அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'நல்ல முடிவு வராவிட்டால் போராட்டம்'

சென்னை : ''காவிரி வழக்கில், 14ம் தேதி, நல்ல முடிவு வராவிட்டால், மீண்டும் போராட்டம் நடத்தப்படும்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

ஸ்டாலின்,காவிரி விவகாரம்,நல்ல முடிவு,வராவிட்டால்,போராட்டம்


காவிரி விவகாரத்தில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க, சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், நேற்று அனைத்து கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூ.,

மாநில செயலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலர் அபுபக்கர் எம்.எல்.ஏ., மற்றும் சில கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், 'நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என, வலியுறுத்தியும், ஜாக்டோ - ஜியோ அமைப்பினரை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும், நீட் தேர்வு எழுத சென்ற, மாணவரின் தந்தை கிருஷ்ணசாமி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆலோசனை கூட்டடத்திற்கு பின், ஸ்டாலின் கூறியதாவது: காவிரி விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு நாடகம் நடத்துகின்றன. பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு கடிதம் அனுப்பினோம்; கடிதத்தை வாங்கியதாக கூட தெரிவிக்கவில்லை. காவிரி விவகாரம் தொடர்பாக, மீண்டும், 15ல், அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும்.

Advertisement

காவிரி வழக்கில், 14ம் தேதி நல்ல முடிவு வரவில்லை என்றால், மீண்டும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் தீர்வு காண வேண்டும்:


'ஜாக்டோ - ஜியோ அமைப்பு நிர்வாகிகளை, முதல்வர் பழனிசாமி அழைத்து, பேச்சு நடத்தி, நல்ல தீர்வு காண வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். சென்னையில், நேற்று தலைமை செயலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்ததும், ஜாக்டோ - ஜியோ சங்க நிர்வாகிகளை கைது செய்ததும், ஜனநாயக விரோத செயல். கைது செய்யப்பட்ட அனைவரையும், உடனே விடுதலை செய்ய வேண்டும். ஜாக்டோ - ஜியோ அமைப்பு நிர்வாகிகளை, முதல்வர் பழனிசாமி அழைத்து பேசி, நல்ல தீர்வு காண வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiyaga Rajan - erode,இந்தியா
11-மே-201812:57:26 IST Report Abuse

Thiyaga Rajanபோர், போர், போர், போர், தமிழனுக்கு தினவு எடுத்து கொன்டே இருக்கும் , களம் காணுதல் இயறகை, ஏன்னா தமிழன் எப்பவும் போராளி தான் நேத்து தான் குழந்தை கடத்தல் என்று சொல்லி ஒரு மூன்று எதிரிகளை (ஒரு முதிய பெண்மணி உட்பட )போரில் கொன்றான் போர், போர், போர், ........

Rate this:
ரத்தினம் - Muscat,ஓமன்
10-மே-201812:16:40 IST Report Abuse

ரத்தினம்சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறான் சமயம் பார்த்து கொள்ளைகள் பலவும் அடிக்கிறான்.. பாட்டு நினைவுக்கு வருகிறது. அது யாரு பக்கத்தில, எல்லா கட்சிக்கும் ஒரு ரவுண்டு போய் வந்த திருநாவுக்கரசரா? உண்மையிலேயே தமிழ் நாட்டின் மீது அக்கறை இருந்தா, எந்த ஈகோவும் பாக்காம அவரை கூட்டிகிட்டு கூட்டாளி சித்த ராமய்யாவிடம் போய் கெஞ்சி தண்ணிய வாங்கிவிட்டு வரலாமே, அப்படி செஞ்சா திமுக மேல தமிழ் மக்களுக்கு நல்ல அபிப்ராயம் வருமே. ? இல்ல தளபதியாச்சே, கத்திய தூக்கிகிட்டு போய் சண்டை தான் போட்டு பாக்கலாமே ?

Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
10-மே-201805:16:09 IST Report Abuse

meenakshisundaramஎனக்கொரு சந்தேகம் ,ஒரு வேளை காவிரி பிரச்சினையில் தீர்வு இவரு அப்பாருங்க காலத்துக்கு அப்புறம் வரலாம். தமிழனுக்கு விடிவு காலம் பிறக்க வேண்டுவோம் இறைவனை.

Rate this:
மேலும் 45 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X