நதிகள் இணைப்பு என் வாழ்நாள் கனவு: ரஜினி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நதிகள் இணைப்பு என் வாழ்நாள் கனவு: ரஜினி

Updated : மே 10, 2018 | Added : மே 09, 2018 | கருத்துகள் (116)
Advertisement
நதிகள் இணைப்பு,வாழ்நாள் கனவு,Rajini,Rajinikanth,ரஜினி,ரஜினிகாந்த்

சென்னை : ''கடவுள் ஆசியோடு, மக்கள் ஆதரவோடு, தமிழக மக்களுக்கு, நல்ல நேரம் பிறக்கும்,'' என, நடிகர் ரஜினி, காலா பட விழாவில் பேசினார்.

காலா பட பாடல் வெளியீட்டு விழா, சென்னையில், நேற்று(மே 9) நடந்தது. அதில், ரஜினி பேசியதாவது: சிவாஜி பட வெற்றி விழாவிற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி வந்து கவுரவித்தார். அவர் பேசியதை என்றும் மறக்க முடியாது.


நதிகள் இணைப்பு:

அவருடைய குரலை கேட்க வேண்டும் என, கோடிக்கணக்கான மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்; கூடிய விரைவில் கேட்கும் என, நம்புகிறேன். நான் இமயமலைக்கு செல்வது, கங்கையை பார்க்க தான். சில இடங்களில், ஆக்ரோஷமாக வரும்; சில இடங்களில் அமைதியாக ஓடும். நதிகள் இணைப்பு, என் வாழ்க்கையின் ஒரே கனவு. தென்னிந்திய நதிகளை இணைத்த பின், அடுத்த நாளே, நான் கண்ணை மூடினால் சந்தோஷப்படுவேன்.

ரொம்ப நல்லவனாக இருக்கக் கூடாது. அது, படத்திலும் சரி; வாழ்க்கையிலும் சரி. ரொம்ப நல்லவனாக இருந்தால், கோழை என நினைக்கின்றனர். 'ரஜினி கதை முடிந்து போச்சு' என, 40 ஆண்டுகளாக கூறி வருகின்றனர். அவர்களை தப்பு கூற விரும்பவில்லை. 'இந்த குதிரை ஓடிக் கொண்டே இருக்கு' என்பதால் பொறாமை; வயிறு எரியத்தான் செய்யும். நான் ஓடவில்லை; நீங்கள் ஓட வைக்கிறீர்கள்; ஆண்டவன் ஓட வைக்கிறான். யார் என்ன கூறினாலும், என் வழியில் போய் கொண்டே இருப்பேன்.

காலா அரசியல் படம் கிடையாது; ஆனால், அரசியல் உள்ளது. இப்படத்தின் இயக்குனர் ரஞ்சித், பெரிய ஆளாக வருவார். தன்னை சேர்ந்த சமூகம், நண்பர்கள் என, அனைவரையும் மேலே கொண்டு வர வேண்டும் என்ற, எண்ணம் கொண்டவர். ஒரு மரம் வளர, மண், உரம், தண்ணீர் தேவை. அதேபோல், நாம் வளர, நல்ல யோசனை வேண்டும். ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு வழி கொடுங்கள். மோசமான சிந்தனை வந்தால், நல்ல சிந்தனையாக மாற்றுங்கள்.


கடமை உள்ளது:

மோசமான சிந்தனை வந்தால், உட்கார்ந்து விடுவோம். சந்தோஷமான சிந்தனை வந்தால், துள்ளி குதிப்போம். நல்ல விஷயங்களை சிந்தியுங்கள். வாழ்க்கை நன்றாக இருக்கும்.

நான் இன்னும், 'மேட்டருக்கு' வரவில்லை என, பத்திரிகையாளர்கள் நினைக்கின்றனர். நான் என்ன செய்வது; இன்னும், அந்த தேதி வரவில்லை. கடமை உள்ளது. நேரம் வரும். கடவுள் ஆசியோடு, மக்கள் ஆதரவோடு, தமிழக மக்களுக்கு நல்ல நேரம் பிறக்கும். இவ்வாறு ரஜினி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (116)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatesan Perumal - Chennai,இந்தியா
10-மே-201811:55:55 IST Report Abuse
Venkatesan Perumal ஒன்னுமில்லை இப்போதைக்கு காலா படம் ஓடனும்...
Rate this:
Share this comment
Cancel
Venkatesan Perumal - Chennai,இந்தியா
10-மே-201811:55:14 IST Report Abuse
Venkatesan Perumal ஒன்னுமில்லை இப்போதைக்கு காலா படம் ஓடனும்...
Rate this:
Share this comment
Cancel
Nandhu - pammal, chennai,இந்தியா
10-மே-201811:26:22 IST Report Abuse
Nandhu கனவெல்லாம் நல்லாவே இருக்கு ஆனா இது எல்லாம் சினிமாவிலே சாத்தியம். நிஜத்தில் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X