பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ஜி.எஸ்.டி., வருவாய்
தமிழகத்தில் 21 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி : தமிழகத்தில், ஏப்ரல் மாதத்திற்கான, ஜி.எஸ்.டி., வருவாய், 2,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 21 சதவீதம் கூடுதல் வளர்ச்சி.

GST,Goods and Services Tax,ஜி.எஸ்.டி.,வருவாய்,தமிழகத்தில்,21 சதவீதம்,அதிகரிப்பு

ஜி.எஸ்.டி., கவுன்சில், 27வது கூட்டம், மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, நேற்று நடந்தது. கூட்டத்தில், தமிழக அமைச்சர் ஜெயகுமார், வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலர் பாலச்சந்திரன், கமிஷனர் சோமநாதன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், ஜி.எஸ்.டி., அமலாக்கத்தின் தொடர்ச்சியாக வரப்பெற்ற, வருவாய் குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம், நாடு முழுவதும் வரப்பெற்ற, ஒட்டுமொத்த, ஜி.எஸ்.டி., வருவாய், ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. அதேபோல், தமிழகத்தின் ஏப்ரல் மாதத்திற்கான, ஜி.எஸ்.டி.,

வருவாய், 2,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இது, கடந்த, 2017, ஏப்ரல் மாதத்திற்கான வருவாயுடன் ஒப்பிடுகையில், 21 சதவீதம் கூடுதல் வருவாய் வளர்ச்சி.

சர்க்கரை மீதான, 5 சதவீதம் ஜி.எஸ்.டி., வரிக்கு கூடுதலாக, ஒரு கிலோவுக்கு, மூன்று ரூபாய்க்கு மிகாமல், மேல்வரி விதிப்பதற்கான, மத்திய அரசின் கருத்துரு குறித்தும் விவாதிக்கப்பட்டது. 'மேல் வரி விதிக்கும் முறை, ஜி.எஸ்.டி., சட்டத்தின் கொள்கைக்கு மாறாக உள்ளதால், தமிழகத்திற்கு ஏற்புடையதாக இல்லை' என, அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். எத்தனால் மீதான வரியை, 18 சதவீதத்தில் இருந்து, 12 சதவீதமாக குறைக்கவும், தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்படும், எத்தனால் மீதான வரியை குறைக்க, மத்திய அரசு சார்பில், மாற்று கருத்துரு வைக்கப்பட்டது. 'உரிய சட்ட பாதுகாப்பு வழங்கும் பட்சத்தில், அதற்கு ஆட்சேபனை இல்லை' என, தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் ஜெயகுமார் பேசுகையில், 'மார்ச் மாதம் டில்லியில் நடந்த கூட்டத்தில், தமிழகம் முன் வைத்து நிலுவையில் உள்ள

Advertisement

வரிக்குறைப்பு தொடர்பான கோரிக்கைகள் மீது, விரைவாக முடிவெடுக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.

அனைத்து உணவு வகைகள், பேக்கரி பொருட்கள், பிஸ்கட்டுகள், தீப்பெட்டிகள், ஊறுகாய், ஜவ்வரிசி, பம்புசெட்டுகள், விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய இயந்திரங்கள், மீன் பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியவற்றின் மீது, விரைந்து முடிவு எடுக்கும்படியும், அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும், வெண்ணெய், நெய், மிக்சர், முறுக்கு வகைகள், வத்தல், ரஸ்க், நன்னாரி சர்பத், கற்பூரம், மாற்றுத் திறனாளிகளால் பயன்படுத்தப்படும் பொருட்கள், பட்டு நுால், வெள்ளி கொலுசு, சானிட்டரி நாப்கின், ஆகியவற்றின் மீது, முடிவு எடுக்கும்படி வலியுறுத்தப்பட்டது.


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.AJINS - CHENNAI,இந்தியா
05-மே-201823:25:57 IST Report Abuse

S.AJINSஅப்படியானால் டாஸ்மாக் கடைகளை மூடிவிடலாம், பெட்ரோலை GST வரம்பில் கொண்டு வரலாம். ஏன் செய்ய வில்லை. சும்மா இதல்லாம் பேப்பரில்தான் போல தெரிகிறது

Rate this:
Sahayam - cHENNAI,இந்தியா
05-மே-201817:18:37 IST Report Abuse

Sahayamஅப்படியானால் டாஸ்மாக் கடைகளை மூடிவிடலாம், பெட்ரோலை GST வரம்பில் கொண்டு வரலாம். ஏன் செய்ய வில்லை. சும்மா இதல்லாம் பேப்பரில்தான் போல தெரிகிறது

Rate this:
P J Balan - Mumbai,இந்தியா
05-மே-201816:19:34 IST Report Abuse

P J BalanGST is a unified tax and earlier, there were different taxes exceeding the maximum of 28% GST. That time, people were paying without any murmur. There is a misleading propaganda unleashed by vested interests as if earlier, there was no tax but now only tax is collected in the form of GST. All politics.

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X