130 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி: அமித் ஷா கணிப்பு

Added : மே 10, 2018 | கருத்துகள் (66) | |
Advertisement
பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ., 130 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என அக்கட்சி தலைவர் அமித் ஷா கூறினார்.சட்டம் ஒழுங்கு மோசம்பெங்களூருவில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. இங்கு மட்டும் பா.ஜ., மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த 24 பேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இதனை அரசியலின் ஒரு
பா.ஜ., அமித்ஷா, காங்கிரஸ், எடியூரப்பா,

பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ., 130 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என அக்கட்சி தலைவர் அமித் ஷா கூறினார்.


சட்டம் ஒழுங்கு மோசம்



பெங்களூருவில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. இங்கு மட்டும் பா.ஜ., மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த 24 பேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இதனை அரசியலின் ஒரு பகுதியாக காங்கிரஸ் கருதுகிறது. ஆனால், குற்றவாளிகளை பிடிக்க எந்த முயற்சியும் நடக்கவில்லை.ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில், இங்கு வெற்றி பெற காங்கிரஸ் முயற்சி செய்கிறது. போலி அடையாள அட்டை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பது தெரிய வரும். போலி வாக்காளர் அட்டை தயாரித்தவர்கள், காங்கிரசின் சதியில் விழுந்து விடக்கூடாது.


ஆட்சி உறுதி



130 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியமைக்கும். யாருடைய தயவும் தேவைப்படாது. இதற்கான கேள்வியே எழுவில்லை. மே 15ல் எடியூரப்பா அரசு அமைவது உறுதி செய்யப்படும்.தேர்தலில் தோற்கலாம். ஆனால் சமூக ஜனநாயக கட்சி மற்றும் பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியாவுடன் இணைந்து செயல்பட முடியாது. இரு கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் ஏற்று கொண்டுள்ளது. இது பா.ஜ., மற்றும் காங்கிரசுக்கு இடையில் உள்ள வித்தியாசம். துரோகிகளின் ஆதரவை பெறுவதில் காங்கிரசால் விலகியிருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jai Hinth - chennai,இந்தியா
11-மே-201813:53:34 IST Report Abuse
Jai Hinth 130 தொகுதி ஒட்டு மெஷின்களை மட்டும் சரிபடுத்திருப்பார்கள் எல்லாவற்றிலும் திருட்டு வேலை செய்தால் சந்தேகம் வந்துவிடும் இந்த பொறுப்பை இவரிடம் தான் ஒப்படைக்கப்பட்டிருக்கும் அதுதான் சரியாக சொல்கிறார்
Rate this:
Cancel
Snake Babu - Salem,இந்தியா
11-மே-201813:40:00 IST Report Abuse
Snake Babu அப்புறம் ஏன் பாஜக வின் 90 சதவிகித பெருந்தலைகள் கர்நாடகாவில் சுற்றி சுழன்று போராடினீர்கள் ?
Rate this:
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
11-மே-201811:13:09 IST Report Abuse
GB.ரிஸ்வான் யாரிடம் இருந்து வெற்றி... நோட்டாவிடம் இருந்து தானே..... அது கூட சந்தேகம் தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X