நீட் தேர்வுக்காக கேரளா செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு பஸ்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்வுக்காக கேரளா செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு பஸ்கள்

Updated : மே 05, 2018 | Added : மே 05, 2018 | கருத்துகள் (39)
Advertisement
நீட் தேர்வு, நெல்லை சிறப்பு பஸ்கள், மருத்துவ படிப்பு, கேரளா நீட் தேர்வு மையம் , நீட் தேர்வு மாணவர்கள், சிபிஎஸ்இ மறுப்பு , நீட் தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு பஸ்கள், நீட் நுழைவு தேர்வு , 
NEET Exam,nellai specialty buses, medical courses, Kerala NEET Examination Center,
NEET Exam Students ,CBSE refusal, specialty buses for NEET students, NEET Entrance Examination,

நெல்லை : இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு மே 6 ம் தேதி நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ஈரோட்டு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளாவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும் தேர்வு மையங்களை மாற்ற சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்து விட்டது.
சுப்ரீம் கோர்ட்டும் தேர்வு மையங்களை மாற்ற உத்தரவிட மறுத்து விட்டது. இதனையடுத்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு 2 ம் வகுப்பு ரயில் கட்டணம் மற்றும் ரூ.1000 பயணப்படி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. நீட் தேர்வுக்காக வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவர்கள் இன்றே புறப்பட்டு செல்கின்றனர்.
நெல்லை மண்டலத்தில் மட்டும் 2300 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். இவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்வறத்காக நெல்லையில் இருந்து இன்று காலை 7.30 மணி முதல் இரவு வரை 8 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்கள் நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்களை இலவசமாக அழைத்து செல்ல உள்ளது. இந்த சிறப்பு பஸ்களை நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, ராதாபுரம் அதிமுக எம்.எல்.ஏ., இன்பத்துரை ஆகியோர், மாணவர்களுக்கு குடிநீர் பாட்டில், சிற்றுண்டி வழங்கி துவக்கி வைத்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar Periasamy P - Coimbatore,இந்தியா
05-மே-201821:28:54 IST Report Abuse
Kumar Periasamy P 2000000 லச்சம் பேர் TNPSC எழுத தமிழ்நாட்டுல சென்டர் இருக்கு வெறும் 5 லச்சம் பேர் எழுத சென்டர் இல்லையா என்னடா புழுகுறீங்க
Rate this:
Share this comment
Cancel
JAYARAMAN - CHENNAI,இந்தியா
05-மே-201821:00:29 IST Report Abuse
JAYARAMAN Computer is going to allot the centers. What was the problem in reallocating the correct centers again by computer and s the messages to all students. How long will it take.
Rate this:
Share this comment
Cancel
Rohith Raja - chennai,இந்தியா
05-மே-201818:46:15 IST Report Abuse
Rohith Raja எனக்கு ஒன்னு புரியில.. டாக்டர் தேர்வு எழுத போறவங்க என்ன குழந்தைகளா .... இல்ல டாக்டர் ஆகி எல்லாரும் பொது சேவை செய்ய போறீங்களா,,டாக்டர் ஆனதும் அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட் என்று கொள்ளை அடிக்க தான போறாங்க, நீங்க முன்னேறணும் என்றால் நீங்க தான் கஷ்ட பட வேண்டும். இடம் தெரில, எக்ஸாம் சென்டர் புரியல , காசு இல்ல என்னடா பேச்சு, கமெண்ட் பண்ணுறதுக்கு என்ன ஆச்சு என்று பாருங்க. நல்ல வேளை இதற்கும் மோடி தான் காரணம் சொல்லல, எதெற்கெடுத்தாலும் போராட்டம் கஷ்டம் இலவசம் வேணும் ... இப்ப கொள்ளை அடிக்கிற டாக்டர் எல்லாம் என்ன அரசு மருத்துவர்கள் தான. தமிழ் தமிழ் என்று அடுத்த இலங்கை உருவாகிறது ...இருட்டு அறையில் முரட்டு குத்து இந்த மாறி படத்துல போகாத தமிழ் கலாச்சாரமா ஜல்லிக்கட்டுல வர போகுது... ஆபாசத்தின் உச்சம் அதை பத்தி வெற்றிமாறன் சீமான் பாரதிராஜா எல்லாம் பேச மாட்டானுக... ஏன்னா அது எல்லாம் தமிழ் கலாச்சாரத்தின் அங்கம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X