பதிவு செய்த நாள் :
Cauvery Case, Karnataka Elections, Supreme Court ,காவிரி வழக்கு, மத்திய அரசு இழுத்தடிப்பு,  காவிரி நதி நீர் பங்கீடு , கர்நாடகா சட்டசபைத் தேர்தல், காவிரி வரைவு திட்டம்,  உச்ச நீதிமன்றம் உத்தரவு, காவிரி மேலாண்மை வாரியம், அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், 
Central Government , Cauvery River Water Distribution, Karnataka Legislative assembly Elections, Cauvery Draft Scheme, Supreme Court Order, Cauvery Management Board, Attorney General KK Venugopal,

புதுடில்லி : காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை, கர்நாடகா சட்டசபைத் தேர்தல் முடியும் வரை இழுத்தடிப்பதில் மத்திய அரசு வெற்றி பெற்று உள்ளது. இந்த வழக்கில், 14ல் வரைவு திட்டத்தை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், 'மத்திய நீர்வளத்துறை செயலர் நேரில் ஆஜராக வேண்டும்' என திட்டவட்டமாக கூறியுள்ளது. இந்த வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு நடந்ததாக தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்ட வாதம் எடுபடவில்லை.

Cauvery Case, Karnataka Elections, Supreme Court ,காவிரி வழக்கு, மத்திய அரசு இழுத்தடிப்பு,  காவிரி நதி நீர் பங்கீடு , கர்நாடகா சட்டசபைத் தேர்தல், காவிரி வரைவு திட்டம்,  உச்ச நீதிமன்றம் உத்தரவு, காவிரி மேலாண்மை வாரியம், அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், 
Central Government , Cauvery River Water Distribution, Karnataka Legislative assembly Elections, Cauvery Draft Scheme, Supreme Court Order, Cauvery Management Board, Attorney General KK Venugopal,

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, பிப்., 16ல் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகாவின் பிலிகுண்டுலு அணையில் இருந்து 177.25 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடக அரசு, தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும்.

இந்த பங்கீட்டை முறையாக அமல்படுத்தும் வகையில், மத்திய அரசு மார்ச், 31க்குள், 'ஸ்கீம்' எனப்படும் செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டும், மேலும் மூன்று மாத அவகாசம் கேட்டும், மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுக்களை கடந்த மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.

மே, 3ல், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால், 'கர்நாடகா சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியும், அமைச்சர்களும் ஈடுபட்டுள்ளதால், 10 நாள் அவகாசம் அளிக்க வேண்டும்' என்றார்.

Advertisement

இதனால் அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம், 8ம் தேதிக்குள் செயல் திட்டத்துடன் கூடிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.ஆனால், 7ம் தேதி உச்ச நீதிமன்றத்தை அணுகிய கர்நாடகா அரசு, புதிய மனுவை தாக்கல் செய்தது. அதில், 'தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீர் முறையாக திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் கர்நாடகா தரப்பில் தவறு இழைக்கப்படவில்லை' எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வழக்கை, மீண்டும் முதலில் இருந்து துவங்க விரும்பவில்லை. மத்திய நீர்வளத்துறை செயலர் 14ல், காவிரி மேலாண்மை வாரியத்துக்கான செயல் திட்டத்துடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அந்த உத்தரவில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக எதுவும் கூறப்படவில்லை. முன்னதாக, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிடுகையில், 'கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே கூடுதல் அவகாசம் கோரப்பட்டது' என்றார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நபாடே, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 'இது, நீதிமன்ற அவமதிப்பு. இதுதொடர்பாக, யாராவது ஒருவரை சிறையில் அடைத்தாக வேண்டும்' என அவர் குறிப்பிட்டார். இந்த வழக்கு 14ம் தேதி, மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தல் 12ல் நடக்கிறது. அதற்கு முன் காவிரி விவகாரத்தில் முடிவு எடுக்க விரும்பாத மத்திய அரசு, வழக்கை, 14 வரை இழுத்தடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு நடந்து உள்ளதாக, தமிழக அரசு கூறிய குற்றச்சாட்டை, உச்ச நீதிமன்றம் ஏற்காதது குறிப்பிடத்தக்கது.


Advertisement

வாசகர் கருத்து (108)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
10-மே-201812:06:00 IST Report Abuse

ரத்தினம்ஜைஹிந்த்ப்புறம் என்ற போர்வையில் மூர்க்கத்தனமாக வாதிடுபவரே, இப்போ காவிரி பேச எடுத்தா, கர்நாடக காங்கிரஸ் காரன், பிஜேபி காரன் முதற்கொண்டு எல்லா கட்சிக்காரனும் ஓட்டுக்காக பந்த் போராட்டம் நடத்துவான். ஏதோ உமக்கு மட்டும் தான் விவசாயம் தெரியுமா, எங்களுக்கு தெரியாதா என்ன? ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க காவிரியை தாரை வார்த்த உம் தலைவனை கேட்க துப்பில்லை. வருடக்கணக்காக ஆண்டும், பசையுள்ள கொள்ளைக்கு வாய்ப்பான மத்திய பதவிகளில் மட்டும் ஒட்டிக்கொண்டு தமிழகத்துக்கு ஒன்றும் செய்யாத, ஒரு தடுப்பணை கூட கட்டாமல் மணலை கொள்ளை அடித்த உமது கொள்ளை கும்பலை சப்போர்ட் செய்வது வெட்கமாக இல்லை? தைரியம் இருந்தால் அழிச்சாட்டியம் செய்யும் உமது கூட்டாளி சித்த ராமய்யா விடம் கெஞ்சியோ, இல்லை பயமுறுத்தியோ பார்க்கலாமே. அப்படி செய்தால் கர்நாடகத்தில் உள்ள எல்லா குடும்ப பிஸினஸையும் முடக்கி விடுவார்கள் என்று பயம். எல்லா மாநிலங்களும் ஓரளவு ஆதரவு கொடுத்தால், நீண்ட தொலை நோக்கு பார்வையில் மோடியின் தலைமையில் நதி நீர் இணைப்பு திட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. திரும்ப திமுக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்ததால் ஏதாவது பிரச்சனையை சொல்லியே ஓட்டிவிடலாம் என்று ஒன்றும் செய்ய மாட்டார்கள், செய்யவும் விடமாட்டார்கள்.

Rate this:
Sampath Kumar - chennai,இந்தியா
10-மே-201810:07:26 IST Report Abuse

Sampath Kumarஉங்க நீதி மன்றத்தில் இருந்து வேற என்ன எதிர் பார்க்க முடியும் ??? இதில் சாதனை என்று வேறு பிதற்றல் ??

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
10-மே-201807:22:32 IST Report Abuse

தேச நேசன் சோனியா கோவா பிரச்சாரத்தில் மகதாயி நீரை கர்நாடகாவுக்கு கொடுக்கமாட்டோம் என பிரச்சாரம் செய்தார் . இப்போது காவிரி நீரை தமிழகத்துக்குக் கொடுக்கவேமாட்டோம் என கர்நாடக காங்கிரஸ் அறிவித்து பிரச்சாரம் செய்கிறது . இது பாரம்பரியமிக்க கட்சியின் இன்றைய நிலை

Rate this:
மேலும் 105 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X