கமிஷன் அமைக்க கவர்னருக்கு அதிகாரம் உண்டு: ஐகோர்ட் Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கமிஷன் அமைக்க கவர்னருக்கு
அதிகாரம் உண்டு: ஐகோர்ட்

மதுரை : பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், சந்தானம் கமிஷன் விசாரணைக்கு தடை கோரிய வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பைசல் செய்தது.

கமிஷன் அமைக்க,கவர்னருக்கு அதிகாரம்,ஐகோர்ட்,Governor,ஆளுநர்,கவர்னர்


மதுரை, வழக்கறிஞர் செல்வகோமதி தாக்கல் செய்த மனு: மாணவியரை தவறான பாதைக்கு அழைத்ததாக, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லுாரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி கைதானார். விசாரிக்க, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தானத்தை, மதுரை காமராஜர்

பல்கலை வேந்தர் பொறுப்பில் இருக்கும் கவர்னர் நியமித்தார்.

சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இரு வேறு விசாரணைகள், குழப்பம் ஏற்படுத்தும். சந்தானம் விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும். பணிபுரியும் இடங்களில், பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் சட்டப்படி, உள்ளூர்புகார் குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.

நீதிபதிகள், எம்.கோவிந்தராஜ், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு: கமிஷன் அமைக்க,கவர்னருக்கு அதிகாரம் உள்ளது.

மனுதாரர் வழக்கறிஞர்: பல்கலை சட்டப்படி கவர்னருக்கு அதிகாரம் இல்லை. செனட், சிண்டிகேட்,துணைவேந்தருக்கு அதிகாரம் உள்ளது.

Advertisementநீதிபதிகள்: மனுவை வாபஸ் பெறுங்கள். உள் விசாரணைக் குழுவிற்கு பதிலாக, உள்ளூர் புகார் குழு விசாரணை கோரும் வகையில் திருத்த, மனு செய்யலாம்.

வாபஸ் பெற மனுதாரர் வழக்கறிஞர் மறுத்தார். மனுவை, நீதிபதிகள் பைசல் செய்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-மே-201813:18:15 IST Report Abuse

Malick Rajaஉலகமே காரி உமிழ்த்தாலும் அதை வாசனை திரவியமாக நினைப்பவர்களுக்கு காலம் நீதமாக தீர்ப்பளிக்கும் .. அரசன் அன்று கொள்ளும் .. தெய்வம் நின்றுகொள்ளும்

Rate this:
a natanasabapathy - vadalur,இந்தியா
10-மே-201819:14:02 IST Report Abuse

a natanasabapathyIvanka theerppai padikkum namakku mudiyai piythu kolla thonukirathu commission amarika governarukku adhikatam ullathu yenru oru theerppu mudivai veliyidakkoodaathu yenru martoru theerppu mandai kaainthu vidukirathu

Rate this:
மணிமாறன் - trichy,இந்தியா
10-மே-201816:50:56 IST Report Abuse

மணிமாறன்இன்னுமாடா இந்த நீதி மன்றங்களை எல்லாம் நம்புகிறீர்கள்..அவை எல்லாம் பெரிய மனுஷாளுக்கு தான்... சாதாரண மக்களுக்கு இல்லை..சாதாரண மக்கள் எல்லாம் போய் வோட்டு போடுவது நிறுத்தி கொள்ள வேண்டும்.. நீதி எல்லாம் இந்த ஜனநாயகத்தில் எதி பார்க்க கூடாது..அதுவும் நீதி மன்றத்தில்..

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X