ஆளுக்கு ஆளு வாங்கி குவிக்கிறாங்க சொத்து... ஆட்சி மாறுனா நிச்சயம் வரும் ஆபத்து!| Dinamalar

ஆளுக்கு ஆளு வாங்கி குவிக்கிறாங்க சொத்து... ஆட்சி மாறுனா நிச்சயம் வரும் ஆபத்து!

Added : மே 08, 2018
Share
துங்கபத்ரா காரில் வந்திருந்தாள்; ஆனைகட்டி வரை போய் வரலாம் என்று சித்ராவும், மித்ராவும் கூற, மூவருடன் தடாகம் ரோட்டில் பறந்தது, கார். பண்பலையில் பக்திப்பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. மருதமலை மாமணியே முருகைய்யா...''மருதமலையில கொஞ்ச நாளாவே பரபரப்பா இருக்காம்... விபத்து, சாவு, மாரடைப்பால பக்தர் மரணம்னு, அடுத்தடுத்து ஏதேதோ நடக்கிறதால, அங்க வேலை பாக்கிறவுங்க கொஞ்சம் பயந்து
 ஆளுக்கு ஆளு வாங்கி குவிக்கிறாங்க சொத்து...  ஆட்சி மாறுனா நிச்சயம் வரும் ஆபத்து!

துங்கபத்ரா காரில் வந்திருந்தாள்; ஆனைகட்டி வரை போய் வரலாம் என்று சித்ராவும், மித்ராவும் கூற, மூவருடன் தடாகம் ரோட்டில் பறந்தது, கார். பண்பலையில் பக்திப்பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. மருதமலை மாமணியே முருகைய்யா...''மருதமலையில கொஞ்ச நாளாவே பரபரப்பா இருக்காம்... விபத்து, சாவு, மாரடைப்பால பக்தர் மரணம்னு, அடுத்தடுத்து ஏதேதோ நடக்கிறதால, அங்க வேலை பாக்கிறவுங்க கொஞ்சம் பயந்து போயிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
''அங்க வேலை பார்த்த 'கிளார்க்' ஒருத்தரு, ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாரு... மேனேஜருக்கும் ஒரு சின்ன ஆக்சிடெண்ட்ன்னு சொன்னாங்க... வேற யாருக்கு, என்னாச்சு?'' என்று கேட்டாள் சித்ரா.''போன வாரம், ராஜகோபுரத்துல இருந்து, படியில இறங்கி வந்துட்டு இருந்த பக்தர் ஒருத்தரு, கடும் வெயில்ல திடீர்னு மயக்கமாயி, தண்ணி கொடுக்குறதுக்குள்ள அங்கயே இறந்துட்டாராம்... ஏற்கனவே, அங்க முக்கியமான பொறுப்புல இருந்த ஒருத்தருக்கு 'ஹார்ட் அட்டாக்' வந்திருக்கு; அவரோட குழந்தைக்கு, பார்வை தெரியாமப் போயிருச்சாம்,'' என்றாள் மித்ரா.''அங்க கூரை போடச் சொன்னா கேக்குறாங்களா... அப்புறம் என்னாச்சு?'' என்று கேட்டாள் சித்ரா.
''ராஜகோபுரம் திருப்பணிகள்ல, நிறைய முறைகேடு நடந்ததா புகார் கிளம்பி, விஜிலென்ஸ் விசாரிச்சாங்களே. இந்த ஆபீசர் தான், அப்போ பொறுப்புல இருந்திருக்காரு. இதெல்லாம் நடந்த பிறகு, ஒரு பெரிய தொகையை கோவிலுக்கே கொடுக்கிறதா வேண்டிக்கிட்டாராம். திரும்ப பார்வை கிடைச்சிருச்சாம்; அவருக்கும் சரியாயிடுச்சாம். அதனால தான், இப்போ அடுத்தடுத்து ஏதேதோ நடக்குறதால, காரணத்தை தெரிஞ்சுக்க, எல்லாரும் முருகனை கும்பிட்டுட்டு இருக்காங்க,'' என்றாள் மித்ரா.
பண்பலையில் அம்மன் பாடல் ஒலித்ததைக் கேட்ட சித்ரா, ''மித்து... நம்மூர் எம்.எல்.ஏ., ஒருத்தரு, புதுசா 'பார்', பெட்ரோல் பங்க் எல்லாம் வாங்குனதா பேசிட்டு இருந்தோமே... கூட்டுறவு தேர்தல்லயும் அவரு கைதான் ஓங்கிருக்காம். அவரோட ஆபீஸ்ல தான், யார் யாருக்கு என்னென்ன பதவின்னு முடிவு பண்ணிருக்காங்க. துப்புரவுப் பணியாளர் சொசைட்டியில 'ஸ்ராங்க்'கா இருக்குற ஒரு அமைப்புகிட்டயும் இவரு தான் பேசுனாராம்,'' என்று சொல்லும் போதே குறுக்கிட்டாள் மித்ரா.''அந்த அளவுக்கு, அவருக்கு கட்சியில 'பவர்' கொடுத்துட்டாங்களா... அப்புறம் 'மாவட்டம்'னு ஒருத்தரு எதுக்கு இருக்காரு?''
''அதை விடு... அந்த அமைப்பு நிர்வாகிகள், 'எங்கள்ட்டதான் ஆட்கள் அதிகமா இருக்காங்க. பதவி அதிகமா எங்களுக்குத் தரணும். இல்லேன்னா, தேர்தல் நடக்கட்டும்'னு சவால் விட்ருக்காங்க. ஆனா, தர முடியாதுன்னு சொல்லீட்டாங்க. கடைசியில, அவுங்க வேட்புமனு எல்லாமே 'ரிஜெக்ட்' பண்ணீட்டாங்களாம். அதுல 12 டைரக்டர்கள் பதவியில, ஒன்பதை ஆளுங்கட்சி எடுத்துட்டு, மூணை மட்டும், வக்கீல் ஒருத்தரு நடத்துற அமைப்புக்குக் கொடுத்துட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.''அக்கா... எம்.எல்.ஏ., சொத்து வாங்குனதைப் பத்திச் சொன்னியே... நம்மூர்ல தான், எல்லா வி.வி.ஐ.பி.,யும் பெரிய பெரிய சொத்தா வாங்கிட்டு இருக்காங்களாம். ஏற்கனவே, பக்கத்து மாநிலத்துல முக்கிய பொறுப்புல இருக்குற வி.வி.ஐ.பி., குடும்பம், கோவையில வளைச்சு சொத்து வாங்கீட்டு இருக்காங்க. இப்போ, நம்ம ஸ்டேட் வி.வி.ஐ.பி., ஒருத்தரு, நம்மூர்ல இருக்குற ராஜ கம்பீரமான ஆஸ்பிடலை, தன்னோட மகனுக்காக வாங்கீட்டார்னு ஒரு தகவல் பரவிட்டு இருக்கு,'' என்றாள் மித்ரா.
''அது எனக்குத் தெரியலை... ஆனா, இன்னொரு வி.வி.ஐ.பி., யோட பையன் இங்க படிச்சவராம்... அவருக்கு ஏகப்பட்ட பிரண்ட்ஸ் இங்க இருக்காங்களாம். அவுங்க பேருல, காந்திபுரத்துல ஒரு லாட்ஜ், பொள்ளாச்சிப் பக்கம் தோப்புன்னு வாங்கிப் போடுறதா கேள்விப்பட்டேன். ஆட்சி மாறுனா, இந்த சொத்துக்கெல்லாம் ஆபத்து வரும்!'' என்றாள் சித்ரா.''இதெல்லாம் கரெக்டா சொல்றீங்க... நம்மூர்ல பாரஸ்ட் டிபார்ட்மென்ட்ல ஒரே வாரத்துல ரெண்டு முக்கியமான டிரான்ஸ்பர் நடந்துச்சே... அதுக்கு என்ன பின்னணின்னு தெரியுமா?'' என்று கேட்டாள் பத்ரா.''சின்ன ஆபீசரை மாத்துனது, 'ரொட்டீன்' தான்... ஆனா, பெரிய ஆபீசர் ஒருத்தரை இங்க போட்டு, அஞ்சே நாள்ல அவரை மாத்துனதுக்கு, ஒரு ஆன்மிக மையத்தோட தலையீடு தான் காரணம்கிறாங்க. அவரு, இங்கடி.எப்.ஓ.,வா இருக்குறப்போ, அந்த மையத்தோட விதிமீறல்களுக்கு எதிரா நோட்டீஸ் கொடுத்தாராம். அவரு இங்க பெரிய ஆபீசரா வந்தா சிக்கல்னு தான், 'சொல்லி துாக்கி அடிச்சிட்டாங்க'ன்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.''சூலுார் 'குட்கா' பேக்டரி விவகாரத்துல, 'ரெய்டு' போன ஆபீசரை, இதை விசாரிக்கக்கூடாதுன்னு துாக்கிட்டாங்க... ஏடிஎஸ்பி அனிதாவை 'என்கொயரி ஆபீசரா' போட்டு டிஜிபி உத்தரவு போட்டாராம். ஏன்னு தெரியலை,'' என்றாள் சித்ரா.
''நான் கேள்விப்பட்டவரைக்கும், கருமத்தம்பட்டியில இருக்குற கட்டப்பஞ்சாயத்து 'கிங்'தான், இவருக்கு, மாசாமாசம் மாமூல் வாங்கிக் கொடுத்ததாச் சொல்றாங்க. ஆனா, அவரையும் இவரு கூப்பிடலை. அவருக்கு மேல, இவருக்குக் கீழ இருக்குற ஆபீசரை அனுப்பிருக்கலாம். அதையும் செய்யாம, இவரே போனதைப் பார்த்தா, அப்பிடித்தான் தெரியுது,'' என்றாள் மித்ரா.''இந்த மேட்டர்ல, அந்த ஆபீசர் மேல, ரெண்டு கட்சிக்காரங்களும் 'செம கடுப்பா' இருக்காங்களாம். ஏன்னா, ரெண்டு பேர்ட்டயும் காசு வாங்கிட்டு, விளையாடிட்டார்னு கோபமாயிட்டாங்க,'' என்றாள் சித்ரா.
''ரூரல் போலீஸ் பேரு, அப்பிடி நாறுதுன்னா, சிட்டி போலீஸ் பண்ற கூத்து, அதை விட மோசமா இருக்கு. பீளமேடு லிமிட்ல, டூ வீலர் திருட்டு சர்வ சாதாரணமா நடக்குது. பெரும்பாலும் கிடைக்கிறதே இல்லை; போன வாரம், வண்டியைத் தொலைச்ச ஒருத்தரு, 'கம்பிளைண்ட்' கொடுத்துட்டு, அவரே தேடியிருக்காரு; வண்டி கிடைச்சிருச்சு; ஸ்டேஷனுக்கு தகவல் சொன்னதுக்கு வண்டியைப் பறிச்சு வச்சுக்கிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.''அடக்கொடுமையே... சொன்னது குத்தமா?'' என்று பரிதாபப்பட்டாள் பத்ரா.''முழுசாக் கேளுங்க... அந்த வண்டியை கோர்ட்ல ஒப்படைச்சு எடுக்கிறதுக்கு, அஞ்சாயிரம் ரூபா கேக்குறாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''போத்தனுார்ல இதே மாதிரித்தான், தெருவுக்குள்ள படு ஸ்பீடா வண்டி ஓட்டுன ஒருத்தரை, மக்கள் துரத்திப் பிடிச்சு, ஸ்டேஷன்ல ஒப்படைச்சிருக்காங்க. அவர்ட்ட 3500 ரூபா பணத்தை வாங்கிட்டு, கால் மணி நேரத்துல விட்டுட்டாங்களாம். அவன், அதே ஏரியாவுல வந்து, 'உங்களால என்னடா பண்ண முடிஞ்சுச்சு'ன்னு கேட்ருக்கான்,'' என்றாள் சித்ரா.''டாஸ்மாக்ல பொய்யான பில் போட்டு, சம்பாதிக்கிற டிரான்ஸ்போர்ட் மேனேஜர் பத்திப் பேசுனோமே... அவரும், 'பார் ஓனர்ஸ் வாட்ஸ் ஆப் குரூப்ல, பேப்பர்ல என்னையப் போட்டு பெரிய ஆளாக்குனதுக்கு நன்றி'ன்னு மெசேஜ் போட்டிருக்காராம். மீட்டிங்லயும் இதையே பேசுனாராம்... தப்புப் பண்றவுங்க தைரியமா திரியுற காலமா இருக்கு,'' என்றாள் மித்ரா.''கார்ப்பரேஷன் மேட்டர் ஒண்ணுமில்லையா மித்து?'' என்றாள் சித்ரா.''அக்கா... நம்ம கார்ப்பரேஷன்ல இருக்குற 'டைகர்' பிஸ்கெட் இன்ஜினியரு, கீழ இருக்குற 'ஸ்டாஃப்'களை எல்லாம், வாய்க்கு வந்தபடி திட்றாராம். அவருக்கு புரமோஷன் வந்துட்டதால, எப்படா கிளம்புவார்னு, எல்லாரும் ஆவலோட இருக்காங்க. அவரோட இடத்தைப் பிடிக்க, போட்டியும், பேரமும் ஆரம்பமாயிருச்சு,'' என்றாள் மித்ரா.''கார்ப்பரேஷன்ல டிரான்ஸ்பர், புரமோஷன் தவிர வேற எந்த வேலையும் நடக்கிறதாத் தெரியலை... கட்டிடக்கழிவு மறு சுழற்சி திட்டத்துக்கு, உக்கடத்துல 15 ஏக்கர் இடம் கொடுத்து, ஒரு கோடி ரூபாய்க்கு காம்பவுண்ட்டும் கட்டுன பிறகு, மெஷின்களை கொண்டே வரலை. இப்போ, ரெண்டாவதா வந்த டில்லி கம்பெனியைக் கூப்பிடப் போறாங்களாம்,'' என்றாள் சித்ரா.''யாரைக் கூப்பிட்டாலும், கோயம்புத்துார்-பெங்களூரு டபுள் டெக்கர் டிரெயினை, கர்நாடகா எலக்ஷன் வரைக்கும் விட மாட்டாங்க போலிருக்கு,'' என்றாள் மித்ரா.''இதே கதை தான் நம்ம ஜி.எச்.,ல நடக்குது... இங்க இருக்குற 'ஆர்த்தோ டிபார்ட்மென்ட்'டைஇன்ஸ்டிடியூட்டா தரம் உயர்த்தி, ஜி.ஓ., போட்டாங்க. ஆனா, அதை வெளிய விட மாட்டேங்கிறாங்களாம்.
அதுக்குப் பொறுப்புக்கு வர்றவரு, ஜி.எச்.,தலைமைக்கு 'ஈக்வல்'லா இருப்பார்னு, இதை வர விடாமத் தடுத்திருக்காங்க; எப்பிடியோ வந்திருச்சு,'' என்றாள் சித்ரா.மாங்கரை 'செக்போஸ்ட்' அருகில் வந்ததும், 'இங்க சுண்டல், சுக்கு மல்லிக்காபி கிடைக்கும்; சூப்பரா இருக்கும்' என்று வண்டியை ஓரம் கட்டினாள் பத்ரா.வி.வி.ஐ.பி.,யோட பையன் இங்க படிச்சவராம்... அவரோட பிரண்ட்ஸ் பேருல, காந்திபுரத்துல ஒரு லாட்ஜ், பொள்ளாச்சிப் பக்கம் தோப்புன்னு வாங்கிப் போடுறாராம்.ஆட்சி மாறுனா, இந்த சொத்துக்கெல்லாம் ஆபத்து வரும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X