ராகுலை மக்கள் ஏற்க மாட்டார்கள்: பிரதமர்

Added : மே 09, 2018 | கருத்துகள் (145)
Advertisement
கர்நாடக தேர்தல், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்,மோடி தேர்தல் பிரசாரம், ராகுல் தேர்தல் பிரசாரம்,   ராகுல் பேச்சு, மோடி பேச்சு, 
Karnataka election, Prime Minister Modi, Congress leader Rahul,
Modi election campaign, Rahul election campaign, Rahul speech, Modi speech,

பங்காரப்பேட்டை: பிரதமர் பதவியை ஏற்க தயார் எனக்கூறியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுலை மக்கள் ஏற்க மாட்டார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தோல்வி மேல் தோல்வி


கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பங்காரப்பேட்டையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி பேசியதாவது: ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவி வருகிறது. இதனை உத்தரகண்டிலும், உத்தர பிரதேசத்திலும் பார்த்துள்ளோம் கர்நாடகாவை விட்டு வெளியேறும் நேரமும் அக்கட்சிக்கு வந்துவிட்டது. மாநிலத்தில் காங்கிரசை வழியனுப்ப மக்கள் தயாராக உள்ளனர் அக்கட்சியின் உண்மை முகத்தை மக்கள் தெரிந்து கொண்டுள்ளர். இதனால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.


6 நோய்கள்:

அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்திற்கு என்ன தேவை என்பதை நிர்ணயிக்கும் தேர்தல் இது. பல மாநிலங்களை காங்கிரஸ் சீரழித்து வந்தது, ஜனநாயகத்தின் உயிர்நாடியையும் சிதைத்துவிட்டது. 6 நோய்களால் காங்கிரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. ஜாதி, ஊழல், கிரிமினல், ஊழல், ஒப்பந்தமுறை, வகுப்புவாதம் என்ற நோயால் காங்கிரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களை ஏமாற்றுவதற்கான உரிமை உள்ளதாக காங்கிரஸ் நினைத்து கொண்டுள்ளது. அக்கட்சியின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. மன்மோகன் பிரதமராக இருந்தாலும், ரிமோட் சோனியாவிடம் இருந்தது. ஆனால், எனது ரிமோட் மக்களிடம் உள்ளது. பெண்கள் பாதுகாப்பில் காங்கிரசுக்கு அக்கறையில்லை. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஊழல் நிறைந்துள்ளது. பா.ஜ., ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏசி அறையில் அமர்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியால், உங்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ள முடியாது.


அவமரியாதை

பிரதமராக பதவியேற்பேன் என்ற ராகுலின் பேச்சு ஆணவத்தின் வெளிப்பாடு. தனக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது போல் கூறியுள்ளார். இதன் மூலம் கூட்டணி கட்சி தலைவர்களையும், மூத்த தலைவர்களையும் அவமானபடுத்தியுள்ளார். மூத்த தலைவர்களை மதிக்கும் பழக்கம் அவருக்கு கிடையாது. அரசியலில் அவருக்கு இன்னும் முதிர்ச்சி ஏற்படவில்லை. அவரை, மக்கள் ஏற்க மாட்டார்கள். பார்லிமென்டை இயங்க காங்கிரஸ் அனுமதித்தது இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (145)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramakrishnan Natesan - BANGALORE,,இந்தியா
09-மே-201820:21:58 IST Report Abuse
Ramakrishnan Natesan நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையினை இருட்டடிப்பு செய்தால் சர்வாதிகாரத்துக்கே வழிவகுக்கும்: எச்பிவி வாக்சைன் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
09-மே-201820:14:42 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN உண்மைதான் பிரதமர் அவர்களே. காங்கிரஸ் ஆண்ட நிர்வாகத்தை பார்த்து விட்டுதான் வெறுத்துபோய் தங்களை ஆதரித்துள்ளனர் அதுதெரியாமல் உம்மிடம் சவால் விடுகிறார் >>.ஊழல் பெருச்சாலிகளை ஒழித்துகட்டுங்கள் . மக்களுக்காக பாடுபடுங்கள். ஊழலை வேரறுத்து போடுங்கள் நாடு நலம் பெறும் நல்லதே நடக்கும் .
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
15-மே-201806:22:47 IST Report Abuse
Anandanஇவருக்கு இன்னும் ராகுல் மேல் பயம் இருப்பதைத்தான் இவர் பேச்சுகள் காட்டுகின்றன. இவரையும் நம்பும் அடிமைகள் இருக்கும் வரை இப்படி வாயில் வடைசுட்டு காலத்தை ஓட்டுவார்....
Rate this:
Share this comment
Cancel
09-மே-201818:41:08 IST Report Abuse
ரபேல் ஊழல் நாயகன் மோடி: Welcome Rahul as Prime Minster
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X