சென்னை:கலந்தாய்வு முறையில், சார் - பதிவாளர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு வழங்க வேண்டும் என,தமிழக பதிவுத்துறைஅலுவலர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
திருவண்ணாமலையில் நடந்த, இச்சங்கத்தின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு, பதிவுத்துறை தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ள தீர்மானங்கள் விபரம்:
பதிவுத் துறையில், இடமாறுதல் நடைமுறைகள் தொடர்பாக பதிவுத்துறை தலைவர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதன் அடிப்படையில், கலந்தாய்வு முறையில், சார் - பதிவாளர்களுக்கான இடமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகளை வழங்க வேண்டும்.காலி பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். பதவி உயர்வுக்கான தகுதி நிலை பட்டியல்களை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள், இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.