பொது செய்தி

இந்தியா

பெண்களுக்கு சம வாய்ப்பு அளிக்க முயற்சி: மோடி

Updated : மே 04, 2018 | Added : மே 04, 2018 | கருத்துகள் (25)
Share
Advertisement
பெங்களூரு: பெண்களுக்கு சம வாய்ப்பு அளிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.9 கோடி பெண்கள் பயன்நமோ ஆப் மூலம் பா.ஜ., மகளிரணியினர் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: பெண்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இந்தியாவில், பெண்கள் முன்னேற்றம் என்பது தற்போது பெண்கள் தலைமையில் முன்னேற்றம் என மாறியுள்ளது. இந்த கொள்கையில்
Prime Minister Modi, Namo App, Womens Development,பிரதமர் மோடி, பெண்களுக்கு சம வாய்ப்பு, நமோ ஆப் , பெண்கள் வளர்ச்சி, பாஜக மகளிரணி, கர்நாடக தேர்தல், 
Equal Opportunities for Women,  BJP Womens, Karnataka Elections,

பெங்களூரு: பெண்களுக்கு சம வாய்ப்பு அளிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.


9 கோடி பெண்கள் பயன்

நமோ ஆப் மூலம் பா.ஜ., மகளிரணியினர் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: பெண்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இந்தியாவில், பெண்கள் முன்னேற்றம் என்பது தற்போது பெண்கள் தலைமையில் முன்னேற்றம் என மாறியுள்ளது. இந்த கொள்கையில் பா.ஜ.,விற்கு நம்பிக்கை உள்ளது. பெண்களுக்கு சம வாய்ப்பு அளிக்க முயற்சி செய்து வருகிறோம். பா.ஜ.,வை பொறுத்தவரை பெண்களே முதன்மையானவர்கள். மத்திய அமைச்சரவையில் இரண்டு பெண்களுக்கு முக்கிய பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. கட்சியின் முக்கிய தூண்களாகவும் பெண் தொண்டர்கள் உள்ளனர். முத்ரா திட்டம் மூலம் 9 கோடி பெண்கள் பயன்பெற்றுள்ளனர். பெண்கள் அதிகாரம் பெறவே மத்திய அரசு விரும்புகிறது.


எடி.,யை நினைக்கும் மக்கள்

கர்நாடக தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம். பொய்யை பரப்புவதே காங்கிரசின் நோக்கம் . காங்கிரசின் பொய் வாக்குறுதிகளை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். மக்களை வளர்ச்சி பாதையில் இணைக்க வேண்டும். எடியூரப்பா தனது ஆட்சி காலத்தில் துவக்கிய திட்டங்கள் குறித்து மக்கள் இன்னும் நினைத்து பார்க்கின்றனர்.பெண்கள் மீதான அடக்குமுறை மற்றும் நமது பொறுப்பு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் பெண்களுக்கு எதிரான அவலங்கள் ஒழியும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN - Mamallpuram ,இந்தியா
04-மே-201821:02:57 IST Report Abuse
INDIAN முதலில் இந்திய மக்கள் அனைவரையும் ஜாதி மத பேதமில்லாமல் ஒரே நேர் கோட்டில் வைத்து பார்க்கவும் . அதன் பின்னர் பெண்களுக்கு சமஉரிமை பற்றி கவலை படலாம். தேர்தல் நேரத்தில் தான் பெண்கள் மேல் அக்கறை வரும். நாட்டில் ஏற்படும் பலாத்காரத்திற்கு இதுவரை எந்த விதமான பதிலும் சொல்ல வில்லை. பிஜேபி காமுகர்களுக்கு கட்சியே அடைக்கலம் கொடுத்து வருகிறது. ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலை படுகிறதாம் .
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
04-மே-201820:50:39 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் எடியூரப்பா தனது ஆட்சி காலத்தில் துவக்கிய திட்டங்கள் குறித்து மக்கள் இன்னும் நினைத்து பார்க்கின்றனர். - அது தான் உமக்கு ஆப்பாக வரப்போகிறதாமே? 2 ரெட்டி + 1 எட்டி.
Rate this:
Cancel
Christopher -  ( Posted via: Dinamalar Android App )
04-மே-201816:19:34 IST Report Abuse
Christopher சொம்பு தூக்கி உள்ளே வைக்கவும், விட்டா அதையும் தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X