காவிரி வாரியத்தை ஏற்க மாட்டோம்; சித்தராமையா அடம் Dinamalar
பதிவு செய்த நாள் :
நீதிமன்றத்தின் வழி நடப்போம்;
காவிரி வாரியத்தை ஏற்க மாட்டோம்:
கர்நாடக முதல்வர் சித்தராமையா அடம்

''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவை மத்திய அரசு மேற்கொண்டால், அதை கர்நாடகா அரசு ஏற்காது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி செயல்படுவோம்,'' என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

காவிரி வாரியம்,ஏற்க மாட்டோம்,சித்தராமையா,அடம்

மைசூருவில் தனது வீட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்திற்கு கிளம்பிய அவர் கூறியதாவது:

கர்நாடக தேர்தலை சந்திக்கும் இந்த நேரத்தில், இங்கு வருமான வரித்துறையை ஏவி உள்ளார் பிரதமர் மோடி. நான் போட்டியிடும் பதாமி தொகுதியில் உள்ள ரிசார்ட்டில் சோதனை நடந்துள்ளது. காங்., வேட்பாளர்களை குறி வைத்து இந்த சோதனை நடக்கிறது. இதை கண்டிக்கிறேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு பின் பொது மேடையில் கர்நாடக தேர்தல் பிரசாரத்திற்கு காங்., தலைவர் சோனியா வருவதால், கட்சி பலவீனப்பட்டுள்ளதா என கேட்கிறீர்கள். எங்களுக்கு தோல்வி பயம் இல்லை. அவர் காங்., தலைவர் என்பதால் வருகிறார். அப்படி பார்த்தால் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ஏன் கர்நாடகாவில் அலைந்து கொண்டிருக்கின்றனர்.

Advertisement

ஒருவேளை மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் அதை ஏற்க மாட்டோம். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
11-மே-201819:08:58 IST Report Abuse

balஇந்த நாட்டில் மட்டும்தான் சட்டத்தை அவமதிப்பவர்கள் சுதந்திரமாக பேசலாம் திரியலாம் பதவியில் கூட இருக்கலாம். இதுதான் ஜனநாயகம்...

Rate this:
bal - chennai,இந்தியா
11-மே-201819:02:27 IST Report Abuse

balஇப்போது ஏன் சுடலை எம்பி குதிக்கவில்லை. ஒரு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டியதுதானே இந்த சுடலை, பாரதிராஜா, சீமான், தொல் மற்றும் தமில் விரும்பிகள்...ஏனென்றால் இவர்கள் சோனியாவுக்கு ராகுலுக்கு சித்தராமையாவுக்கும் அடிமைகள் ..

Rate this:
bal - chennai,இந்தியா
11-மே-201818:57:48 IST Report Abuse

balபெங்களூரில் பலத்த மழை பெய்கிறது...இது போல் எல்லா வருடமும் பெய்கிறது....ரோடெல்லாம் ஆறாக போகின்றது...ஆனால் மழை நீர் சேமிப்பு கிடையாது. இந்த தண்ணீர் எல்லாம் மாசுபட்ட எரிகளுக்குத்தான் போகின்றது...96 ஏரிகள் முன்பெல்லாம் நன்றாக இருந்து இப்போது அபார்ட்மெண்ட்ஸ் வந்ததும் மாசு பட்டது....சுத்தபடுத்த யாரும் இல்லை. அப்பார்ட்மெண்ட்ஸ் லேக் வியூ என்று சொல்லி விற்றார்கள். இப்போது நாறுகிறது....அதே நேரம் காவிரியில் இருந்து கோடி கோடியாக செலவு செய்து தண்ணீர் பெங்களூருக்கு இழுத்து வருகிறார்கள்....எவ்வளவு கேவலமாக இருக்கிறது... அப்படியே வந்த காவிரி நீரை கார் அலம்ப உபயோகப்படுத்துகிறார்கள். இதையெல்லாம் கேட்க நாதியில்லை.

Rate this:
மேலும் 36 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X