வேலுார்:வேலுார் அருகே, அணைக்கட்டு அடுத்த, வேலங்காடு பொற்கொடியம்மன் திருவிழா, நேற்று முன்தினம் துவங்கி, நாளை வரை நடக்கிறது.நேற்று தேர்த்திருவிழா நடந்தது. கூட்ட
நெரிசலைப் பயன்படுத்தி, 22 பேரிடம், மொத்தம் 28 சவரன் நகையை, மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். அனைவரும் அளித்த புகாரையடுத்து, அணைக்கட்டு போலீசார், மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement