய்லெட்' கட்ட மானியம் கொடுத்தது; குட்டை வேலை செஞ்சதுல, நிறையா பணத்தை 'ஸ்வாஹா' செஞ்சுட்டாங்களாம்,''''ஊராட்சி செயலாளரில் இருந்து, மாவட்ட அதிகாரிகள் வரை அனைவருக்கும் 'லிங்க்' இருக்கு. அதனால, எந்த பஞ்சாயத்துல பிரச்னை வருமோனு எல்லாரும் நடுங்குறாங்களாம்,'' என்றாள் சித்ரா.''ஓ.. பயத்துக்கு இதுதான் காரணமா? பொங்கலுார், வேலம்பட்டி சொசைட்டியில 'ரிசல்ட்' அறிவிக்கவே இல்லைனு பேசிக்கறாங்களே,'' என்றாள் மித்ரா.''ஓட்டு எண்ணிக்கை நடந்துட்டு இருந்தப்ப, 'தேர்தலை நிறுத்துங்க'ன்னு ஐகோர்ட் உத்தரவு போட்டுருச்சு. ஆனால், தேர்தல் அதிகாரி, கோர்ட் உத்தரவு போட்டாலும் எனக்கு ஆர்டர் வரலைனு சொல்லி, எண்ணிக்ைகயை முடிச்சு, வெற்றி வேட்பாளருக்கு சர்டிபிகேட் கொடுத்துட்டு போயிட்டாரு,' என்று மித்ரா சொன்னதும், ''அடடே.. அப்புறம் என்னாச்சு?'' என்று ஆர்வமானாள் சித்ரா. ''அந்த பகுதியில, மாஜி' மாவட்ட பஞ்சாயத்து நிறுத்தியிருந்த 'டீம்' தோல்வியாம். எதிரணிதான் ஜெயிச்சிருக்காம். இப்ப, யார் தலைவர்? என்ற போட்டியில், எம்.எல்.ஏ., வந்து பஞ்சாயத்து செஞ்சாராம். ஆனாலும், நிர்வாக குழு உறுப்பினர்கள் அவரு பேச்சை கேட்கலையாம். அதனால, எம்.எல்.ஏ., 'அப்செட்' ஆகி திரும்பி போயிட்டாராம்,'' என்றாள் மித்ரா.''எந்த தேர்தல் வந்தாலும், கலாட்டாவுக்கு பஞ்சமில்லைன்னு சொல்லுங்க. ஆமாங்க்கா.. விவசாயிகள் 'ஜி.டி.பி.,'யில், பேங்க் அக்கவுன்ட் குளோஸ் பண்ணிருங்கன்னு, கலெக்டர் சொன்னாராமே?'' என்று கேள்வி கேட்டாள் சித்ரா. ''ஆமாம்.. மித்து. குறைகேட்பு கூட்டத்துல, 'வங்கி ஆபீஸர்கள், எங்களை மதிக்கறதே இல்லீங்க. மரியாதையில்லாம பேசறாங்க. கவர்மென்ட் சொல்ற திட்டத்துல கடன் கொடுக்க 'கெடுபிடி' பண்றாங்க. வேதனையா இருக்குதுனு,' விவசாயிகள் புலம்பி தீர்த்துட்டாங்களாம்,''இதைக்கேட்டு டென்ஷன் ஆன கலெக்டர், ''நீங்க ஏன் மரியாதை இல்லாத இடத்துக்கு போறீங்க. அங்க இருக்கற விவசாயிகள், மொத்தமா கணக்க 'க்ளோஸ்' பண்ணிட்டு, வேற 'பாங்க்'ல கணக்கு துவங்கிடுங்க. ஏன் மொத்தமா கணக்கு 'க்ளோஸ்' ஆச்சுனு, அவங்க 'சுப்பீரியர்'துளைச்சு எடுத்துருவாங்க,' என்று கூலாக 'ஐடியா' கொடுத்தாராம்,'' என்றாள் சித்ரா.''அடடே.. விவசாயிகளுக்கு ஆதரவா கலெக்டர் பேசறாரே.. பரவாயில்லையே! இன்னொரு சுவாரசியமான விஷயம் சொல்றேன் கேளுப்பா. கிராமத்துல, அரசின் சாதனை விளக்க படம் போட, பி.ஆர்.ஓ., ஆபீசிலிருந்து போறாங்களாம். 'டிவி'யில், நாடகம் பார்க்கனும்னு சொல்லி யாரும் வர்றதில்லையாம். இதனால, 5:00 மணிக்கே படம் காட்டறாங்களாம். மக்கள் இல்லை என்றாலும், அரை மணி நேரம் இருந்துட்டு கிளம்பிடறாங்களாம்,'' என்றாள் சித்ரா. அதற்குள், தேர் வந்து விடவே, கையில் தயாராக வைத்திருந்த பூக்களை, சித்ராவும், மித்ராவும், தேர் மீது துாவி வணங்கினர். தேர் நகர்ந்து சென்றதும், ''கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கலாம். கூட்டம் போனப்புறம், போகலாங்க்கா,'' என்றாள் மித்ரா.''ஓ.கே., மித்து. நீ சொல்றதும் சரிதான்,'' என்ற சித்ரா, ''வெயிலில், போலீசார் அவஸ்தைப்படறத பார்த்தியா? ஆனா, இதே போலீஸ் சில சமயங்களில், சரியாக நடந்துக்காததால, பல பிரச்னைகள் வருகிறது,'' என்று பீடிகை போட்டாள்.''அது என்னக்கா? சீக்ரம் சொல்லுங்க,'' என்று நச்சரித்தாள் மித்ரா. ''திருப்பூர் ரூரல் ஏட்டு ஒருத்தர், 'மப்டி'யில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது. அவருக்கு முன், சகோதரர்கள், அவரது மொபைல் போனை பறித்து, 'எங்களை ஏன் பின்தொடர்ந்து வருகிறீர்கள்?' என கேட்டு வாக்குவாதம் செய்தனர். உடனே, இருவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்த, 'தங்க'மான அதிகாரி, 'நமக்கு எதுக்கு வம்பு' என இருவரையும் அனுப்பி விட்டார்,'' ''ம்..ம்.. அப்புறம் என்னாச்சுக்கா?'' என்று மித்ரா கேட்டதும், சித்ரா, ''பறக்காதடி சொல்றேன். இது தெரிஞ்ச, 'சீறும்' அதிகாரி, சம்பந்தப்பட்ட அதிகாரியை போனிலும், நேரிலும் வெளுத்து வாங்கினர். ''உங்களை போன்றவர்களால்தான் 'டிபார்மென்ட்டுக்கு' கெட்ட பெயர்,' என்று சீறியுள்ளார். இதனால், அந்த அதிகாரி, 'ஏ.சி.,' ரூமிலும், 'வெலவெலத்து' போய்ட்டாராம்,'' என்றாள் சித்ரா. ''ஆமாமா..! இதே அதிகாரி, போன மாசம், பா.ஜ., கொடி எரிப்பு விவகாரத்தில், 'அசால்ட்டா' இருந்ததால தான், பெரிய பிரச்னையாயிடுச்சு தெரியுமில்ல,'' என்று மித்ரா, நினைவுபடுத்தி சொன்னதும், ''அடடே... பரவாயில்லையே.. நல்ல ஞாபகம் வெச்சிருக்கிறாயே,'' என்று பாராட்டினாள் சித்ரா.''அக்கா...! சொல்ல மறந்துட்டேன். தேர் வடம் துவக்கி வைச்சதும், கோவில் ஆபீஸ் ரூமில் வைச்சு, வி.ஐ.பி., மற்றும் அதிகாரிகளுக்கு பிரசாதம் கொடுத்தாங்களாம். அப்போது, வி.ஐ.பி.,களுக்கு கொடுத்த பிரசாதம் குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரி, கோவில் ஊழியர்களை 'வெளுத்து' வாங்கிட்டாராம். 'எங்கிட்டயே, பாரபட்சம் காட்டுறீங்களா?' அப்படின்னு சத்தம் போட்டு, இதுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கணும்'ன்னு சொல்லி, கோபமாக போய்ட்டாராம்,'' என்றாள் மித்ரா.''ஏய்.. எப்படி இதை 'கேதர்' செஞ்சே. நானும் உங்கூடதான இருக்கேன். அரை மணி நேரத்துக்கு முன்னாடி நடந்ததை 'புட்டுபுட்டு வைக்கிறயே. நீ.. நல்லா 'டெவலப்' ஆகிட்டே வர்ற,'' என்று சொன்ன சித்ரா, மித்ரா தலையில் செல்லமாக குட்டினாள்.''ஓகே.. தேங்க்யூ,'' என்ற மித்ரா, ''கார்ப்ரேஷன் மூன்றாவது மண்டல ஆபீசில், ஏ.இ.,க்கு கீழ் வேலை செய்து வரும் மூன்று 'அசிஸ்டென்ட்ஸ்' 'ஏ.இ., ரிட்டையர் ஆக போகிறார்,' என்று, பில்டிங் லைசென்ஸ் என பல வகையில் பொதுமக்களிடம் வைட்டமின் 'ப'வை இஷ்டத்துக்கு வாங்கி தள்றாங்களாம். இதை தெரிஞ்சும் கூட, மண்டல ஏ.சி., மற்றும் அதிகாரிகள் எதையுமே கேட்குறதில்லையாம்,'' என்றாள்.அதற்குள் கூட்டம், கலைந்து விடவே, ''சரி வா... மித்து. மண்டபத்துல அன்னதானம் சாப்பிட்டு, கிளம்பிடலாம்,' என்றவாறு, இருவரும் கிளம்பினர். அதற்குள், தேர் நிலையை சென்றடைந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X