சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கோவை குட்கா ஆலை உரிமம் ரத்து;
உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை

கோவை : கோவை குட்கா தயாரிப்பு தொழிற்சாலையில், போலீசார் சோதனை நடத்தி, 'சீல்' வைத்ததால், அதற்கான உரிமத்தை உணவு பாதுகாப்பு துறையினர் ரத்து செய்தனர்.

கோவை,குட்கா ஆலை,உரிமம் ரத்து,உணவு பாதுகாப்பு துறை,நடவடிக்கை

கோவை, சூலுார், கண்ணம்பாளையத்தில் செயல்பட்டு வந்த சட்டவிரோத குட்கா தயாரிப்பு தொழிற்சாலையை, ஏப்., 27ல் போலீசார் கண்டுபிடித்தனர். அங்கிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா, பான்மசாலா, மூலப்பொருட்களை பறிமுதல் செய்து, 'சீல்' வைத்தனர். இந்த தொழிற்சாலையில், வாசனை பாக்கு தயாரிப்பதாக சொல்லி உணவு பாதுகாப்பு துறையிடம் அனுமதி வாங்கியிருந்தனர். இந்த ஆலைக்கான அனுமதி, ஜூலை மாதம் வரை இருப்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

கடந்த ஜன., மாதம் இந்த ஆலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது சந்தேகத்துக்கிடமான

பொருட்கள் எதுவும் இல்லை என்று சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதற்கிடையே, போலீசார் நடத்திய சோதனையில் அங்கு குட்கா, பான்மசாலா பொருட்களும், அவற்றை தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களும் அதிகளவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனையின்போது, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளை, போலீசார் வரவழைத்து ஆய்வு நடத்தினர். அப்போது, அங்கு குட்கா தயாரிப்பதை உறுதிப்படுத்தி பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் தொடர்ச்சியாக, குட்கா தொழிற்சாலை நிர்வாகத்துக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில், ஒரு விளக்க 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. இந்த நோட்டீசுக்கு தொழிற்சாலை தரப்பில் இருந்து எந்த பதிலும் தரவில்லை. இதையடுத்து தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை ரத்து செய்து, உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தி.மு.க., பிரமுகர் கைது :


தொழிற்சாலை மேலாளர் ரகுராமனை போலீசார் ஐந்து நாள் 'கஸ்டடி' எடுத்து விசாரித்தனர். விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்களை அவர் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார். அப்போது, தொழிற்சாலை உரிமையாளர், தி.மு.க.,வை சேர்ந்த தளபதி முருகேசனுக்கு பல லட்சம் ரூபாய் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார்.

Advertisement

இதன் அடிப்படையில், சென்னையில் இருந்த கண்ணம்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் தளபதி முருகேசனை கோவை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் சட்டவிரோத குட்கா தொழிற்சாலை இயங்க காரணமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

'மாமூல்' அதிகாரிகள் கலக்கம்!

இந்த தொழிற்சாலை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்துள்ளது. இங்கு தயாரிக்கப்பட்ட பொருட்கள், பல்வேறு இடங்களுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளது. இதற்காக சில அதிகாரிகளுக்கு மாமூல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து உணவு பாதுகாப்பு துறையில், துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால், 'மாமூல்' பெற்ற அதிகாரிகள் கலக்கமடைந்து உள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilReader - Dindigul,இந்தியா
11-மே-201818:19:11 IST Report Abuse

TamilReaderபல லட்சம் வாங்கிய திமுக நபரை உடனே கைது செய்த போலீஸ், ஏன் பல கோடிகள் வாங்கிய DGP மற்றும் டெங்கு மந்திரியை இன்னும் கைது செய்ய வில்லை இந்த தொழிற்சாலை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்துள்ளது. அப்படி என்றால் இந்த கூவத்தூர் அதிமுக அரசு இந்த ஆறு ஆண்டுகளா என்ன பண்ணிக்கொண்டு இருந்தது?

Rate this:
Nandhu - pammal, chennai,இந்தியா
11-மே-201818:11:37 IST Report Abuse

Nandhuசீல் வைக்கிறதுக்கு முன்னாடியே இவங்க கம்பனியை வேற இடத்துக்கு மாத்திட்டாங்களா ?

Rate this:
kalyanasundaram - ottawa,கனடா
11-மே-201816:16:46 IST Report Abuse

kalyanasundaramENFORCE ISLAMIC LAWS FOR PUNISHING CULPRITS WHOM SO EVER IT MAY BE.

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X