பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'2016 மே மாதமே ஜெ., உடல்நிலை மோசமாக இருந்தது';
டாக்டர் வாக்குமூலத்தால் மரண விசாரணையில் திருப்பம்

'ஜெயலலிதாவின் உடல்நிலை, 2016 மே மாதத்திலேயே மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது' என, விசாரணை கமிஷனில், சர்க்கரை நோய் நிபுணர் ராமச்சந்திரன் கூறியது, விசாரணையில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

2016 மே,ஜெ. உடல்நிலை மோசம்,டாக்டர் வாக்குமூலம்,மரண விசாரணையில்,திருப்பம்


ஜெ., மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை, 40க்கும் மேற்பட்டோரிடம், விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஆஜராகினார்:


ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகவல்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று, சென்னை, அப்பல்லோ டாக்டர் ஜெயஸ்ரீ கோபால், சர்க்கரை நோய் நிபுணர் ராமச்சந்திரன் ஆகியோர், விசாரணைக்கு ஆஜராகினர். டாக்டர் ஜெயஸ்ரீ கோபால் வாக்குமூலம் அளித்தபோது, முன்னுக்கு பின் முரணாக, சில தகவல்களை கூறிஉள்ளார். பின், டாக்டர்கள் இருவரிடமும், நீதிபதி ஆறுமுகசாமி, கமிஷன் வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர், பல்வேறு கேள்விகள் கேட்டனர்; அதற்கு, அவர்கள் பதில் அளித்தனர்.

அப்போது, ஜெ.,க்கு, 2016 டிச., 4 மாலை, மாரடைப்பு ஏற்பட்ட பின், அவரின் சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டதாகவும், மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்னரும், அவருக்கு சிகிச்சை அளித்து வந்ததாகவும், டாக்டர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

டாக்டர் ராமச்சந்திரன் வாக்குமூலம், பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தி உள்ளது. ஜெ., உடல்நிலையை பரிசோதிக்க, 2016 மே மாதம், டாக்டர் ராமச்சந்திரன், சென்னை, போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போதே, ஜெ.,க்கு சர்க்கரை அளவு, மிகவும் அதிகமாக இருந்துள்ளது. அதை கண்ட ராமச்சந்திரன், 'உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது.

பரிந்துரை :


புதிதாக வந்துள்ள, 'இன்சுலின்' மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்' என, பரிந்துரை செய்துள்ளார். ஆனால், அதற்கு பின், அவர் அழைக்கப்படவில்லை. இதற்கிடையில், அவரை சசிகலா உறவு டாக்டர் சிவகுமார் தொடர்பு கொண்டு, சில மருந்துகளை, ஜெ.,க்கு கொடுக்கலாமா... என, கருத்து கேட்டுள்ளார். அதன்பிறகே, தான் பரிந்துரைத்த மருந்துகளை, ஜெ., எடுத்துக் கொள்ளவில்லை என்பதை, டாக்டர் ராமச்சந்திரன் அறிந்துள்ளார்.

ஜெ.,க்கு, 2016 செப்., 22ல் மயக்கம் ஏற்பட்டுள்ளது. 'சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு' என, டாக்டர் ராமச்சந்திரன் தெரிவித்உள்ளார். இதையடுத்து, அவரிடம், '2016 மே மாதத்திலேயே, ஜெ., உடல்நிலை மோசமாக இருந்தது என்றால், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லையா...' என, கமிஷன் விசாரணையில் கேட்கப்பட்டுள்ளது, அதற்கு அவர், 'சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் கேளுங்கள்' என, பதில் கூறியுள்ளார்.

பல கேள்விகள் :


அவரது வாக்குமூலத்தை தொடர்ந்து, அவர் பரிந்துரைத்த மருந்தை, ஜெ., உட்கொண்டாரா, இல்லையா; அவர் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறிய பிறகும், ஏன் மருத்துவமனைக்கு செல்லவில்லை என்பது உட்பட, பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

Advertisement

இது தொடர்பாக, ஜெ.,க்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் விசாரிக்க, விசாரணை கமிஷன் முடிவு செய்துள்ளது.

நேற்றைய விசாரணை குறித்து, சசிகலா வழக்கறிஞர் ராஜ்குமார் பாண்டியன் கூறியதாவது: அப்பல்லோ டாக்டர் ஜெயஸ்ரீ கோபால், சர்க்கரை நோய் மருத்துவர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஜெயஸ்ரீ கோபால், சர்க்கரை மற்றும் தைராய்டு நோய் தொடர்பாக, 2015 முதல், ஜெ.,க்கு சிகிச்சை அளித்துள்ளார்.

மருத்துவமனையில், ஜெ., அனுமதிக்கப்பட்ட பிறகும், அவர் தினமும் ஜெ.,யைபார்த்து, சிகிச்சை அளித்து உள்ளார். சசிகலா, தன் பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டபடி, 2016 டிச., 3, 4ம் தேதி, ஜெ.,வை சந்தித்துள்ளார். அப்போது, எய்ம்ஸ் மருத்துவர்கள், 'பிசியோதெரபிஸ்ட்' சிகிச்சை அளிக்கும்படி கூறியதை தெரிவித்துள்ளார்.

அதற்கு, ஜெ., இசைவு தெரிவித்து, தலை அசைத்துள்ளார். டிச., 4 காலை, 11:00 மணிக்கு, அவரை சந்தித்தபோது, அவர் நன்றாக இருந்ததாகவும், சர்க்கரை அளவு ஏற்றம், இறக்கமாக இருந்தது என்றும் கூறியுள்ளார். அவரிடம் குறுக்கு விசாரணை நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இன்று, டாக்டர் சாந்தாராமிடம் விசாரணை நடைபெற உள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
09-மே-201814:25:11 IST Report Abuse

Sridhar Rengarajanஎன்னதான் சொல்லுங்கள், தமிழ்நாட்டு அரசியலில் அண்ணா, காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா இந்த நான்கு முதலைச்சருக்கும் மக்கள் மனதில் நீங்காத இடம் உண்டு. வேறு எவனுக்கும் கிடையாது. குடும்ப அரசியல், பரம்பரை அரசியல், வாரிசு அரசியலை கொண்டு வந்து தமிழ்நாட்டு அரசியலை சாக்கடையாக்க அனுமதிக்காதவர்கள். மகன்கள், மகள்கள், மருமகன்கள், பேரன்கள், பேத்திகள் என்று தகுதியே இல்லாத தற்குறிகளை எல்லாம் அரசியலுக்கு கொண்டு வந்து நாறடிக்காதவர்கள்.

Rate this:
Kadaparai Mani - chennai,இந்தியா
09-மே-201814:34:42 IST Report Abuse

Kadaparai Maniமிக மிக அருமையான கருத்து ...

Rate this:
periasamy - Doha,கத்தார்
09-மே-201815:09:15 IST Report Abuse

periasamyநீங்கள் சொல்லுவதில் எந்த நயமும் கிடையாது மக்கள் விரும்பினால் யாரும் அரசியலுக்கு வரலாம் அதற்காக அரசியல் வாதிகளுக்கு வாரிஸ் கூடாது என்பது என்ன நாயம் உள்ளது? ...

Rate this:
Aravindhakshan - Chennai,இந்தியா
09-மே-201815:42:45 IST Report Abuse

Aravindhakshan///மகன்கள், மகள்கள், மருமகன்கள், பேரன்கள், பேத்திகள்/// அதற்கு பதிலாக சசிகலா, நடராசன், சுதாகரன், தினகரன், திவாகரன், பாஸ்கரன், விநோதகன், சசிகலாவின் அண்ணி, அண்ணன் வாரிசுகள்.....இப்படி பெரிய...... கொள்ளைக்கூட்டமே இருக்கிறதே பல லட்சம் கோடிகளை அனுபவித்துக் கொண்டு.... ஆக இரண்டும் கொள்ளைக்கூட்டங்கள்....மக்கள் பணத்தை உறிஞ்சி கொழுத்து இன்று பயமில்லாமல் நடமாடும் கிருமிகள்... ...

Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
09-மே-201812:38:17 IST Report Abuse

mindum vasanthamஒரு குடும்பத்துக்குள் அதிமுக அடைபட கூடாது அதுவே உண்மை வாதம் , அதை விட்டு விட்டு குத்தினார்கள் கொன்னர்கள் எல்லாம் தேவை இல்லாத வாதம்

Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
09-மே-201812:30:01 IST Report Abuse

mindum vasanthamஒரு உண்மையான வாதத்தை எடுத்து வையுங்கள் அதுவே நல்ல எதிர்காலத்தை தமிழகத்துக்கு கொடுக்கும்

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X