தேவதானப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி இந்திராகாலனியில் தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத் தலைவர் முருகன், இருதரப்பு மோதலில் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்தார்.தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. வாகனங்கள் எரிக்கப்பட்டன. இங்கு இந்திராகாலனியில் பாதிக்கப்பட்ட மக்களை தேசிய ஆதிராவிடர் ஆணைய துணைத் தலைவர் முருகன், நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கலெக்டர் பல்லவிபல்தேவ், பாஸ்கரன் எஸ்.பி., பெரியகுளம் தாசில்தார் கிருஷ்ணகுமார் உடனிருந்தனர்.முன்னதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஷ்வரா சுப்பிரமணி, பொம்மிநாயக்கன்பட்டி காந்திநகர் காலனி மக்களை தேவதானப்பட்டியில் சந்தித்து பேசி ஆறுதல் கூறினார்.தேனி பாராளுமன்ற தொகுதி பா.ஜ. அமைப்பாளர் ராஜபாண்டி உடனிருந்தார்.விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் நாகரத்தினம், பெரியகுளம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் தங்கபாண்டி,செயலாளர் ஆண்டவர் ஆகியோர் பொம்மிநாயக்கன்பட்டிக்கு செல்ல முயன்ற போது சிந்துவம்பட்டி முனியாண்டி கோயில் அருகில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE