ஓமலுார்: சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே, காமலாபுரத்தைச் சேர்ந்தவர் சாந்தி, 38; கூலி தொழிலாளி. கணவர் இறந்து விட்டார். இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள், பண்ணப்பட்டி அரசு பள்ளியில், பிளஸ் 1 படிக்கிறார். அதே பள்ளியில், அறிவியல் ஆசிரியராக, ஓலைப்பட்டியைச் சேர்ந்த வெள்ளையன், 30, உள்ளார். இவருக்கு திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது. நான்கு மாதங்களுக்கு முன், பணியில்சேர்ந்துள்ளார். கடந்த, 5ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, மாணவியின் தாய் மொபைல் போனில் தொடர்பு கொண்ட ஆசிரியர் வெள்ளையன், மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, தவறாக பேசியுள்ளார். இதனால், மனமுடைந்த மாணவி விஷம் குடித்தார். அவரை, ஓமலுார் அரசு மருத்துவமனையில்அனுமதித்தனர்.நேற்று காலை, பண்ணப்பட்டி பள்ளி தலைமையாசிரியர் மணிவண்ணன், மருத்துவமனையில், மாணவியிடம் விசாரணை நடத்தினார்.மணிவண்ணன் கூறுகையில், ''மாணவியிடமும், ஆசிரியரிடமும் விசாரணை நடத்தியுள்ளேன். அதன் விபரத்தை, சி.இ.ஓ.,விடம் தெரிவிக்கஉள்ளேன்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE